Friday, June 14, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்ரிஷப ராசி -ரிஷப லக்னம்

ரிஷப ராசி -ரிஷப லக்னம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ரிஷப ராசி -ரிஷப லக்னம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களின் தன்மைகள்:

 • பாவம் பழிக்கு அஞ்சுபவன்.
 • எல்லோருக்கும் உதவி செய்பவன்.
 • தன் தாய் தந்தையரை தன்னை விட அதிகமாக நேசித்த பாதுகாப்பான்.
 • தன் சத்துருக்களை வென்று ஒடுக்க வல்லவன்.
 • பிறருக்கு இரக்கபட்டு தன் சம்பாதித்த பொருளை தாராளமாகக் கொடுத்து உதவும் பெருந்தன்மை உடையவனாகவும் இருப்பான்.
 • இவன் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பவனாகவும், கலை அனுசரணை உடையவனாகவும் இருப்பான்.
 • ராசி அதிபதி சுக்கிரன். கலைகளுக்கும் அதிபதி காரகன்.
 • ராசி மண்டலத்தில் இது இரண்டாவது ராசி ஆகும்.
 • இதன் அதிபதி சுக்கிரன்.
 • இது பஞ்சபூதங்களில் மண்.
 • ஸ்திர ராசி.
 • பெண்பால், ஈரத் தன்மை உடையது.
 • அரை சுபத்துவம் உடையது.
 • இது ப்ரஷ்ட உதய ராசியாகும்.
 • இதன் வடிவம் காளை.
 • இங்கு சந்திரன் உச்சம்.
ரிஷப ராசி
ரிஷப ராசி
 • இந்த ராசிக்காரர்கள் நிறைந்த பொறுமைசாலிகள்.
 • எவ்வளவு உழைப்புக்கும் அஞ்சாதவர்.
 • கடைசி வரை பொறுமை சாதிக்கும் இவர்கள் கோபம் வந்துவிட்டால் எரிமலை ஆகிவிடுவர்.
 • அடக்கமாக இருந்தாலும் முரடர்.
 • இது ஸ்திர ராசி ஆகையால் திடசித்தம் உண்டு.
 • பணத்தில் சிக்கனம் உண்டு.
 • போஜனப் பிரியர்.
 • இனிப்பு விரும்பி உண்பர்.
 • சுக சௌக்கியபிரியர்.
 • வாழ்க்கையில் எல்லா சௌரியங்களையும் அனுபவிப்பர்.
 • எப்போதும் உற்சாகம், பந்து ஜனங்களால் விரும்பப்படுபவர்.
 • அதிர்ஷ்டக்காரர்.
 • திருமகள் விலாசம் நிரம்பப் பெற்றவர்.
 • வாகனம், வீடு தோட்டம் முதலிய சொத்துக்கள் உடையவர்.
 • நல்ல வாக்கு லாவண்யம் குரலினிமை உடையவர்.
 • மற்றவர் அபிப்பிராயங்களுக்கு இணங்காதவர்.
 • நிதானமாகத்தான் வாழ்வில் முன்னேறிக் கொண்டிருப்பவர்.
 • எதையும் நிதானமாக திட்டமிட்டு செயலாற்றுபவர்.
 • காதல் விவகாரங்களில் அதிக ஈடுபாடு உண்டு. ஆனால் நிதானமாகவே செல்வர்.
 • முடிவு செய்த பின் அதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
 • பாலுணர்வு இவர்களுக்கு மிக அதிகம். அதை பலவழிகளிலும் பூரண திருப்தியுடன் அனுபவிப்பர்.
 • நல்ல கலை உணர்வு உண்டு.
 • சங்கீத நாடகப் பிரியர்.
 • சினிமா நடிப்பு துறையும் இவர்களுடையது தான்.
 • பணம் சம்பாதித்து அதை உல்லாசமாக செலவழிக்கவும் தெரிந்தவர்.
ரிஷப ராசி
ரிஷப ராசி

உருவம் :

 • நடுத்தரமான சதைப்பற்றுள்ள தோற்றம் உள்ளவர்.
 • அகன்ற நெற்றி, கருகருவென சுருள் சுருளான மயிர், பெரிய கண்கள், அழகிய முகம், வட்டமானது, சிவந்த பளபளக்கும் மேனி, ஆண்களும், பெண்களும் நளினத்தையும், அழகு, கவர்ச்சி இவற்றையும் உடையவர்.
 • அப்படியானால் பெண்களைப் பற்றி கேட்க வேண்டியதே இல்லை.
 • இந்த ராசி பெண்கள் பூரண அழகிகள். பொன்னொளி மேனி, நல்ல புஷ்டியான எடுப்பான கவர்ந்து இழுக்கும் தோற்றம், இவர்கள் அசைவும் ஒயிலும் தனிப்பட்டவை இவர்கள் பேச வேண்டியது இல்லை இவர்கள் உருவ அழகிற்கே ஆண்கள் அடிமை ஆகி விடுவர்.
அமையும் வேலைகள் :
 • நளின உழைப்பினர்.
 • சொகுசு வேலைகளை செய்ய விரும்புவார்கள்.
 • உல்லாச பொருள்கள், வாணிகம், கம்பளி, பட்டு, வியாபாரம், சோப்பு, சென்ட் போன்ற வாசனைப் பொருட்கள் இவற்றின் மூலம் நிறைய பொருள் ஈட்டுவர்.
 • பேங்க் நிர்வாகம், நீதித்துறை அலுவல்கள், பந்தயம் நடத்துபவர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், ரேஸ் என்று வெல்லுதல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உண்டு.
 • உழவு விவசாயம் இவற்றிலும் இவர்களுக்கு லாபம் உண்டு என்பதை இவர்கள் ராசி (மண்) ராசியகையாலும் இந்த ராசியின் உருவம் காளை என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

வீட்டு நிலை:

 • இதில் பிறந்த ஆண்கள் நல்ல வீட்டு வாழ்வு உடையவர்கள். எல்லாம் வசதியும் செய்து வைப்பார்கள்.
 • இந்த ராசி பெண்கள் “மனைக்கு விளக்கம் மடவார்” என்ற வாக்கிற்கு உதாரணமாய் இல்லத்தரசிகளின் சிறந்தவர்கள்.
 • இவர்களை அடைந்த கணவன்மார்கள் பாக்கியசாலிகள்.
 • ஏனென்றால் வீட்டுக்குள் எல்லாத்தையும் கவனித்துக் கொள்வார்கள்.
 • உருவத்தில் கவர்ச்சியும் உழைப்பில் சலிப்பில்லாத இவர்களுக்குள் கணவன்மார்கள் அடங்கி மகிழ்வதில் வியப்பில்லை.
 • தாயாகவும் மனைவியாகவும் இருவகை கடமைகளை ஒரேசமயத்தில் செய்வதில் மிக சமர்த்தர்.
 • கொஞ்ச நேரத்தில் இவர்களுக்கு சினம் வராது. இதனாலேயே இவர்களை ஆண்கள் உரிமையாக்கிக் கொள்ள விரும்புவர்.

பொதுவான தகவல்கள் :

 • அதிர்ஷ்ட கிழமை-வெள்ளி அடுத்தது திங்கள்.
 • அதிர்ஷ்ட நிறம்-எல்லா வெளிர் நிறங்கள்.
 • அதிஷ்ட எண் 6,5
 • அதிஷ்ட கல்-ரத்தினம், வைரம் .
 • வைரம் அணிய வசதி இல்லாதவர்கள் வெள்ளியில் மோதிரம் அணியலாம்.
ரிஷபம் லக்னமாக வந்தால் அதன் பலன்:
 • ஸ்தூலதேகவான், களஸ்திர தோஷம், சத்தியவான், சுபகாரியபரன், பிறர் சொத்தை கிரகிக்க வல்லவன். மனோகபடி, புருஷ வசியன், வஸ்திராபரணமுள்ளவன்.
 • குணதோஷமறிவன். அடிமை உள்ளவன்,
 • பிற்கால புத்திரருடையவன்.
 • 15, 13, 16, 19, 20 இந்த வயதுகளில் சுரம் கண்டத்தால் வியாதி, பயம், சிரங்கு இவைகளால் பீடை.
 • இந்த லக்கினத்தை சுபகிரகங்கள் பார்த்தால் 77 வயது வரை இருப்பான்.
 • சூரியனும் சனியும் நல்லவர்கள்.
 • சனி ஒருவனே மேலான ராஜயோகம் கொடுப்பான்.
 • சந்திரனும் வியாழனும் சுக்கிரனும் பாபிகள், சந்திரன் வியாழன் செவ்வாய் மாரகன். புதன் கொல்லான். வியாழன் முதலானோர் கொல்லுவர்.
 • மாரக ஸ்தானம் ஆகிய 2,7,8,12 ல் மரணத்திற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.
 • சந்திரன் வியாழன் கிரகங்களை ஆராய்ந்து அவர்கள் நிலைகளை அறிந்து சொல்லவும்.
ரிஷப ராசி
ரிஷப லக்கினம்

இந்த லக்னத்திற்கு நல்லவர்கள் கெட்டவர்கள்:

 • 9, 10-க்குடைய சனி ஒருவனே உத்தம ராஜ யோககாரகன். சுக்கிரன் 6க்குடையவன் ஆனாலும் லக்னாதிபதியாகையால் அசுபம் குறைவு.
 • புதன் 2,5 குடையவன் ஆகையால் ராஜயோககாரன். புதன் சுக்கிரன் இருவரும் வலுத்தால், புலவன், கலைஞன்.
 • சந்திரன் 3 குடையவன் அதனால் அசுபன்.
 • சூரியன் 4க்குடையவன் ஆகிலும் சுபனே.
 • செவ்வாய் 7, 12-க்குடையவன் ஆகையால் அசுபன்
 • குரு 8 ,11-க்குடையவர் ஆகையால் அசுபன்

சுப யோகங்கள்:

 • சூரியன்+புதன்
 • சூரியன்+சனி
 • சூரியன்+சுக்கிரன்
 • புதன்+சுக்கிரன்
 • புதன்+சனி
 • சுக்கிரன்+சனி
 • இந்த லக்னத்திற்கு குரு செவ்வாய் மாரகன் சந்திரன் குரு அசுபன் சனி ஒன்பதாம் அதிபதி என்றவகையில் பாதகாதிபதி.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்97குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20அற்புத ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular