ராசி | பலன் |
மேஷம்  | இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். மொத்தத்தில் இது ஒரு சுமாரான நாளே. |
ரிஷபம்  | புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள். |
மிதுனம்  | புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கனவு நனவாகும் நாள். |
கடகம்  | இன்று சிலருக்கு உணவு ரீதியாக சில உபாதைகள் ஏற்பட இடம் உண்டு. உங்கள் தேவைகள் இறுதியில் நிறைவேறும். நிதானமாக செயல்பட்டு வெற்றி அடைய வேண்டிய நாள் இது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருந்து கொள்ளுங்கள். உத்யோகத்தில் வேலை பளு சற்று அதிகமாக இருக்கும் தான். எனினும் அவற்றை எல்லாம் நீங்கள் சமாளித்து வெற்றி அடைவீர்கள். |
சிம்மம்  | இன்றைய தினத்தில் சிலருக்கு சுப காரிய பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆகும். திருமணம் ஆனவர்கள், இல்வாழ்க்கை சிறக்க அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளிடம் கவனமாக பேசுங்கள். சிலர் நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ள நேரிடலாம். எனினும் முயற்சியால் வெல்லும் நல்ல நாள்…இந்த நாள். |
கன்னி  | .எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். |
துலாம்  | தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.
|
விருச்சிகம்  | புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நிதானம் தேவைப்படும் நாள். |
தனுசு | இந்த நாள் முயற்சிகளுக்கு உரிய நல்ல பலனை தரும் நல்ல நாள். தனலாபம், எதிரிகளை வெல்லும் ஆற்றல் என அனைத்தும் இந்த நாளில் சித்திக்கும். சமூகத்தில் கூட உங்களது மதிப்பு உயரும். எதிர்ப்புகள் இருந்தாலும் கூட அதனை முறி அடித்து வெற்றி பெரும் தினம் இன்று. மொத்தத்தில் சோதனைகளை சாதனைகளாக மாற்றி வெல்வீர்கள். |
மகரம் | குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்று மதத்தவர் நட்பு சிலருக்கு நன்மை செய்யும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். |
கும்பம் | கம்பீரமாக பேசி சில காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள். |
மீனம் | குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். |