மாந்தி தரும் அசுபயோகங்கள்
வஞ்சன, சோர, யோகங்கள்:
லக்னத்தில் பாவிகள் இருந்து அதனுடன் மாந்தி இருக்க அல்லது மாந்தியானவர் கேந்திராதிபதி அல்லது திரிகோண அதிபதிகள் உடன் இருந்தால் ,அல்லது லக்னாதிபதி ராகு, சனி அல்லது கேதுவுடன் இருந்தால் இந்த யோகம் ஏற்படும்.
பலன்கள்:
இந்த நிலையில் உள்ள ஜாதகர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களை சந்தேகத்துடன் பார்ப்பார்கள். தன்னை ஏமாற்றுவார்களா, சுரண்டுவார்களா, கொள்ளை அடிப்பார்களா என்ற பய உணர்வு உள்ளவர்கள்.
ஜட யோகம்:
இரண்டாமிடத்து அதிபதி பத்தாம் இடத்தில் பாவிகள் உடனிருக்க, இரண்டாம் இடத்தில் சூரியனும் மாந்தியும் சேர்ந்து இருந்தால் இந்த யோகம் ஏற்படும்.
பலன்கள்:
பொது இடங்களில் நடுங்குவார்கள்.
கபட யோகம்:
4-ஆம் இடத்து அதிபதி சனி, மாந்தி அல்லது ராகுவுடன் சேர்ந்து இருந்து 4ம் வீட்டை பாவிகள் பார்த்தால் கபட யோகம் ஏற்படும்.
பலன்கள்:
ஆழ்ந்த ஈடுபாட்டினால் குடும்ப குன்றியவர்

சர்ப்ப கண்ட யோகம்:
ராகுவும் மாந்தியும் சேர்ந்து இரண்டாம் இடத்தில் அமர்ந்தால் சர்ப்ப கண்ட யோகம் ஏற்படும்.
பலன்கள்:
ஜாதகருக்கு பாம்பு கடிக்கும் நிலை ஏற்படும்.
காலகர்ண யோகம்:
சஷ்டியாம்சத்தில் மூன்றாமிடத்தில் ராகு, மாந்தி அல்லது மாந்தி செவ்வாய் சேர்ந்து இருந்தால் இந்த யோகம் ஏற்படும்.
பலன்கள்:
ஜாதகருக்கு காது மந்தமாக அல்லது காதில் பிணிகள் ஏற்படும்.
க்ஷயரோக யோகம்:
6-ல் ராகு அமர்ந்திருக்க, கேந்திரத்தில் மாந்தி அமர, லக்னாதிபதி 8-ல் இருப்பின் இந்த யோகம் ஏற்படும்.
பலன்கள்:
ஜாதகருக்கு க்ஷய ரோகம் ஏற்படும்.
துர்மரணம் யோகம்:
லக்னத்திலிருந்து 6, 8, 12-ஆம் இடத்தில் சனி, மாந்தி, ராகுவுடன் இருக்க, லக்னத்தையும் சந்திரனையும் பார்த்தால் இந்த யோகம் ஏற்படும். பல ஜாதகர் மரணம் துர்மரணம் ஆகும்.
யுத்த மரணயோகம்:
6,8-ம் பாவாதிபதியாக செவ்வாய் இருக்க, மூன்றாம் இடத்தில் ராகு, சனி அல்லது மாந்தி கொடூர அம்சத்தில் இருந்தால் அது யுத்த மரண யோகம் ஆகும்.
பலன்கள்:
ஜாதகர் யுத்தத்தில் கொல்லப்படுவார்.
அபுத்திர யோகம்:
ஜென்ம லக்னத்திற்கு 5ஆம் பாவமாக சனி புதன் இவர்களின் ராசிகள் ஆகி அங்கு சனி மாந்தி இவர்கள் கூடி இருந்தாலும், சனி மாந்தி இவர்களால் மேற்படி புத்திரதோஷம் பார்க்கப்பட்டாலும், அப்போது ஜாதகருக்கு தத்து முதலியவை மூலம் சந்ததி உண்டாகும்.
- ஜென்ம லக்னம் சிம்மமாகி, தனுசு ராசி கேஷத்திரமாகி மேற்படி கிரகங்கள் சனி, மாந்தி இவர்கள் அங்கு இருந்தால் ஜாதகன் (குரூரமான) அற்ப சந்ததி உடையவன்.
- ஜென்ம லக்னம் மீனமாகி கடகம் கேஷத்திரமாகி மேற்படி சனி ,மாந்தி இருந்தால் சந்ததி இல்லாதவன்.
தரித்திர யோகம்:
மாந்தி உதய நேரம் ஆனது தியாஜ்ய காலமாக (விஷக்கடிகை)நேரமாக இருப்பின், அந்த ஜாதகர் கோடீஸ்வரன் ஆனவனாகவும், பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்.
பகுஸ்திரீ யோகம்:
ராசியில் 4ம் இடத்து அதிபதி அம்சத்தில் எதிரி வீட்டில் அமர்ந்திருந்தாலும், பாவிகள் அல்லது மாந்தியுடன் கூடி இருந்தாலோ, மாந்தி அல்லது பாவிகளால் பார்க்கப்பட்டாலும், அந்த ஜாதகர் பல பெண்கள் தொடர்புடையவர். ஜாதகி ஆனால் பல ஆண்களுடன் தொடர்பு உடையவர் ஆவார்.