Thursday, March 30, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்பரணி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் பலன் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

பரணி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் பலன் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

ASTRO SIVA

google news astrosiva

பரணி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

 •  பரணி 2 ஆம் பாதத்தில் பிறந்தவன் நவாம்சம் புதன் உடையது.
 • இதில் பிறந்தவன் மந்திர சாஸ்திரம் வேதம் இவைகளை கற்பான்.
 • இவனுக்கு பெண்களால் அதிக சுகமுண்டு.
 • இவனுக்கு பிறரை பற்றி அழகான பலன் சொல்ல தோன்றும் (சோதிடம் கற்பான்)
 • எல்லா திக்கும் புகழ் பெற்று வாழ்வான் ,
 • பொய் சொல்லாதவன்,
 • நிறைய செல்வம் கொழிக்க வாழ்வாரன் ,
 • நிறைந்த புத்திசாலியகி அறிவாளிகளில் பெரியவனாக இருப்பான்.

பரணி 2ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்

பரணி 2ம் பாதத்தில் சூரியன் நின்றால் :

 •  இவன் மிகவும் மகிழ்ச்சியாகவும் ,திருப்தியாகவும் இருக்கும் .
 • தன் பெண்கள் ,பிள்ளைகள் மூலம் நல்ல சுகம் அனுபவிப்பான்

பரணி 2ம் பாதத்தில் சந்திரன் நின்றால் :

 • பெரும்பாலான வயது காலம் மகிழ்ச்சியாக இருப்பான்.
 • இவன் தாய் வழி பாட்டன் மூலம் பணம் பெறுவான்.
 • நல்ல கல்வி உண்டு.
 • நிறைய படித்தவர்களுடன் பழகும் வாய்ப்பும் ஏற்படும்

பரணி 2ம் பாதத்தில் செவ்வாய் நின்றால் :

 • பலகீனமான உடல் உள்ளவன்.
 • வெண்புள்ளி நோய் காணலாம்,தோல் நோய்கள் வரலாம்.
 • இருப்பினும் இவன் வெகு அறிவாளி.
 • கடின உழைப்பாளி
 • கல்வியில் கௌரவப் பட்டம் முதலியவை கிடைக்கும்
 • பல பெண்களிடம் தொடர்பு உள்ளவன், இதனால் பலவித பால்வினை நோய்கள் காணும்
 • விளையாட்டு வீரனாகவும் எவர்சில்வர் வியாபாரம் முதலியவற்றாலும் சம்பாத்தியம் உண்டு.
Maharani Goddess Lakshmi Mata Download Photo பரணி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் பலன் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்
பரணி 2ம் பாதம்

பரணி 2ம் பாதத்தில் புதன் நின்றால் :

 • மத்திம ஆயுள் 50முதல் 60 வரை உள்ளவன் .
 • பல காரியங்களில் ஒரே சமயத்தில் ஈடுபட்டு எதிலும் பயன் ,வெற்றி அடைய மாட்டான்.
 • தகப்பனுடன் ஐக்கியம் கிடையாது.
 • பிறரிடம் பாசமுடன் நடப்பவன்.
 • தன்னை அண்டியவர்களுக்கு முடிந்த உதவியை செய்பவன்

பரணி 2ம் பாதத்தில் குரு நின்றால் :

 • நிறைய குழந்தை செல்வம் மற்றும் பேரப் பிள்ளைகளும் உண்டு.
 • 50வயது வரை மத்திம ஆயுள்
 • கொலை, கொள்ளை போன்றவற்றில் வழக்கறிஞானம் , திறமை உண்டு.
 • சமயபற்றுள்ளவன்,
 • பண்ணை ,பயிர், நிலம், வீடு விற்பனை போன்றவற்றால் சம்பாதிப்பான்.

பரணி 2ம் பாதத்தில் சுக்கிரன் நின்றால் :

 • பிற பெண்கள் பின்னால் அலைந்து திரிபவன்,
 • இவன் ஜனன உறுப்பு நோயால் பாதிக்க படுவான்
 • கண்பார்வை குறைவு,
 • பிள்ளைப்பேறு, மருத்துவம் செய்வதால் ஆதாயம் உண்டு.
 • கண்களுக்கு மேல் புருவம் அல்லது நெற்றியில் காயம் ஏற்படும்

 பரணி 2ம் பாதத்தில் சனி நின்றால் :

 • மிகவும் உயர்ந்த அறிவாளி
 • எந்த காரியத்திலும் நிலைத்த ஈடுபாடு கிடையாது
 • அரசு, மந்திரி முதலியவர்களுடன் தொடர்பு உண்டு
 • பொதுவாக வாழ்க்கை மகிழ்ச்சியாக சுகமாக இருக்கும்
 • இந்த பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறுகள் முதலியவை ஏற்படலாம்
 • கட்டிகள், மயக்கம், கடும் காய்ச்சல் போன்ற நோய்கள் காணலாம்.

 பரணி 2ம் பாதத்தில் கேது நின்றால் :

 • 63 வயது வரை வாழ்வான்
 • நீர் சம்பந்தமான நோய்கள் காணும்,
 • தலையில் அடிபடலாம்
 • காக்கை வலிப்பு போன்ற நோய்கள் ஏற்படலாம்
 • மூளை ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
 • போலீஸ் துறையில் உத்தியோகம் ஏற்படலாம்.
 • கண்ணில் புரை மற்றும் மங்கல் போன்ற நோய்கள் காணலாம்.

பரணி 2ம் பாதத்தில் ராகு நின்றால் :

 • அந்தஸ்து மதிப்பு முதலியவை ஏற்படும்.
 • இவன் சேர்த்த பணத்தை அவ்வளவாக செலவழிக்க மாட்டான்.
 • மோட்டார், ஸ்கூட்டர், கார் முதலிய வாகனம் பழுது பார்த்தல் போன்ற வற்றாலும் சம்பாத்யம் உண்டு
 • வெண்புள்ளிகள், தொழுநோய் முதலியவை ஏற்படலாம்.
 • கசாப்புத் தொழிலாலும் லாபம் சம்பாதிக்க நேரலாம் .

காலச்சக்கர தசை

கும்ப சனி தசை 4 வருடம்
மகர சனி தசை 4 வருடம்
தனுசு குரு தசை 10வருடம்
மேஷ செவ்வாய் தசை 7 வருடம்
ரிஷப சுக்கிர தசை 16வருடம்
மிதுன புதன் தசை 9 வருடம்
கடக சந்திர தசை 21 வருடம்
சிம்ம சூரிய தசை 5 வருடம்
கன்னி புதன் தசை 9 வருடம்
ஆக பரம ஆயுள் 85வருடம்
காலச்சக்கர தசை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular