Friday, December 8, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்- 7.7.2021

இன்றைய ராசி பலன்- 7.7.2021

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

இன்றைய ராசி பலன்- 7.7.2021

MESHAM

மேஷம் 

மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பயணங்கள் அலைச்சல் தரலாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் இறுதியில் பலிதமாகும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் சிலரைத் தேடி வரும். மனதளவில் தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

RISHABAM

ரிஷபம் 

எடுத்துச் செய்யும் செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். எனினும், எடுத்துச் சொல்லி புரிய வைத்து விடுவீர்கள். வீட்டிலும் – வெளியிலும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி அலைச்சலுக்குப் பின் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும்.

கல்வியில் சிறந்து விளங்க -அருள்மிகு ஏழுத்தறிநாதர் திருக்கோவில்

MITHUNAM

மிதுனம் 

எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

VIRUCHIGAM

கடகம் 

உங்களின் பேச்சில் அனுபவ அறிவுவெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர் கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

SIMMAM

சிம்மம் 

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

KANNI

கன்னி 

இன்று உணவுக் கட்டுப்பாடு தேவைப்படும் நாள். குடும்பத்தில் அந்நிய நபர்களால் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளவும். எனினும் சமூகத்தில் உங்களது மதிப்பு உயரும். முயற்சியாலும், எதிர் நீச்சல் போட்டும், இன்று போராடி பல விஷயங்களில் நீங்கள் வெற்றியை பெற்று விடுவீர்கள்.

THULAAM

துலாம் 

அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களை உங்களுடன் ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் எதிலும் கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம் 

தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்த படி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தான் இருக்கும்.

சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக மாறிய கதை

THANUSU

தனுசு 

உத்வேகத்துடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். கூடுதல் லாப கிடைக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்

MAGARAM

மகரம் 

உங்களின் நற்குணங்களை பலரும் அறிந்து கொள்வர். தொழிலில் திட்டமிட்ட பணிகளை அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். சிக்கலான விஷயங்கள் கூட இறுதியில் ஒரு நல்ல முடிவுக்கு வரும் தினம்.

KUMBAM

கும்பம் 

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

MEENAM

மீனம் 

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்

பஞ்சாங்க குறிப்புகள்-7.7.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் ஆனி -23/புதன்     /5123 பிலவ
ஆங்கில நாள் 6.7.2021
இன்றய சிறப்பு பிரதோஷம் ,சுப முகூர்த்தம் 
சூரியன் உதயம் 05.58AM
சூரியன் அஸ்தமனம் 06.36PM
ராகு காலம் மதியம் 12.00-1.30
நாள் நாள் முழுவதும்  மேல்  நோக்கு நாள்
செயல் குறிப்புகள் புதிய முயற்சிகளை துவங்கலாம்
எம கண்டம் காலை 7.30-9.00
நல்ல நேரம் காலை -9.00-10.00| மாலை 4.45-5.45
திதி இரவு 02.35 வரை துவாதசி   (தே )திரயோதசி
நட்சத்திரம் இன்று இரவு 7.54 வரை ரோகினி பின்பு மிருகசீரிடம்
சந்திராஷ்டமம் சுவாதி,விசாகம்
யோகம்  சித்த யோகம்/ மரண யோகம்/அமிர்த யோகம்
சூலம் வடக்கு
பரிகாரம் பால்

 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular