Saturday, December 2, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்கிருத்திகை நட்சத்திரம்-2ம் பாதம் பிறந்தவர்கள் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

கிருத்திகை நட்சத்திரம்-2ம் பாதம் பிறந்தவர்கள் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

கிருத்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

 • கிருத்திகை இரண்டாம் பாதத்தில் பிறந்தவன் எல்லோரையும் தரம்பிரித்து போற்ற வல்லவன்.
 • இவன் வாழ்க்கையில் ஈட்டும் பொருள் சிலகாலம் குறைவாகவும், சில காலம் அதிகமாகவும் இருக்கும்.
 • இவன் எந்த காரியத்தையும் ஒழுங்காக செய்ய மாட்டான்.
 • இவன் செய்யும் காரியங்கள் எல்லாம் சிதைந்து போகும் அதாவது கெட்டுப்போகும்.
 • அதிகம் பொய் சொல்வான்.
 • இவன் மனதை பிறர் அறிய முடியாது.
 • எந்த காரியத்தையும் செப்பமாக செய்யும் திறன் இவனுக்கு கிடையாது.
 • இந்த கிருத்திகை 2ஆம் பாதம் சனியின் நவாம்சம் ஆகும்.
கிருத்திகை நட்சத்திரம்

கிருத்திகை 2ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்

சூரியன் நின்றால்:

 • தீர்க்காயுள் உள்ளவன்.
 • தன் குழந்தைகளால் சுகம் மகிழ்ச்சி உண்டு.
 • தன் நடுவயதில் வயதிலிருந்து இவனுக்கு பணம் சேரும்.
 • மன உறுதி உள்ளவன்.
 • தெய்வீக நாட்டமும், கோவில் அர்ச்சகர் பூசாரி அல்லது பாதிரியார் இந்த நிலைகளில் பணம் செய்ய தீவிர ஈடுபாடு உள்ளவன்.
 • இசையில் ஆர்வம் உள்ளவன்.
 • போட்டி பந்தயங்களில் ஈடுபாடு உண்டு.
 • செவிலித்தொழில்,மருந்து கலக்குனர், தொழு நோய் மருத்துவர் இப்படிப்பட்ட நிலைகளில் இவர்களை காணலாம்.
 • சில சமயம் இவர்களுக்கு கழுத்துப் பிடரி அல்லது வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

சந்திரன் நின்றால்:

 • அந்தஸ்தும் அழகும் தோற்றப்பொலிவு உள்ளவன்.
 • அறிஞர் பெருமக்களிடையே பெரிதும் பழகுபவன்.
 • பித்தரேகம் உள்ளவன்.
 • இந்த பாதத்தில் நின்ற சந்திரனை சனி பார்த்தால் விரைவில் தாய் காலமாவாள்.
 • ரசாயனம், மண் பரிசோதனை முதலியவற்றில் ஈடுபாடு இருக்கும்.

செவ்வாய் நின்றால்:

 • நெற்றியில் அடிபடும், கண்களில் காயம் ஏற்படலாம்.
 • நரம்புத்தளர்ச்சி, கண் நோய், தொண்டைப்புண் முதலிய நோய்கள் ஏற்படலாம்.
 • விருந்தினர்களை தாராளமாக உபசரிக்கும் குணமுள்ளவன்.
 • எல்லோருடனும் எளிதாக பழகுவான்.ஆனால் பழி வாங்கும் குணமும் உண்டு.
 • இந்த செவ்வாயுடன் ஆதிபத்திய அசுபத்துவம் கொண்ட சுபர்கள் சம்பந்தம் பெற்றால், இவனுக்கு ஆண் சந்ததி இராது.
 • பொறியியல் வல்லுநராகவும், போர் தளவாட உற்பத்தியால் நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பும் உண்டு.
கிருத்திகை நட்சத்திரம்

புதன் நின்றால்:

 • மிகவும் சந்தோஷமாகவும் எப்பொழுதும் தெம்பாகவும் இருப்பவன்.
 • ஒன்றுக்கு மேல் தாரம் உண்டு.
 • பருத்த உருவம், நிறைய செல்வம், தன் குழந்தைகளால் மகிழ்ச்சி எல்லாம் உண்டு.
 • 40 வயதுக்கு மேல் இவன் துறவு மேற்கொள்ளலாம்.
 • இந்த புதனுடன் குரு சேர்ந்தால் ஜோதிடம் மற்றும் அமானுஷ்ய கலைகளில் வல்லவன் ஆவான்.

குரு நின்றால்:

 • மத சடங்குகள் ஸ்தாபனங்கள் முதலியவற்றால் பெரும் புகழ் அடைவான்.
 • நெட்டையான தோற்றம் உள்ளவன்.
 • தாயிடம் மிகவும் பாசம் உள்ளவன்.
 • இவனுடைய பலவீனம் என்னவென்றால் இளம்பெண்களுடன் சுற்றுவதே.

சுக்கிரன் நின்றால்:

 • உத்தியோகத்தில் அல்லது கடற்படையில் பணி செய்வான்.
 • இந்த பிறவி பெண்ணனால் இந்த சுக்கிரனை சந்திரன் பார்த்தால் அடிக்கடி மாதவிலக்கு கோளாறுகள் உண்டாகும்.
 • குழந்தைகள் அதிகம் பிறக்கும். ஆனால் சிலவே உயிர்வாழும்.

சனி நின்றால்:

 • இவன் தன்னை விட மூத்த பெண்ணை மணப்பான். அல்லது தன்னை விட வயதானவளோடு உடல் உறவு கொள்வான்.
 • இவனுக்கு திருப்தியான வாழ்க்கை அமையாது.
 • குடும்பத்தில் சுகம் நிம்மதி இராது.

ராகு நின்றால்:

 • ஆன்மீகத்தில் பற்றுள்ளவன்.
 • இவனுக்கு செல்வமும் குழந்தைகளும் அழியும்.
 • இவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு உண்டு.
 • வெளிநாட்டில் சம்பாத்தியம் இருக்கலாம். அல்லது மிகவும் ஏழையாகி பிச்சை எடுக்கவும் நேரலாம்.

கேது நின்றால்:

 • இவன் உற்றார் உறவினரைப் பிரிந்து நெடுந்தொலைவில் வாழ்வான்.
 • மது, மாது இவற்றில் அதிக நாட்டம். பொருள் இல்லாத ஏழ்மை வாழ்க்கை உள்ளவன்.

கிருத்திகை 2-ஆம் பாதத்திற்கு காலசக்கர தசை:

மகர சனிதசை4வருடம்
கும்ப சனிதசை4வருடம்
மீன குருதசை10 வருடம்
விருச்சிக செவ்வாய்தசை 10 வருடம்
துலாம் சுக்கிரன்தசை 16 வருடம்16 வருடம்
கன்னி புதன்தசை 9 வருடம்
கடக சந்திரன்தசை 21 வருடம்
சிம்ம சூரியன்தசை 5 வருடம்
மிதுன புதன்தசை9 வருடம்
ஆக பரமாயுள் 85 வருடம்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular