Friday, April 26, 2024
Homeஜோதிட குறிப்புகள்இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்

இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்
  • இரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் – பொருள் சேதம்.
  • இரண்டில் சந்திரன் இருந்தால் – இளம் வயதிலேயே திருமணமாகிவிடும்.பணக்காரனாக இருப்பான், புத்திசாலித்தனம், செல்வாக்கு இருக்கும்.பெண்களுடனான கேளிக்கைகளில் நாட்டம் உள்லவனாக இருப்பான்
  • இரண்டில் செவ்வாய் இருந்தால் – கோபக்காரன், வாக்குவாதம் செய்பவன்,வீணாக செலவு செய்பவன். பூமி லாபம் உண்டு. கண் நோய் உண்டாகும்
  • இரண்டில் புதனிருந்தால் – நல்ல படிப்பாளி, எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடியவன். சேர்த்துவைக்கக் கூடியவன்
  • இரண்டில் குரு இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும். தர்மங்கள்செய்பவன். சுகமாக வாழக்கூடியவன்.
  • இரண்டில் சுக்கிரன் இருந்தால் சுகமாக வாழ்பவன். அதிகமான உறவுகளைக்கொண்டவன். நல்ல மனைவி அமைவாள். வித்தைகள் தெரிந்தவன்.பெண்களிடம் வசப்பட்டுவிடுபவன்.
இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்
இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்
  • இரண்டில் சனி இருந்தால் – இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள்அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன். கையில் காசுதங்காது. சம்பளத்திற்கு மேல் செலவாகும். எல்லாத் தீமைகளும் இவனுக்குப் பெண்களாலேயே உண்டாகும்.
  • இரண்டில் ராகு அல்லது கேது இருந்தால் – இரண்டு விவாகம் அல்லதுஇரண்டு குடும்பங்கள் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன். தயவு தாட்சண்யம் பார்க்க மட்டான். சோம்பல் உடனிருக்கும். மனசஞ்சலம் உடையவன். சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிப்பான். வயதானகாலத்தில் செளகரியமாக இருப்பான், வாயைத் திறந்தால் சண்டைதான்.
  • இரண்டில் சுபக்கிரகங்கள் சேர்ந்து நின்றால் – பெரும் பணக்காரனாகஇருப்பான். சகல வித்தைகள் தெரிந்தவனாக இருப்பான்.
  • இரண்டில் சுபக்கிரகங்களுடன் – சூரியனும் கூடி நின்றால் – பொருள்நாசம். கையில் காசு தங்காது.
  • இரண்டில் சுபக்கிரகங்களுடன்- செவ்வாய் கூடி நின்றால் ஞானமும்(அறிவும்) செல்வமும் உண்டு
  • இரண்டில் சூரியனும், சனியும் கூடி நின்றால், அவன் சம்பதித்ததுமட்டுமல்ல, பரம்பரைச் சொத்தும் சேர்ந்து கரைந்துவிடும்
  • இரண்டில் சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் நல்ல மனைவி, மக்கள்,செல்வம் எல்லாம் கூடி வரும்
  • இரண்டாம் இடத்தில் குரு இருந்து அந்த வீட்டிற்கு ஏழில் புதன்அமர்ந்திருந்தால் பொருள் விரையம் அல்லது நாசம் ஆகும்
  • இரண்டில் சந்திரன் நிற்க உடன், சனி அல்லது ராகு அல்லது கேதுசேர்ந்து நின்றால் தரித்திரம். கையில் காசு தங்காது
இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்
இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்
  • இரண்டிற்கதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்தால் அவனுடைய சொத்துக்களைப் பகைவர்கள் -அவனுடைய எதிரிகள் கைக்கொண்டு விடுவார்கள்.
  • அதற்கு நேர்மாறாக ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில் வந்துஅமர்ந்திருந்தால், எதிரிகளுடைய சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.
  • கடக லக்கினத்தில் பிறந்தவனுக்கு, சூரியனும், சந்திரனும், சுக்கிரனும்ஒன்றாகக்கூடி பாவ வீட்டில் இருந்தால் அவன் பிறவிக் குருடனாய் இருப்பான்.
  • இரண்டாம் வீட்டுக்காரன் சுக்கிரனாகி, அவன் லக்கினாதிபதியுடன் கூடி மூன்றில் இருந்தால் ஜாதகனுக்குக் கண் நோய் உண்டாகும்
  • இரண்டாம் அதிபனும், புதனும் கூடி ஆறாம் இடத்தில் வலுவாகஅமர்ந்தால் ஜாதகன் ஊமையாக இருப்பான்.
  • இரண்டம் அதிபனும், புதனும் கூடி எட்டிலோ அல்லது பன்னிரெண்டிலோ இருந்தாலும் ஜாதகன் ஊமையாகிவிடுவான்
  • இரண்டாம் அதிபதியும், குருவும், சுக்கிரனும் உச்சமடைந்திருந்தால்ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்
  • இரண்டிற்குடையவனும், புதனும் உச்சம் பெற்றிருக்க, லக்கினத்தில் குருவும், எட்டில் சனியும் இருந்தால் ஜாதகன் பெரிய மேதையாக விளங்குவான்.
  • மூன்று, அறு, எட்டு, பதினொன்று ஆகிய வீடுகளில் பாவக் கிரகங்கள்நின்று அவை லக்கினத்தைப் பார்க்காமல் இருந்தாலே ஜாதகன் பெரியசெல்வந்தனாக இருப்பான்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular