Friday, June 14, 2024
Homeமுருகன் ஆலயங்கள்முன்னூர் முருகன்

முன்னூர் முருகன்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

முன்னுக்கு வர செய்வார்-முன்னூர் முருகன்


சோழவள நாட்டின் வடக்குப் பகுதியின் எல்லையாக விளங்கியது ஒய்மாநாடு. நீர்வளமும் நிலவளமும் தன்னகத்தே கொண்ட ஒய்மா நாட்டில் கிடங்கல் என்னும் கோட்டையிலிருந்து சீரோடும் சிறப்போடும் ஆட்சி நடத்தினான் மன்னன் நல்லியக்கோடன். முருகா முருகா என்று அனுதினமும் உருகக் கூடிய சிறந்த முருக பக்தன் இந்த மன்னன்.

சங்க நூல்களில் ஒன்றான பத்துப்பாட்டில் நல்லூர் நத்தத்தனார் இயற்றிய சிறுபாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவனான நல்லியக்கோடன் ஓவியார் குடியில் பிறந்த உத்தமன்.உயிர்த்துடிப்புடன் கூடிய அழகான ஓவியங்கள் தீட்டுவதில் வல்லவனான நல்லியக்கோடன் கடையெழு வள்ளல்களான பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி ஆகியோரின் கொடைத் திறனையும் ஒருங்கே பெற்றிருந்தான். அதனால் ஒய்மா நாட்டு மக்கள் நல்லியக்கோடனின் நல்லாட்சியால் அனைத்து நலன்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இடைக்கழிநாடு, எயிற்பட்டினம்(தற்போதைய மரக்காணம்), உப்புவேலூர், மாவிலங்கை, ஆமூர், மூதூர்(தற்போதைய முன்னூர்) ஆகிய ஊர்கள் இம் மன்னனின் ஆட்சி எல்லைக்குள் அமைந்திருந்தன.

சிறந்த வெற்றி வீரனான மன்னன் நல்லியக்கோடனின் மங்காப் புகழ் கண்டு பொறாமை கொண்ட தொண்டை நாட்டு மன்னன் ஒய்மா நாட்டின் மீது படையெடுத்து வந்தான். கந்தப் பெருமானை வணங்கி போருக்குச் சென்ற நல்லியக்கோடன் தொண்டை நாட்டு மன்னனை போரில் வென்றான். பின்னர், சேரன் ஒய்மா நாட்டின் மீது படையெடுத்து வந்தான். உற்சாகத்துடன் போராடி சேரனையும் வென்றான் நல்லியக் கோடன். எப்படியும் நல்லியக் கோடனை வென்றே தீருவேன் என்று போர் தொடுத்த சோழ மன்னனாலும் நல்லியக் கோடனை தோற்கடிக்க இயலவில்லை. நல்லியக்கோடனை போரில் வீழ்த்த வேண்டும் என்று உறுதி பூண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களான மூவேந்தர்களும் கூட்டணி அமைத்து ஒய்மா நாட்டின் மீது போர் தொடுத்தனர்.

முன்னூர்முருகன்
முன்னூர்முருகன்

மூவேந்தர்களின் படை ஒய்மா நாட்டினைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டன. நயவஞ்சகம் படைத்த ஒய்மா நாட்டின் அமைச்சன் ஒருவன் பொன்னுக்கும் பொருளுக்கும் மயங்கி விலையாகி எதிரிப் படையுடன் சேர்ந்த தகவலும் நல்லியக்கோடனை வந்தடைந்தது. மன்னன் நல்லியக்கோடன் அப்போது வேலூரில் முகாமிட்டு மக்களின் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். கடல் அலை போல திரண்ட பகைவர் சேனையைக் கண்டு பிரமித்துப் போனான் நல்லியக்கோடன். மூவேந்தர்களின் படையையும் ஒரே சமயத்தில் எதிர்கொள்ளும் ஆற்றலோ படைத்திறனோ தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த நல்லியக்கோடன் இனி முருகப் பெருமான் தான் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்து முன்னூர் தலத்தில் அருள் பாலிக்கும் முருகன் ஆலயம் நோக்கிச் சென்றான்.

முருகப் பெருமானின் திருச் சந்நிதியின் முன் கண்களில் நீர் மல்க தனக்கு ஏற்பட்ட சோதனையைத் தீர்த்தருள மனமுருகி வேண்டினான்! வள்ளி மணவாளா!! உள்ளத் துயரையொழிக்கும் உயர் குணக் குன்றே!என்னிடரைத் தீராயேல் இன்னுயிர் துறப்பேன் ” என்று கதறினான். மயில் வாகன மூர்த்தியை இரவெல்லாம் பூஜித்தான்.

நான்காவது ஜாமத்தில் உடல் சோர்வு காரணமாக சற்றே கண்ணயர்ந்தான் மன்னன்.

மன்னனின் கனவில் ஜோதிஸ்வரூபனாகத் தோன்றிய முருகப்பெருமான், “அன்பனே! அஞ்சற்க.உன் பக்திக்கும் தன்னலமற்ற சேவைக்கும் மெச்சியே உன்னைக் காண வந்தேன்.பகைவர் சூழ்ந்துள்ள இடத்தின் அருகில் உள்ள ஏரியில் பூத்திருக்கும் தாமரை மலர்களைத் தண்டுடன் பறித்து எதிரிகளின் மீது எறிவாயாக! அவை வேற்படையாக மாறி உனக்கு வெற்றியை நல்கும்” என்று அசரீரியாக திருவுள்ளம் மகிழ்ந்தார்.

சட்டென்று விழித்து எழுந்த மன்னன் நெக்குருகிப் போனான். ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்து, நீராடி, திருநீறு தரித்து, சுப்ரமண்ய காயத்ரியை ஜபித்து போருக்குப் புறப்பட்டான். ஏரியில் உள்ள தாமரை மொட்டுகளை தன் சேனைகளின் உதவியுடன் பறித்து வேற்படையாகப் பாவித்து எயிற்பட்டினம் (மரக்காணம்), ஆமூர், மூதூர் (முன்னூர்) என்னும் நகரங்களை வளைத்துள்ள பகைவர் மீது ஏவினான். நாண் ஏந்தியது போல் வேகமாகப் புறப்பட்ட தாமரை மொட்டுகள் அணிவகுத்திருந்த யானைப் படைகளின் அருகே சென்று விழுந்தன. அரைத்தூக்கத்தில் இருந்த யானைகள் தங்கள் மேல் விழுந்த தாமரை மொட்டுகளை தும்பிக்கையால் எடுத்து இதழ்களைப் பிரித்தன.அப்போது மூடிய தாமரை மொட்டுகளில் இருந்து வெளிப்பட்ட தேனீக்களும் வண்டுகளும் யானையின் துதிக்கையினுள் சென்று கொட்டின. அங்கேயே சுற்றி சுற்றி ரீங்காரமிட்டு மீண்டும் மீண்டும் யானைகளைத் துன்புறுத்தின.

முன்னூர்முருகன்
முன்னூர்முருகன்

வலியைத் தாங்க இயலாத யானைகள் மதம் கொண்டு படைவீரர்களை மிதித்து துவம்சம் செய்தன. செய்வதறியாது திகைத்த வீரர்கள் தப்பித்தால் போதும் என புறமுதுகிட்டு ஓடினார்கள்.

தாமரை மொட்டுகள் தனி வேலாகி பகைவரை வதம் செய்ததால் போர் நடந்த இப்பகுதி “ஒப்பிலா வேலூர்” என வணங்கப்பட்டு தற்போது “உப்பு வேலூர்” என வணங்கப் படுகிறது. போர்ப் படைகள் செய்ய முடியாததை முருகனின் வேற்படை செய்து முடிக்க தனக்கு அருள்பாலித்த முன்னூர் முருகவேளுக்கு நித்திய நைமித்திக வழிபாடு செய்து நிவந்தங்கள் அளித்தான் மன்னன்.

சங்க காலத்தில் “மூதூர்” என்று வணங்கப்பட்ட இத்தலம் தற்போது மருவி “முன்னூர்” என்று பூஜிக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள ஸ்ரீபிரகன்நாயகி சமேத ஸ்ரீஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில்

மன்னன் நல்லியக்கோடன் வழிபட்ட முருகன் ஸ்ரீசிவ சுப்ரமண்ய பெருமானாக ஆறுமுகமும் பனிரெண்டு திருக்கரங்களோடும் ஆயுதங்கள் தாங்கி வள்ளி, தேவசேனா சமேதராக அற்புதத் திருக்காட்சி தருகின்றார்.

முருகா என்ற நாமம் கோடி நாமங்களுக்குச் சமமானது. பிற தெய்வங்களின் நாமங்களைக் கோடி முறை சொல்வதால் என்ன நன்மைகள் நமக்கு ஏற்படுமோ, அத்தனை நன்மைகளையும் “முருகா” என்று பக்தியோடு ஒரு முறை சொன்னாலே நாம் பெற்று விடுவோம். இதனால் தான் திருப்புகழ் பாடிய அருணகிரி நாதப் பெருமான் “மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் “என்று செவ்வேட் பரமனின் திருநாமத்தைப் பன்மையில் பாடி நெகிழ்ந்துள்ளார்.

மன்னன் நல்லியக்கோடன் வழிபட்ட முன்னூர் முருகப் பெருமானை வழிபட்டு எல்லா வளங்களையும் பெற்று ஏற்றம் பெறுவோம்.

திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி.மீ.தூரத்தில் உள்ள ஆலங்குப்பத்திலிருந்து தெற்கே 3கி.மீ.தூரத்தில் உள்ளது முன்னூர்.

Google Map :

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்97குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20அற்புத ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular