ராசி | பலன் |
மேஷம்  | குடும்ப விஷயங்களை நண்பர்கள் அல்லது வேண்டியவர்கள் என்று எண்ணி பிறரிடம் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம். முன்கோபத்தை குறைத்து சூழ்நிலையை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைக் கடந்து ஓரளவே லாபம் ஈட்ட இயலும். மற்றபடி, சுமாரான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை இனம் கண்டு தவிர்க்கவும். அலைச்சல் அதிகம் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது. |
ரிஷபம்  | கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் ஏற்படும். முக்கிய முடிவில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். |
மிதுனம்  | எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு வாக்குவாதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். தந்தைவழி உறவினர்களின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். |
கடகம்  | இன்று பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். அறிவுத் திறன் கூடும். பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். |
சிம்மம்  | குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உங்களை சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். கனவு நனவாகும் நாள். |
கன்னி  | தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். எனினும், சமாளித்து விடுவீர்கள். |
துலாம்  | தாய் வழி ஆதரவு அவ்வப்போது ஆறுதல் தரலாம். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும். |
விருச்சிகம்  | ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்கக் கூடும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அரசு காரியங்கள் சற்றே சிலருக்கு இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும், மேலதிகாரி ஆதரவு உண்டு. மொத்தத்தில், போராடி வெல்லும் நாள் |
தனுசு | குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்திசெய்வீர்கள். சிலருக்குப் பணப் புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்தனையை சிலர் நிறை வேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மனசாட்சி படி செயல்படும் நாள். |
மகரம் | புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத் துணையால் சில சங்கடங்கள் ஏற்பட்டு மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தும். பொறுமை மிக அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். |
கும்பம் | இன்று எந்த ஒரு காரியத்தையும் சஞ்சல மனதுடனேயே செய்ய நேரிடலாம். சஞ்சலம் தீர ராம நாமத்தை உச்சரித்து வாருங்கள். அது இன்று உங்களுக்கு வெற்றியை தேடித் தரும். காரியங்களில் ஜெயத்தை தரும். வண்டி – வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூடுதல் கவனம் தேவை. நெருப்பு, ஆயுதம், வாகனம், இயந்திரம் போன்றவற்றுடன் பழகும் போது அஜாக்கிரதை வேண்டாம். வீடு, வாகனம் தொடர்பாக சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல் – வாங்கல் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. |
மீனம் | இன்று துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள் . மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை. எதிலும் அவசரப்படாமல் புத்திகூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எனினும், எதிர்ப்புகள் இறுதியில் அகலும்.
|