Saturday, July 27, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்துவாதச பாவங்களில் சந்திரன் நின்ற பலன்-புலிப்பாணி

துவாதச பாவங்களில் சந்திரன் நின்ற பலன்-புலிப்பாணி

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

துவாதச பாவங்களில் (Moon) சந்திரன் நின்ற பலன்

2ல் சந்திரன்

  • வெண்மதி ஆகிய சந்திரன் இரண்டாம் இடத்தில் நின்றால் வித்தை, புத்தி ,நல்ல வாலிப வயதில் திருமணம் செய்வான்.
  • மேலும் சன்மார்க்கத்தை போதிக்கும் குணமுள்ளவன், அநேகவித சம்பத்து புத்திர யோகம் உடையவன்.
  • சந்திரனைப் போன்று அழகான முகம் உடையவன்.
  • சந்திரன் நட்பு,ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் மேற்கூறிய சுப பலன்கள் நடைபெறும்.
  • பகை,நீசம் பெற்று அசுபர் பார்வையுடன் இருந்தால் மேற்கூறிய அதற்கு நேர் மாறான பலன்களே நடைபெறும்.

3ல் சந்திரன்

  • சந்திரன் மூன்றில் இருந்தால் நல்ல ஆபரணாதி வஸ்துக்களை காதில் அணிவான்.
  • நல்ல அறிவுக் கூர்மை உள்ளவன்.
  • சற்று கர்வம் பிடித்தவன்.
  • மழலைமொழி மேல் விருப்பம் உள்ளவன்.
  • சந்திரனைப் போல் வாழ்ந்திருப்பான்.
  • நல்ல பெண் துணை உடையவன்.
  • பாக்கியவான், மிகுந்த பொறுமைசாலி.

4ல் சந்திரன்

  • சிறப்பு பொருந்திய சந்திரன் 4ம் இடத்தில் நிற்க பரஸ்திரீ மோகமுள்ளவன்.
  • மாடு,குதிரை, மனைகள் உண்டு.வித்தையில் வல்லவன்.

5ல் சந்திரன்

  • சந்திரன் 5-ம் பாவத்தில் நின்றால் ஜாதகருக்கு பெண் குழந்தைகள் அதிகம் உண்டாகும்.
  • மேலும் இப்புவியில் சீமானாய், செல்வ சிறப்புடன் வாழ்வார்.
  • சந்திரன் சுப பலம் பெற்றிருந்தால் மேற்கூறியவாறு சுப பலம் உண்டாகும்.
  • பலவீனமாக இருந்தால் மேற்கூறிய அதற்கு மாறான பலன்கள் நடைபெறும்.
  • சுபம் பாவம் கலந்து சந்திரன் சமமாக இருந்தால் இன்பம் துன்பம் இரண்டும் கலந்து நடைபெறும்.
  • நினைத்ததை சாதிக்க கடுமையாகப் போராட வேண்டியது வரும்.
சந்திரன் நின்ற பலன்

6ல் சந்திரன்

  • சிறப்பு பொருந்திய சந்திரன் 6-ம் இடத்தில் நிற்க அந்த ஜாதகனுக்கு நீரால் பயமும், ரோக பயமும் உண்டாகும்.
  • மேலும் அரசின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
  • தேசம் எங்கும் அலைந்து திரிந்து வயிற்றுப் பசியை தீர்ப்பான்.

8ல் சந்திரன்

  • சந்திரன் 8-ம் இடத்தில் நிற்க அந்தக்குழந்தை பலவித கலைகளில் தேர்ச்சி பெற்று விளங்குவான்.
  • அதேசமயம் மலக்கழிச்சல், நீர் பயம், முதலியவற்றால் வருந்துவான்.

7ல் சந்திரன்

  • வளர்பிறைச் சந்திரன் 7-ம் இடத்தில் நின்றால் அந்த ஜாதகர் தனவந்தனாகவும், மற்றவர்களை அன்புடன் ஆதரிப்பவனாகவும் இருப்பான்.
  • காதலியால் நல்ல அனுகூலமான பலன்களை அடைபவனாகவும், கற்புடைய பெண்ணை மனைவியாக அடைபவனாகவும் இருப்பான்.
  • திருப்பாற்கடலில் வாசம் செய்யும் திருமால் அருளால் செல்வ சீமானாக வாழ்வான்.
  • இருப்பினும் சந்திரனின் இருப்பிடம் அதன் வலிமையை அறிந்து சரியான செய்தியை கூற வேண்டும்.

9ல் சந்திரன்

  • வளர்பிறைச் சந்திரன் பாக்கிய கோணத்தில் ஏற, ஜாதகர் பாக்கியவனாகவும், தெய்வபக்தி நிறைந்தவனாகவும், காம உணர்வு மிகுந்தவனாகவும் இருப்பான்.
  • மேலும் பரஸ்திரீ பிரியன், புத்திரபாக்கியம் நிறைந்தவன்.

10ல் சந்திரன்

  • வளர்பிறை சந்திரன் 10-ம் இடத்தில் நிற்க அந்தப் பாலகன் தனலாபமுள்ளவன், பாக்கியவான், மேலும் பல தீர்த்தமாடி உல்லாசமாய் வாழ்வான்.

11ல் சந்திரன்

  • வளர்பிறைச் சந்திரன் 11-ல் நிற்க மாதுர் வழி ஜனங்களால் லாபம் உண்டு.
  • மேலும் மாந்த்ரீக கலையில் வல்லவனாகவும், சுகபோகம் உள்ளவனாகவும், வீரனாகவும், தீர்க்காயுள் நிறைந்தவனாகவும் இருப்பான்.

12ல் சந்திரன்

  • சந்திரன் 12ல் நின்றால் தாயால் பொருள் நஷ்டம் உண்டாகும்.
  • சந்திரனின் வலிமையையும் அதன் இருப்பிட சிறப்பையும் அறிந்து சரியான பலன்களை எடுத்துரைக்க வேண்டும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular