Saturday, July 27, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

கார்த்திகை நட்சத்திரம்  மூன்றாவது நட்சத்திரம். ராசி மண்டலத்தில் 27 பாகை 40 கலை முதல் 40 பாகை வரை மேஷ ராசியில் முதல் பாதமும், ரிஷப ராசியில் மீதி மூன்று பாதங்கள் ஆகவும் பரவியுள்ளது. இதற்கு அதிதேவதை அக்னி

இந்திய பெயர் கார்த்திகை
கிரேக்க பெயர் தெளரி அல்கையோன்
சீனப்பெயர் மாவோ
அரபு பெயர் அத் -தெளரியா

 

இரு ஆறு நட்சத்திரங்களைக் கொண்டது. அம்பு முனை போன்று வடிவம் உள்ளது. நெருப்புச் சுடரை போன்றது.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணநலன்கள் :

  • இந்த நட்சத்திரத்தில் பிறந்தவன் நல்ல வாக்கு வன்மை உடையவன்.
  • வழக்குகளை சித்திர தெளிவாக பேசி தீர்த்து வைப்பான்.
  • நடனம் போன்ற கலைகளில் நாட்டம் உள்ளவன்.
  • நல்ல குணம் உள்ளவன்.
  • உறவினருக்கு அனுசரனையானவன் .
  • போர் புரிவதில் வல்லவன்.
  • பொருள் பொன் இவற்றுடன் புகழையும் தேடி உயர்ந்து வாழ்பவன்.
  • தெளிந்த கருது சொல்லும் பண்புடையவர்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின்உடல் அமைப்பு:

  • நடுத்தர வடிவம்.
  • மூக்கு உயர்ந்திருக்கும்.
  • கண்ணில் கருணை உண்டு.
  • கழுத்து பருத்து இருக்கும்.
  • நல்ல கட்டான தேகம்.
  • அகன்ற தோள்கள்.
  • சதைப்பற்றுள்ள உடல்
  • அமைதியானவன்
  • பிறர் மதிக்கும்படி நடப்பவன்
  • நல்ல தலைமை வகிக்கும் மிடுக்கான தோற்றம்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின்குணநலன்கள்:

  • கூர்ந்த அறிவாளி ஆனால் நீடித்து செயல்புரியும் மன வலிமை குறைவு
  • அடிக்கடி சலிப்பு  ஏற்பட்டு முயற்சிகளை மாற்றிக் கொண்டே இருப்பான்
  • பிறருக்கு அறிவுரை கூறி அவர்கள் சிக்கலை தீர்த்து வைப்பதில் வல்லவர்
  • சுயகௌரவம் பாதித்தால் எந்த நட்பையும் உதறித் தள்ளி விடுவான்
  • புறம்பான முறையற்ற வழியில் பொருளீட்ட மாட்டான்
  • பிறர் தயவில் பிழைக்க மனம் இடம் கொடாது
  • பொருளீட்டி  சேமிக்கவும் வல்லவன்.
  • துணிந்த திட நம்பிக்கையுடன் காரியம் சாதிக்க வல்லவன்.
  • பழமையில் வைதீக ஆசாரம்  முதலியவற்றில் நம்பிக்கை உண்டு. ஆனால் மூடநம்பிக்கைகளுக்கு உடன்படான் .
  • பொதுவாழ்க்கையில் ஈடுபடுவான் ஆனால் அதிக நாள் நீடிக்காது
  • வீணான பயனற்ற பயணங்களை அடிக்கடி மேற்கொள்வான்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின்-கல்வி தொழில்:

  • பெரும்பாலும் சொந்த ஊரில் இவனுக்கு தொழில் அமையாது வேறு ஊர்களிலும் வெளிநாடுகளிலும் பணி அமையலாம்
  • பொறியியல் மருத்துவம் போன்ற தொழில்கள் மற்றும்  கல்வி அமையலாம்
  • ஜவுளி மருந்துவகை  வியாபாரம் அமையலாம்.
  • அரசாங்கத்தால் உதவியுண்டு.
  • தொழிலில் மிகவும் மந்தமாக செயல்படுவான்.
  • சிலசமயம் இவனுக்கு பிறர் எழுதி வைத்த சொத்து சேரும் வாய்ப்பு உண்டு.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின்-குடும்ப வாழ்க்கை:

  • பொதுவாக குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமே இருக்கலாம்.
  • வீட்டு நிர்வாகம், நல்ல சமையல், அறிவு முதலியவற்றில் திறமையான அழகிய மனைவி அமையும்.
  • இவரிடம் மிகவும் கடமைப் பட்டவளாகவும், பாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.
  • ஆனால் இவன்  ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும்.
  • பல்வேறு காரணங்களால் குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ வேண்டி வரும்
  • குடும்ப வாழ்வில் அதாவது வீட்டுக்குள் இவனுக்கு நல்ல அமைதி உண்டு.
  • உடன்பிறந்தவர்கள், தாய் இவர்களிடம் அதிக பாசம் உண்டு.
  • தகப்பனாரல்  பெருத்த லாபம், உயர்வு அதிகம் கிடையாது.
  • காதல் திருமணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • தன் குடும்பத்திலேயே உறவு பெண்ணை விரும்பி மணப்பதும் உண்டு.

ஜோதிட குறிப்புகள் -சூரியன்+சனி

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின்-உடல்நலம்:

  • நல்ல பசியும் உண்ணும் பழக்கமும் உண்டு
  • பல்வலி, காச நோய் ,கண்பார்வைக் குறைவு இவை ஏற்படலாம்.
  • ஆனால் இவன் தன் உடல் நலத்தில் அக்கரை ஆக இருப்பான்.
  • பெரிய நீடித்த நோய் எதுவும் ஏற்படாது

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த-பெண்கள்:

  • சாதாரண உயரம் ,
  • தூய உடலமைப்பு
  • நடுத்தர உருவம்,
  • நல்ல அழகி ஆனால் 27 வயதுக்கு மேல் அழகின் பிரதிபலிப்பு குறையும்.

ஜாதகத்தில் சூரியன்-பலமும்-பலவீனமும்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்- குணம்:

  • பாசம் இல்லையென்றாலும் பற்றற்றவள் அல்ல.
  • சிலசமயம் இவள் முரட்டு சுபாவத்துடன் நடப்பதுண்டு.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்கல்வி:

  • இந்த நட்சத்திரத்தில் பிறந்த சிலரே அதிகபட்ச கல்வி கற்கிறார்கள்.
  • பெரும்பாலும் நடுத்தர கல்வியுடன் சரியே.
  • மருத்துவம், ரசாயனம், பொறியியல் போன்ற துறைகளில் கல்வி வாய்க்கலாம்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்குடும்ப வாழ்க்கை:

  • முழு மகிழ்ச்சி இராது.
  • சில சமயங்கள் இவர்கள் மலடிகள்  மற்றும் சிலர் கணவனை பிரிந்து வாழ வேண்டி வரும்.
  • மிகச் சிலர் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து விடுவர்.
  • சிலருக்கு  37 வயதுக்கு மேல்  நல்ல இடத்தில் திருமணம் கூடலாம்.
  • உறவினருடன் அவ்வளவு சுகம் இராது.
  • வாழ்க்கையை புரிந்து கொள்ளாமல் பிறர் பகை அதிருப்தி  இவற்றை சம்பாதித்து கொள்வர். இதனால் கடைசியில் தனித்து ஒண்டியான  வாழ்க்கை ஏற்பட்டு விடுவதும் உண்டு.
  • செவ்வாய், குரு ஜாதகத்தில் நல்லபடியாக அமையாவிட்டால் குழந்தை இராது. சிலசமயம் பிறந்து இறக்கும்.
  • சனிக் கிழமையில் பிறந்த கிருத்திகை நட்சத்திர பெண்கள் விஷக்கன்னி எனப்படுவர்.
  • இவள் போக உறுப்பு சரியாக அமையாது.
  • ஆடை அணிகலன் வாய்ப்பது  கடினம்.
  • சுபக்கோள்கள் கன்னி  கடைசியிலும்,துலாம் முதல் பதத்தில்  அமைந்தால், இந்த குறைகள் பெரும்பாலும் இராது.
  • இவர் பிறந்த நட்சத்திர முதல் 26,27 நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்து சுபர் பாராவிட்டால்  விதவையாகலாம்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்-உடல்நலம்:

  • அதிக உழைப்பு மனக்கவலை, உளைச்சல் இவற்றால் பெரிதும் உடல்நலம் பாதிக்கப்படும். காச நோய் ஏற்படலாம்.
  • பெண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் விபச்சார குணம் உண்டு. சண்டைகாரிகள்  அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும்.

கார்த்திகை நட்சத்திரத்தின் பொதுவான தகவல்கள்:

  • கார்த்திகை நட்சத்திர அதிபதி சூரியன். முதல்பாத  ராசி அதிபதி  செவ்வாய்.
  • இது மேஷம் 3 மீதி மூன்று பாதங்கள் அதிபதி சுக்கிரன். ராசி ரிஷபம். எனவே முதல் பாத காரர்களிடம் சூரியன் செவ்வாய் குணங்களும். மற்றவர்களிடம் சுக்கிரன் சூரியன் குணங்களும் காணப்படும்.
  • முதல் பாதகாரர்கள் அதிக முரடர்கள், முன் கோபிகள்
  • மேஷ ராசியில் முதல் பாதமும் ரிஷபத்தில் மீதி  3பாதம் இருப்பதால் இது தலையற்ற நட்சத்திரம் எனப்படும்.
  • திருமண வாழ்க்கையில் சிறிது பூசல் ஏற்படும்.
  • சொந்த வீடானாலும் குறை உண்டு.
  • முழுவதும் கட்டினால் அதில் இவர்கள் குடியிருக்க மாட்டார்கள்.
  • 70 வயது வரை ஆயுள் நீடிக்கலாம்.
  • அமாவாசை கிருத்திகை கூடும் நாளில் பிறப்பவர்கள் பெரிய வீரர்கள் சாதனையாளர்கள் உலக புகழ் பெறுவார்கள்.
  • கீழ்நோக்கு நாள்
  • சவ்விய நட்சத்திரம்
  • ராட்சச கணம்
  • உதர ரஜ்ஜு
  • சமமான நாடி
  • திக்கு -இந்திராதிக்கு
  • பட்சி-வல்லுறு
  • திங்கள்கிழமை புதன்கிழமைகளில்  கிருத்திகை கூடினால் வார சூனியம்.
  • இதில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை இருண்ட சூழ்நிலையும் தொல்லையும் ஆகும்.
  • இது பெண்ணின் நட்சத்திரம் ஆனால் புத்திர தோஷம் உண்டு.

லக்னத்தில் நிற்கும் கிரகங்களின் பொதுப்பலன்கள்

கிருத்திகை நட்சத்திர காரகத்துவங்கள்:

  • வெள்ளைப்பூக்கள், அக்னிஹோத்ரம், மந்திர சாஸ்திர பயிற்சி, அதில் நிபுணத்துவம், இலக்கண ஆத்மீக நூல்கள் அறிவு, அவற்றிற்கு  உரை சொல்லும் திறன், சிற்பநூல் அறிவு, தேர்ச்சி, நாவிதன், குயவன், அந்தணன், புரோகிதர் சோதிடர்களையும் இது குறிக்கும்.

இதற்குரிய நோய்கள் :

  • மூலம், மலேரியா, அம்மை ,மூளை கசிவு, காய்ச்சல், விபத்து அதனால் காயம், அதிக முகப்பரு, தொண்டை கோளாறுகள் முதலியவை

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular