Rasi Palan Today-02.08.2021
மேஷம்-Mesham
மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள் . தலைமையின் ஆதரவுடன் சாதிக்கும் நாள்.
ரிஷபம்-Rishabam
மகிழ்ச்சியான நாள். தேவையான பணம் கையில் இருக்கும். அதனால் தேவைகளை சமாளிப்பீர்கள். இளைய சகோதரர் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரியின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்-Mithunam
அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு தொலை தூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தான் இருக்கும்.
கடகம்-Kadagam
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
சிம்மம்-Simmam
சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோ கத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
கன்னி -Kanni
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
துலாம்-Thulam
சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். மற்றவர்களுடன் வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். வியாபாரம் சற்று மந்தமாகத்தான் இருக்கும்.
விருச்சிகம்-Viruchigam
சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
தனுசு-Thanusu
உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.
மகரம்-Magaram
இன்று பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குறிப்பாக உடன் இருப்பவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம்-Kumabm
பழைய தவறுகளை நினைத்து வருந்த நேரிடலாம். உத்யோகத்தில் மகிழ்ச்சியும், வெற்றியும் காண்பீர்கள். வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளால் நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் சில விஷயங்களைச் சீர் செய்து லாபத்தை பெருக்க முயல்வீர்கள்
மீனம்-Meenam
அவமதித்து பேசியவரும் அன்பு பாராட்டுவர். தொழில் வளர்ச்சியால் புதிய சாதனை ஏற்படும். கூடுதல் பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
பஞ்சாங்க குறிப்புகள் மற்றும் கிரக நிலைகள் -02.08.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் | ஆடி -17/திங்கள் /5123 பிலவ |
ஆங்கில நாள் | 02.08.2021 |
இன்றய சிறப்பு | கார்த்திகை விரதம் |
சூரியன் உதயம் | 05.53AM |
சூரியன் அஸ்தமனம் | 06.37PM |
ராகு காலம் | 7.30AM -09.00AM |
நாள் | கீழ் நோக்கு நாள் |
குறிப்புகள் | – |
எம கண்டம் | 10.30AM -12.00AM |
நல்ல நேரம் | காலை6.15-7.15|மாலை 4.45-5.45 |
திதி | நவமி -தசமி |
நட்சத்திரம் | கிருத்திகை |
சந்திராஷ்டமம் | துலாம் ராசி |
யோகம் | மரணயோகம் |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |