ராசி பலன்-பஞ்சாங்கம்-23.06.2021
தமிழ் தேதி /கிழமை/வருடம் | ஆனி -9/புதன் /5123 பிலவ |
ஆங்கில நாள் | 23.06.2021 |
இன்றய சிறப்பு | ஸ்ரீமன் நாத முனிகள் திருநட்சத்திரம் ,முகூர்த்த நாள் |
சூரியன் உதயம் | 05.43AM |
சூரியன் அஸ்தமனம் | 06.36PM |
ராகு காலம் | 12.00PM -01.30PM |
குளிகை காலம் | 10.30AM -12.00PM |
அபிஜித் முகூர்த்தம் | 11.45AM -12.35PM |
எம கண்டம் | 07.30AM -09.00AM |
திதி | திரயோதசி காலை 03.54 மணிக்கு மேல் சதுர்த்தசி |
நட்சத்திரம் | அனுஷம் மதியம் 10.54 மணிக்கு மேல் கேட்டை |
சந்திராஷ்டமம் | பரணி,கிருத்திகை |
யோகம் | சித்தயோகம்/மரண யோகம் |
சூலம் | வடக்கு |
பரிகாரம் | பால் |

ராசி | பலன் |
மேஷம் ![]() | எந்த காரியத்தை தொட் டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகபேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம்செலுத்துவது நல்லது. பொறுமைத் தேவைப் படும் நாள். |
ரிஷபம் ![]() | எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள். |
மிதுனம் ![]() | எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள். |
கடகம் ![]() | குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். புது பொருள் சேரும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள் |
சிம்மம் ![]() | சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள். எனினும் அதை எல்லாம் சமாளித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள். |
கன்னி ![]() | கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எனினும், முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே நடைபெறும். உங்கள் முயற்சிகளுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் இன்று ஒரு சுமாரான நாள் தான். |
துலாம் ![]() | புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள். |
விருச்சிகம் ![]() | தாமதமான செயல்கள் நடைபெறுவதற்கான சூழல் காணப்படுகிறது. மாணவர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் கொள்வர். வாகன வகையில் சிறிய செலவினங்கள் ஏற்படலாம். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்பு உண்டு. வருமானம் ஓரளவே திருப்தி தரும். மொத்தத்தில், அலைச்சல் இருந்தாலும் கூட உங்களது முயற்சி வீண் போகாது. |
தனுசு![]() | குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுச் செயல்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகளுக்குப் பழைய சிக்கல்கள் தீரும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்க இடம் உண்டு. சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் ஏற்பட இடம் உண்டு. |
மகரம்![]() | வாழ்க்கைத் துணையின் வாழ்வில் மேன்மை உண்டு. உத்யோகத்தில் கூடுதல் கவனத்துடன் பணிபுரிவது நல்லது. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய்நாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சிலர் தெய்வ காரியங்களில் ஈடுபட இடம் உண்டு. |
கும்பம்![]() | இன்று பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். |
மீனம்![]() | எதிர்பார்க்கும் காரியங்களில் அலைச்சல் இருந்தாலும் உங்களது முயற்சி வீண் போகாது. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலர், தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் வீண் செலவுகள் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். எனினும் அதனை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். |