ராசி | பலன் |
மேஷம்  | பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். தொழிலில் புதிய இனங்களில் முதலீடு செய்வீர்கள். காதலில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் தேவை |
ரிஷபம்  | வியாபாரிகள் நீண்ட நாளாக எதிர்பார்த்து வந்த தனவரவு உண்டாகும். குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது நல்லது. முக்கிய பிரமுகரின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு சில ஆலோசனைகளை வழங்கி நல்ல பெயர் எடுப்பீர்கள். |
மிதுனம்  | இன்று முற்பகுதி நலம் தரும். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் நிதானம் தேவை. சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்பட கிரகங்கள் காரணமாக இருக்கிறது. மதியத்திற்கு மேல் புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். அலைச்சல் அதிகமாக இருக்கும். மதியத்திற்கு மேல் நிதானமாக செயல்பட்டு வெற்றி அடைய வேண்டிய நாள்… இந்நாள்.
|
கடகம்  | எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எனினும், உடனுக்குடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். தாய்மாமன் வகையில் நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று சிலருக்கு கிடைக்கக் கூடும். வாழ்க்கைத் துணை வழியில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படும். வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும். எனினும், தேவைகள் இறுதியில் நிறைவேறும். |
சிம்மம்  | எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள். |
கன்னி  | தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். |
துலாம்  | கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். |
விருச்சிகம்  | கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல் பட்டு தேங்கிக் கிடந்த வேலை களை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள். |
தனுசு | இன்று சந்திரனின் சஞ்சாரம் அலைச்சலை தரக்கூடும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும். எனினும் குரு பார்வை உங்களுக்கு நன்மையை செய்யும். சிலர் சொத்துக்களை பராமரிக்கும் பொருட்டு செலவுகளை செய்யலாம். வாழ்க்கை துணையை அதிகம் அனுசரித்து செல்ல வேண்டிய நாள். வியாபாரிகள் மற்றும் சொந்தத் தொழில் செய்பவர்கள் வருமானத்தை உயர்த்தவும், செலவுகளை குறைக்கவும் பாடு படும் நாளாக இந்நாள் இருக்கும். எனினும் பொறுமையுடன் செயல் பட்டால் இன்று உங்களுக்கு வெற்றி நிச்சயம். |
மகரம் | புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பப் பெரியவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். வியாபாரம் சற்று சுமாராகத் தான் இருக்கும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். |
கும்பம் | துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடனான பிரச்சனையை சிலர் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து போராடி வெல்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள் |
மீனம் | குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். |