ராசி |
பலன் |
மேஷம்  |
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட இடம் உண்டு. வாழ்க்கைத் துணை வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையில் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வாய்ப்பு அமையும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். |
ரிஷபம்  |
அரசு காரியங்களில் அலைச்சல் அதிகரிக்க இடம் உண்டு. சகோதரர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் பிற்பகலுக்கு மேல் விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.. |
மிதுனம்  |
இது நாள் வரையில் வாழ்க்கையில் இடையூறு செய்தவர்களை இனம் கண்டு விலகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறு அளவில் போட்டி இருக்கும். வருமானம் சராசரி அளவில் இருக்கும். அரசு வகையில் அனுகூலம் பெற கூடுதல் முயற்சி தேவைப்படும். பெண்களுக்கு தாய் வழியில் சில உதவிகள் கிடைக்கும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி தேவைகள் இறுதியில் நிறைவேறும். |
கடகம்  |
மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். |
சிம்மம்  |
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள். |
கன்னி  |
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள். |
துலாம்  |
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள். |
விருச்சிகம்  |
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுதைசரி செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். |
தனுசு |
கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் குறையும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள். |
மகரம் |
சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பணிகளை குடும்பத்தினர் பகிர்ந்துகொள் வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். |
கும்பம் |
எடுத்துச் செய்யும் செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். எனினும், எடுத்துச் சொல்லி புரிய வைத்து விடுவீர்கள். வீட்டிலும் – வெளியிலும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி அலைச்சலுக்குப் பின் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும்.
. |
மீனம் |
பெண்களுக்கு குடும்பத்தினரின் பாராட்டு கிடைக்கும். மாணவர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் முயற்சி செய்தால் தாய் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு உண்டு.
. |