ராசி | பலன் |
மேஷம்  | குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். |
ரிஷபம்  | கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. அரசால் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திடீர் யோகம் கிட்டும் நாள். |
மிதுனம்  | குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள். |
கடகம்  | எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபா ரத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள். |
சிம்மம்  | தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அம்பிகையை வழிபட அல்லல்கள் நீங்கும். |
கன்னி  | சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக செயல் பட முயற்சி செய்வீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்களிடம் பேசும் போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத் தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். |
துலாம்  | குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள். |
விருச்சிகம்  | கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும். அக்கம் – பக்கத்தில் உள்ளவர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். கைமாற்றாக பணம் கொடுப்பதை தவிர்க்கவும். |
தனுசு | தொழிலில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்துப் போக வேண்டிய சூழல் ஏற்படும். பெண்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு குறித்து புதிய நம்பிக்கை பிறக்கும். மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோதனைகளை கடந்து சென்று இறுதியில் முயற்சியால் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். |
மகரம் | இன்றைய தினத்தில், எதிர்பார்ப்பு கூடுவதால் ஏமாற்றங்களுக்கு உள்ளாக வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமையில் சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் இறுதியில் சரியாகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். |
கும்பம் | இன்று லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக் கிடையே ஒற்றுமை உண்டாகும். |
மீனம் | விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்
|