Sunday, October 1, 2023
Homeஜோதிட குறிப்புகள்முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-7

முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-7

ASTRO SIVA

google news astrosiva

ஜோதிட குறிப்புகள்-பகுதி-7

  • லக்னாதிபதி 2, 8, 12-ஆம் இடங்களில் ஒன்றிலிருந்து கேந்திரங்களில் பாவகிரகங்கள் குடியேறி, செவ்வாயும்-சனியும் லக்னத்தில் இருந்தால் ஜாதகர் நோய்வாய்ப்பட்டவர் ஆவார்.
  • ராகு லக்னத்தில் இருந்து சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியோர் பலவீனம் பெற்று கேந்திரங்களில் இருந்தால் ஜாதகருடைய செயல்கள் உயர்மட்டத்தில் இராமல் போகநேரும்.
  • மீனம் லக்னமாகி அந்த இடத்தில் சுக்கிரன் ஆனவர் கடைசி நவாம்சத்தில் உச்ச கதியில் இருப்பாரானால் ஜாதகர் ஒரு அரசனுக்கு நிகரான யோகத்தை பெற்றிருப்பார்.
  • மேஷ லக்னமாகி சுக்கிரன் தனது நட்சத்திரம் ஆகிய பரணியில் குடிகொண்டு சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால்,ஜாதகருக்கு வாழ்வும் உயர்ந்த ஸ்தானமும் உண்டாகும்.
  • லக்னத்தில் பலமுள்ள புதன் இருந்து ஒன்பதாம் இடத்தில் பலமுள்ள ஒரு சுபக்கிரகம் இருக்க பெற்று, 2, 3, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் சேர்ந்தோ, தனித்தோ மற்ற கிரகங்கள் இருக்குமானால், ஜாதகர் வாழ்வில் உயர்ந்த ஸ்தானத்தை அடைவதுடன் அமைச்சராகவோ, மேலதிகாரியாகவோ விளங்க வாய்ப்பு உண்டாகும்.
  • செவ்வாயும் சனியும் லக்னத்திலிருந்து சந்திரன் 4-லும், குரு 7-லும், சுக்கிரன் 9-லும், சூரியன் 10-லும், புதன் 11-ல் சனியும் இருந்தால், ஜாதகர் நாடாளும் தகுதி பெறுவார்.
  • லக்னத்தில் குரு இருந்து, 2-ல் செவ்வாயும், 4-ல் சூரியனும்-சுக்கிரனும், 10-ல் சந்திரனும், 11-ல் சனியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றியும், நாடாளும் தகுதியும் ஏற்படும். இந்த கிரகங்கள் நீசம் பெற்று இருக்கக் கூடாது.
ஜோதிட குறிப்புகள்
  • புதன், குரு, சுக்கிரன் மூவரும் லக்னத்திலிருந்து சனி 7-ல் இருந்தால், ஜாதகர் சுகபோக வாழ்வையும், செல்வத்தையும் பெறுவார்.
  • லக்கினத்தில் குருவும், 7-ல் சனியும், 10-ல் சூரியனும் இருந்தால் சுபிட்சமும் சுகமும் ஏற்படும்.
  • மேஷலக்னமாகி, அதில் சூரியன் இருந்து, தனுசில் குருவும், துலாத்தில் சந்திரன்-சனி இருவரும் இருந்தால் ராஜயோகம் உண்டாகும்.
  • மகரம் உதய லக்கினமாகி, சந்திரனும் செவ்வாயும் அதிலிருந்து, சூரியன் தனுசில் இருந்தால், ஒருவித ராஜயோகம் உண்டாகும்.
  • மகர லக்னத்தில் பிறந்து செவ்வாய், சனி இருவரும் அதிலிருந்து சூரியனும், சந்திரனும் 12-ல் இருந்தால் ஒரு உன்னதமான ராஜயோகம் உண்டாகும்.
  • 3, 6, 10, 11-ம் இடங்களில் சுக்கிரன், குரு, புதன் ஆகிய மூவரும் இருந்தால் ஜாதகருக்கு செல்வம் சேரும்.
  • புதன், குரு, சுக்கிரன் மூவரும் 6, 7, 8 ஆகிய இடங்களில் இருந்தால் ஜாதகருக்கு செல்வ யோகம் ஏற்படும்.
  • 2-ம் வீட்டில் சுப கிரகம் இருந்து, அவர்கள் பாவ கிரகங்களால் பார்க்கப்படாமல் இருந்தால், ஜாதகனுக்கு செல்வமும், தோற்றப் பொலிவும் உண்டாகும்.
  • இரண்டாம் வீட்டுக்குரிய கிரகம் வலுத்து ,2-ஆம் வீட்டில் லக்கினாதிபதி பலத்துடன் இருந்து கூடவே சுக்கிரனும் இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு சுகமும் பொருளும் அதிகாரமும் அமையும்.
ஜோதிட குறிப்புகள்
  • பலமில்லாத சந்திரனை பலமில்லாதா லக்னாதிபதி பார்த்தால் ஜாதகர் வறுமையின் வாய்ப்பட்டு அல்லல் பட நேரும்.
  • லக்னாதிபதி பலம் பெற்று, ஒன்பதாம் வீட்டு அதிபதி உச்சம் பெற்று இருந்தால் ஜாதகர் நிறையப் படித்து புகழ் பெற்று, மனைவி மக்களுடன் ஏராளமான சொத்துக்களுடன் சிறப்பாக வாழ்வார்.
  • லக்கினாதிபதி உச்சம் பெற்று சந்திரனை நோக்கினால், ஜாதகருக்கு செல்வம் சேரும். மேலும் ஜாதகர் சுகம் அனுபவிப்பார். பகைவரை வெல்லுவார்.
  • லக்கினாதிபதி பலம் பெற்று சந்திரன் இருக்கும் ராசி அதிபதி உடன் கூடியோ, அல்லது பார்த்தோ இருக்க பெற்று லக்னத்தை நோக்கினால், அந்த ஜாதகர் வாழ்வில் உற்சாகம் பெறுவார். எக்காரியத்திலும் உற்சாகத்துடன் ஈடுபட்டு வெற்றி திருமகளின் திருவருளைப் பெறுவார்.
  • சுக்கிரன் நீசம் பெறாமலும், பகை வீடு புகாமலும் இரண்டாம் வீட்டில் இருந்து, லக்னாதிபதி பலம் பெற்று இருந்தால், ஜாதகர் செல்வமும் அந்தஸ்தும் வாழ்க்கை வசதியும் பெறுவார்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular