Friday, March 29, 2024
Homeஜோதிட குறிப்புகள்வாஸ்து குறிப்புகள் 

வாஸ்து குறிப்புகள் 

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

வாஸ்து குறிப்புகள் 

வாவியம் வெட்டுப்படுதல்:

பஞ்ச பூதங்களில் வலிமையானது காற்று! வடக்கும் மேற்க்கும்இணைகிற மூளை வாவிய மூலை. நாம் வாயுமூலை என்றே அழைப்போம்.

மனித உடலில் வாதம் அதிகரிக்கவும் கூடாது குறையவும் கூடாது; குறையவும் கூடாது. வாதம் என்றால் காற்று. வழக்கறிஞர் வாதாடுகிறார் என்றால் பேசுகிறார். காற்றின் உதவியின்றி சத்தம் கேட்காது.

கால் என்றாலும் காற்று.

ஒரு வீட்டை கட்ட துவங்குகையில் கால் போடுகிறோம். கடைக்கால் போட்டாலும் பில்லர்கள் போட்டாலும் அவைகள் கால்கள்தான்.வாவிய வெட்டு அந்த வீட்டில் உள்ளவர்களின் கால்கள் மற்றும் இதயத்தை பாதிக்கிறது. இதயம் காற்றை விநியோகிக்கும் மையம் ஆயிற்றே… இதயம் காப்போம்!

ஆன்லைனில் படிக்க பணிபுரிய!

இன்றைக்கும் வீட்டிலிருந்து படிப்பதும் பணி புரிவதும் இயல்பானதாக மாறிவிட்டது. இதற்கு கூடுதல் கவனம் தேவை. நீங்கள் புத்தகத்தைப் படித்தாலும் கைபேசி மற்றும் கணினியுடன் கலந்துரையாடினாலும் கிழக்கு நோக்கி அமர்வது உத்தமம். மாற்ற திசையில் எல்லாம் மத்திமம்.

வீட்டில் ஈசானிய மூலையில் அமர்ந்து படிக்கலாம் ஆனால் வாஸ்துவை முழுமையாக பின்பற்றும் போது அது வரவேற்பு அறை ஆகிவிடுகிறது. நீங்கள் வீட்டின் எந்த அறையில் படித்தாலும் பணி புரிந்தாலும் கிழக்குநோக்கி அமருங்கள்

இது குழந்தைகளுக்கும் பொருந்தும் குமாஸ்தாகளுக்கும் பொருந்தும்!

கிருஹகப் பிரவேசம்

கிருஹம் என்றால் வீடு (கவனியுங்கள் கிரஹம், கிரகம் அல்ல) கட்டி முடித்து மங்கல நாளில் குடியேறுவதை கிருஹகப் பிரவேசம் என்கிறோம்.

கிருஹகப் பிரவேச நாள் குறிக்க வாஸ்துவை விட வீட்டு உரிமையாளரின் நட்சத்திரமும், குடிபுகும் நாளின் நட்சத்திரமும் நட்பாக இருக்க வேண்டியது முக்கியம். சகுனங்களும் முக்கியம். அனைவராலும் சகுணங்களின் உட்பொருளை அறிந்து கொள்ள முடியாது. இதற்கு தேர்ந்த ஜோதிடரை அணுகுவது நல்லது.

ஜோதிட முறையில் லக்னத்திலிருந்து நான்காம் இடம் வீட்டை குறிக்கிறது. பதினோராம் இடம் ஆசையில் நிறைவேறுவது குறிக்கிறது. இந்த இடங்கள் சுத்தமாக இருந்தால் பிரவேசிக்கும் வீடு சுபிட்சமாக இருக்கும்.

குறிப்பிட்ட சில மாதங்கள் விலக்கப்பட வேண்டியவை அவற்றையும் தவிர்த்தால் நன்று.

வாஸ்து குறிப்புகள்

படிகளுக்கு கீழே கழிவறை

வீட்டின் மாடிப் படிகளில் கீழே கழிவறை ஒன்றை கட்டிக் கொள்வது பலரின் லட்சியமாக இருக்கிறது. ஆனால் இது அலட்சியப் படுத்தக் கூடிய விஷயமல்ல.

மாடிப் படிகளில் கீழே கழிவறை மற்றும் குளியல் அறை அமைக்கும் பொழுது வீட்டுத் தரை மட்டத்தை விட தாழ்வாக அமைக்கக்கூடாது.

பெரும்பாலான வீடுகள் தரை மட்டத்திலிருந்து குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று அடிகள் உயர்த்தி கட்டப்படுவதால், கழிவறையை அதே மட்டத்தில் கட்டுவது இயலாத காரியம். எனவே அப்படி இருந்தால் மட்டுமே கழிவறையை அமைக்கலாம். அதேபோல வாயுமூலை வங்கி கடன் உடன் தொடர்பு உள்ளது அதையும் தவிர்ப்பது நல்லது.

மேல்நிலைத் தொட்டி

வீட்டின் மாடியில் உள்ள மேல்நிலை தொட்டி மாடியில் தென்மேற்கு மூலையில் அமைப்பது வழக்கமாக இருக்கிறது.

தென் மேற்கு மூலைக்கும் வடமேற்கு மூலைக்கும் நடுவில் உள்ள இடத்தில் மேற்கு சார்ந்து மேல்நிலை தொட்டி அமைக்கலாம். தவறில்லை. மேல்நிலை தொட்டிக்கு அடியில் ஓர் அறை அமைக்கலாம். ஸ்டோர் ரூம் அமைக்கலாம், உடற்பயிற்சிக்கான ஜிம் அமைக்கலாம், காலியாகவும் விடலாம்.

நைருதி மண். அதன் மீது நீரை வைத்தால் குடும்பத்தில் வளர்ச்சி உண்டாகும்.வாயு மூலையில் கர்ப்ப நோய்களும், அக்னி வைத்தால் ரத்த நோய்களும், ஈசானியத்தில் தலை வேதனைகளும் உண்டாகும்.

சமையல் அறை

சமையலறையை அக்னி மூலை அல்லது வாயு மூலையில் அமைத்துக்கொள்ளலாம். அவற்றிலும் அக்னிக்கே முதல் மதிப்பெண்.

சமையலறையை எக்காரணம் கொண்டும் ஈசானியத்தில் அமைக்கக்கூடாது. நீரும் நெருப்பும் இணைந்தால் சாம்பல் தான் மிஞ்சும். ஈசானிய சமையலறை ஆண்களின் மேன்மையை குறிக்கிறது. வாழ்நாள் குறையவும் வாய்ப்பு உண்டு. நைருதி சமையலும் அவ்வாறே. காற்றுடன் நெருப்பு கனனென்று எரிவதைப் போல காற்று மூலை ஆகிய வாயு மூலையில் அமையும் சமையலறையும் தன் பங்கை சிறப்பாக ஆற்றும்.

சமையல் மீது மையல் உள்ளவர்கள் சற்றே இதை கவனிப்பார்களா!

வாஸ்து குறிப்புகள்
வீட்டின் நிலவறை!

அந்த காலத்து வீடுகளில் நிலவறைஒன்றை அமைத்துக் கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது. நகைகளை பாதுகாக்க, முக்கியமான பொருளை மறைத்து வைக்க என

நிலவறை எனப்படும் பாதாள அறை ஈசான மூலையை தவிர வேறு எங்கும் இருக்கக் கூடாது. சிலர் வீடு முழுவதிலும் செல்லர் எனப்படும் நிலவரை அமைத்துவிட்டால் தோஷம் இருக்காது என்கிறார்கள். ஒருவிதத்தில் அதுவும் சரிதான்.
வடகிழக்கு ரோடுகளுள்ள ஈசானிய மனையில் அவ்வாறு அமைக்கலாம்.

ஆனால் அக்னி,நைருதி மற்றும் வாயவிய மனைகளில் நிலவறை அமைத்தால் கட்டி முடிப்பது சிரமமான காரியம்.

வாசல்கள் !

வாஸ்து சாஸ்திரத்தில் வாசல்கள் முக்கியம். தவறான வாசல்கள் வாழ்வில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.

கிழக்கு வாசல்

1.ஈசானிய கிழக்கு
2.அக்கினேய கிழக்கு

இதில் முதலாவதில் ஈசானிய கிழக்கே நல்லது.

வடக்குவாசல் :
1.ஈசானிய வடக்கு
2.வாயவிய வடக்கு

இதில் முதலாவது ஆகிய ஈசானிய வடக்கே நல்லது.

தெற்கு வாசல்:
1.ஆக்கினேய தெற்கு
2.நைருதி தெற்கு

இதில் முதலாவதாகிய அக்கினேய தெற்கு நல்லது.

மேற்கு வாசல்

1.மேற்கு வடமேற்கு

2.வடக்கு வடமேற்கு

இதில் முதலாவதாகிய மேற்கு வடமேற்கே நல்லது.

தொழிற்சாலை வாஸ்து

காலி மனை ஆனாலும், வீடு ஆனாலும், தொழிற்சாலை ஆனாலும் வாஸ்து விதிகள் ஒன்றுதான். மாஸ்டர் பெட்ரூம் வீட்டில் என்றால் அதுவே அலுவலகத்தில் உரிமையாளரின் அறையாக மாறுகிறது.

சமையல் அறையானது நீராவி கொள்கலன்கள், ஜெனரேட்டர் மற்றும் வெட்டு இயந்திரங்கள் நிறுவும் இடமாக மாறுகிறது. விருந்தினர்களின் படுக்கை அறையானது விற்பனைக்கு தயாராக உள்ள அல்லது ஏற்றுமதிக்கு தயாராக உள்ள பொருள்களின் இடமாக மாறுகிறது.

வீட்டின் வரவேற்பு அறையானது தொழிற்சாலையின் வரவேற்பு அறையாகவும் ,பணியாளர்கள் பணி புரியும் இடமாகவும் மாறுகிறது .மேல்நிலைத் தொட்டிகளும், கீழ்நிலைத் தொட்டிகளும் கழிவுநீர் வாய்க்கால்களும் வீடுகளில் கடைபிடிக்கிற முறையை அனுசரித்து அமையும்.

உள்ளே வெளியே வாயில்கள் பங்களாவுக்கும் ஒன்றே; பணிபுரியும் இடத்துக்கும் ஒன்றே!

ஆடு, மாடு, நாய், கோழி:

வாஸ்து பரிகாரங்களில் மிக முக்கியமானது விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்த்தல்.

மனிதன் உயர்திணை மற்றவை அஃறிணை

உயர்திணைகளைவிட அஃறிணைகள் பல அதிக காலம் வாழ்கின்றன.

விலங்குகளும் பறவைகளும் நமது எஜமானரின் மீதான தீய தாக்கத்தை வெகுவாக குறைக்கின்றன. இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.

நாய்கள் மனிதர்களோடு ஆதி காலம் தொட்டே அண்டி வாழ்பவை. மாடுகள், மனிதர்களைப் போலவே நுண்ணுணர்வு உள்ளவை என்பதால் மாக்கள். மனிதனின் அஞ்ஞானத் திரைகளை விலக்கி ஞானத்தை தரிசிக்கும் வாய்ப்பு வழங்குவது குதிரை. துறவு எண்ணத்தை விளக்குகிறது பறவை.

வீட்டின் வாஸ்து குறைபாடுகளை ஆராய்ந்து அதற்கேற்ப மிருகங்களை தேர்ந்தெடுத்து வளர்த்தால் வாழ்வின் தீய தாக்கங்களில் இருந்து தற்காலிகமாக விடுபடலாம்.

வாஸ்து குறிப்புகள்

சீன பெங்சுயி

இந்திய வாஸ்து சாஸ்திரமும் சீன வாஸ்து சாஸ்திரமும் அடிப்படையில் ஒன்றுதான். இரண்டிலும் பஞ்சபூதங்களே அடிப்படை.

இந்திய வாஸ்து மரபில், எல்லா விதிகளுக்கும் அடிப்படை என ஒன்று உண்டு. திசை தேவர்களின் தன்மை குறித்து தர்க்கரீதியாக விவாதிக்கலாம். அதற்கான விடையையும் காணலாம்.

பிறப்பை குறிப்பது பிரம்மம்.உலகின் எல்லா கட்டிடக் கலைகளும் ஸ்தூபிகளைப் பற்றி பேசும்பொழுது; நாபியை பற்றி பேசும் ஒரே கட்டடக்கலை நம்முடைய தான். பிரம்மன் பிறந்த இடம் பிரம்மம். அது திருமாலின் நாபி!

நாம் நீர், நெருப்பு, மண், காற்று, பிரம்மம் என வரிசைபடுத்துகிறோம் பெங்சுயிஅப்படி அல்ல

பெங்சுயி மனித வாழ்க்கையை மாற்றாது. உயர்த்தாது.

நமது வாஸ்து வாழ்வை மாற்றும். உயர்த்தும்!

பிணி நீக்கும் படுக்கை!

ஒருவர் நோயில் விழலாம். நீண்டகாலம் பாயில் விழக்கூடாது என்பார்கள். படுத்த படுக்கையாக கிடப்பது ஊழ்வினைப் பயன்.

ஊழ்வினை வந்து உறுத்தும் என்பது சிலப்பதிகாரம் மட்டுமல்ல; வாஸ்து அதிகாரமும்தான்.

முன்வினைப் பயன்களுக்கு ஏற்பவே இப்பிறவியில் வீடு அமைகிறது. உடல்நலமும் பணநலமும் பிரிக்க முடியாதவை. ஒருவரது லக்னத்திலிருந்து ஆறாம் பாவம் ருண ரோக ஸ்தானம் எனப்படுகிறது. இது கர்மா, நோய் முதலியவற்றை மட்டும் தீர்மானிப்பதில்லை. மனிதன் வெற்றியையும் தீர்மானிக்கிறது.

வீட்டின் வரைபடம் மனிதனின் ஜீன்களில் இருக்கிறது. இன்னாருக்கு இன்ன வீடு என்று எழுதி விட்டான் தேவன் அன்று.

ஒரு முக்கியமான விஷயம் நீண்டகாலமாக படுக்கையில் உள்ள நோயாளிகள் ஈசானிய அறையில்தான் அனேகமாக இருப்பார்கள். அப்படி இருந்தால் உடனடியாக அவர்களை வேறு அறைக்கு மாற்றுங்கள் விரைவிலேயே மாற்றம் தெரியும்.

வீடும் தொழிலும்

என்னுடைய தொழிற்சாலையை வாஸ்து பார்த்து கட்டி விட்டேன் என்று யாரும் திருப்தி அடைந்துவிடக்கூடாது. வசிக்கிற வீடு வாஸ்து படி உள்ளதா என கவனிக்க வேண்டும்.

வீட்டிலுள்ள சிறிய வாஸ்து குறை கூட தொழிலைச் துவள செய்து விடும். மனம் இருப்பதாலே மனிதன். மனம் செம்மையுற தியானம் செய்யலாமா? செய்யலாம். ஆனால் தியானம் எதற்கும் தீர்வல்ல!

வீட்டின் வாயு மூலையில் உள்ள ஒரு பள்ளம் உள்ளத்தை உருக்குலைத்து விடும். மதி இழந்தவன் கதி இழப்பான் கதி என்றால் பாதை.

ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கும் பொருட்களுக்கும் அந்த வீட்டு அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறது. தொழில் சுணக்கம் ஏற்பட்டால் தயாராகும் பொருளின் தன்மைக்கேற்ப மூலையை கவனித்து சரி செய்து கொள்ள வேண்டும். அது வீட்டிலும் அலுவலகத்திலும் ஒருங்கே நடைபெற வேண்டும்.

வாஸ்து செயல்பாடு!

வாஸ்து நீரைப் போல செயல்படுகிறது. பாத்திரத்திற்கு ஏற்றபடி சாஸ்திரம் மாறுகிறது. ஆம் தாம் இருக்கும் பாத்திரத்தில் நீர் தனது வடிவாக எடுத்துக் கொள்வதைப் போல வாஸ்து சாஸ்திரமும் உருக்கொள்கிறது.

நீரின் மேற்பரப்பில் பள்ளம் மேடு தெரியாது. மேலோட்டமாக பார்த்தால் எந்த வீட்டிலும் வாஸ்து குறைபாடு தெரியாது.

உடலின் வெளிப்புறம் குறை உள்ளவர்களை மாற்றுத்திறனாளிகள் என்கிறோம். அதேபோல் இரவல் சிறுநீரகத்தை பொருத்தி கொண்டவரை மாற்றுத்திறனாளி என்று ஏன் குறிப்பிடக்கூடாது ?

சில வீடுகள் மாற்றுத்திறனாளிகளை பெற்றிருக்கின்றன! விவாகரத்து பெற்றவர் ,குழந்தைகள் அற்றவர், அவயங்கள் செயலற்றவர் , விபத்தில் பாதிக்கப்பட்டவர் என பாதிப்புக்கு உள்ளானவர்களை உறுப்பினராக கொண்டிருக்கும் வீடுகளில் வளம் தெரியும் வாஸ்து தெரியாது!

வாஸ்து குறிப்புகள்

படிகள்

வீட்டின் வாயிற்படியில் இரட்டை எண்ணிக்கையில் அமைப்பது பாரம்பரிய பழக்கம். தலைவாசலில் உள்ள ‘லாபம்’ என்ற ரீதியில் கால் வைக்க வேண்டும் என்பது ஒரு கணக்கு.

அது வீட்டின் உயரத்தைப் பொறுத்து 2 ,4, 6 ,8 ,10 என அமையும்

முதல்படி லாபத்துடன் துவங்குகிறது அடுத்தபடி நஷ்டம் அடுத்து லாபம் வீட்டில் கால் வைக்கும்போது லாபம் வர வேண்டும் என்பது விதி.

படிகள் ஒற்றைப்படையாக வரும்போது ‘லாபம்’ வராது! படிகள் உயரத்திற்கும் நிலத்திற்கும் கணக்குகள் எதுவும் இல்லை. குறைந்தபட்சம் 3 அங்குலத்தில் இருந்து ஏழு அங்குலங்கள் வரை உயரம் இருக்கலாம்.

மாடிப்படிகளிலும் இதே கணக்கை கடைப்பிடிப்பது மனத் திருப்தி தரும்.

காம்பவுண்டு எனும் காப்பு சுவர்!

வீட்டின் காம்பவுண்ட் சுவர் நான்கு பக்கமும் ஒரே உயரத்தில் இருந்தால் பார்க்க அழகாக இருக்கும். ஆனால் சிலர் தேவைக்கேற்ப சில திசைகளில் உயர்த்தியும் தாழ்த்தியும் கட்ட விரும்புவர்.

காம்பவுண்ட் சுவர் மேற்கில் உயரமாக இருக்கலாம். மேற்கில் வீடு இருந்தால் பார்வை மறைப்புக்கும் பயன்படும்.

மேற்கை விட தெற்கில் சில அடிகள் அல்லது அங்குலங்கள் குறையலாம். மேற்கும் தெற்கும் ஒரே உயரத்திலும் இருக்கலாம். வடக்கும் கிழக்கும் சற்று தாழ்ந்து இருப்பது நல்லது.

தெற்கு மேற்க்கை விட வடக்கு மற்றும் கிழக்கு காம்பவுண்ட் சுவர்களை உயர்த்தி கட்டுவதைத் தவிர்க்கவும்.

வாஸ்து குறிப்புகள் -1 

வாஸ்து குறிப்புகள்-2 

 

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular