Thursday, December 7, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்- 14.7.2021

இன்றைய ராசி பலன்- 14.7.2021

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

இன்றைய ராசி பலன்- 14.7.2021

மேஷம் 

பேச்சில் நிதானத்துடன் இருக்க வேண்டிய நாள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவர். வழிபாடு, தியானம் மன அமைதி பெற உதவும்.

ரிஷபம் 

சிலருக்கு இருந்து வந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.

மிதுனம் 

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள் வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும் நாள்.

இன்றைய ராசி பலன்
ராசி பலன் 14.07.2021

கடகம் 

பழைய நிகழ்ச்சிகளை சிலர் அசை போடலாம். எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக் கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் சிலருக்குக் கிடைக்கும். பயணத்தின் போது உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம் 

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்பட இடம் உண்டு. வர வேண்டிய பணத்தை சிலர் போராடி வசூலிப்பீர்கள். தொழிலில் ஓரளவு லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் இறுதியில் பூர்த்தியாகும் நாள்.

கன்னி 

கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். மகிழ்ச்சியான நாள்.

துலாம் 

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

இன்றைய ராசி பலன்
ராசி பலன் 14.07.2021

விருச்சிகம் 

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

தனுசு 

பணப்புழக்கம் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் சிலருக்கு இன்று வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையவும் இடம் உண்டு. முடிந்த வரையில் பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.

மகரம் 

மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். தெளிவாகப் பேசுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கும்பம் 

இன்று மன சஞ்சலம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. வீண் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். கோபத்தைக் குறைத்து நிதானத்தால் வெல்ல வேண்டிய நாள். சிலருக்கு வீண் செலவும் இருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் தென்படும். மொத்தத்தில் நாளின் இறுதியில், சோதனையை சாதனை ஆக்குவீர்கள்.

மீனம் 

தொழிலில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்துப் போக வேண்டிய சூழல் ஏற்படும். பெண்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு குறித்து புதிய நம்பிக்கை பிறக்கும். மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோதனைகளை கடந்து சென்று இறுதியில் முயற்சியால் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பஞ்சாங்க குறிப்புகள்-14.7.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் ஆனி -29/புதன் /5123 பிலவ
ஆங்கில நாள் 14.7.2021
இன்றய சிறப்பு சமீ கெளரி விரதம் ,ஆனி உத்திர அபிக்ஷேகம்
சூரியன் உதயம் 05.58AM
சூரியன் அஸ்தமனம் 06.36PM
ராகு காலம் மதியம் 12.00-1.30
நாள் பின் இரவு 3.10 வரை கீழ் நோக்கு நாள் பின் மேல் நோக்கு நாள்
 குறிப்புகள் ஏற்கனவே தொடங்கிய செயல்களை தொடர்ந்து செய்யலாம்
எம கண்டம் காலை 7.30-9.00
நல்ல நேரம் காலை 6.00-7.30/9.30-10.30|மதியம் 2.00-3.00|மலை 4.30-6.00
திதி காலை 7.18 வரை சதுர்த்தி(வ)பஞ்சமி
நட்சத்திரம்பின் இரவு 3.10 வரை பூரம் பின் உத்திரம்
சந்திராஷ்டமம் திருவோணம் ,அவிட்டம்
யோகம்  அமிர்தயோகம்
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular