Rasi Palan Today-05.08.2021

மேஷம்-Mesham
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
ரிஷபம்-Rishabam
பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். தொழிலில் புதிய இனங்களில் முதலீடு செய்வீர்கள். காதலில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் தேவை.
மிதுனம்-Mithunam
வியாபாரிகள் நீண்ட நாளாக எதிர்பார்த்து வந்த தனவரவு உண்டாகும். குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது நல்லது. முக்கிய பிரமுகரின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு சில ஆலோசனைகளை வழங்கி நல்ல பெயர் எடுப்பீர்கள்.
கடகம்-Kadagam
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். அலுவலகப் பணிகளை குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.
சிம்மம்-Simmam
உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப் பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
கன்னி -Kanni
சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பணிகளை குடும்பத்தினர் பகிர்ந்துகொள் வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
துலாம்-Thulam
நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களை உங்களுடன் ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் எதிலும் கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
தனுசு-Thanusu
உங்களின் பேச்சில் அனுபவ அறிவுவெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர் கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.
மகரம்-Magaram
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எனினும், உடனுக்குடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். தாய்மாமன் வகையில் நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று சிலருக்கு கிடைக்கக் கூடும். வாழ்க்கைத் துணை வழியில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படும். வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும். எனினும், தேவைகள் இறுதியில் நிறைவேறும்.
கும்பம்-Kumabm
வியாபாரிகளுக்கு அரசால் அனுகூலம் உண்டு. நட்பு வட்டாரத்தில் விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. மேலதிகாரியின் உதவியால் பணிகளில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
மீனம்-Meenam
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். பெண்களின் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பர். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சியை மேலதிகாரி பாராட்டுவார்.