ராசி | பலன் |
மேஷம்  | மனதில் வீண் குழப்பங்களுக்கு இடம் தர வேண்டாம். புதிய முயற்சி அலைச்சல் தந்தாலுமே இறுதியில் சாதகம் ஆகும். குல தெய்வ பிரார்த்தனைகளை சிலர் நிறைவேற்றுவீர்கள். தாய் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கலாம். உடல் நலனில் கவனம் தேவை. மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். சக வியாபாரிகளால் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப் படலாம். |
ரிஷபம்  | நல்லோரின் நட்பை பெற்று மகிழ்வீர்கள். எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறையும். பணவரவு தேவைகளை நிறைவேற்றும் படியாக இருக்கும்.சிலருக்கு மனைவி வழியில் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. |
மிதுனம்  | இன்று காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். பண வரத்து ஓரளவே திருப்தி தரும். சிலருக்கு மருத்துவ செலவுகள் குறையலாம். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், அவற்றை எல்லாம் சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். |
கடகம்  | இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்க இடம் உண்டு. சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். சிலர் அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். |
சிம்மம்  | இன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். |
கன்னி  | புதிய முயற்சிகளை பொறுமையுடன் செய்யவும். ஓரளவு தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு சிலருக்கு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். எனினும், அதில் இருந்து மீண்டு விடுவீர்கள். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். |
துலாம்  | மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில செலவுகள் ஏற்படக்கூடும். |
விருச்சிகம்  | நல்லோரின் நட்பை பெற்று மகிழ்வீர்கள். எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறையும். பணவரவு தேவைகளை நிறைவேற்றும் படியாக இருக்கும்.சிலருக்கு மனைவி வழியில் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. |
தனுசு | இன்று காலையில் மந்தமான நிலை காணப்பட்டாலும் கூட பிற்பகுதி உங்களுக்கு ஆறுதலாக உள்ளது. சிலருக்கு வயிறு உபாதைகள் ஏற்பட இடம் உண்டு. பலரை அனுசரித்து செல்ல வேண்டிய நாளாக இந்த நாள் இருக்கும். இது ஒரு சுமாரான நாள் தான். |
மகரம் | எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள். |
கும்பம் | புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர்களுடன் பேசும் போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறு மையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத் தான் இருக்கும். |
மீனம் | அனாவசிய பேச்சை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சச்சரவு வந்து நீங்கும். அலுவலக ரகசியங்களை வெளியிடவேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.
|