Rasi Palan Today-09.08.2021

மேஷம்-Mesham
இந்த நாள் முயற்சிகளுக்கு உரிய நல்ல பலனை தரும் நல்ல நாள். தனலாபம், எதிரிகளை வெல்லும் ஆற்றல் என அனைத்தும் இந்த நாளில் சித்திக்கும். சமூகத்தில் கூட உங்களது மதிப்பு உயரும். எதிர்ப்புகள் இருந்தாலும் கூட அதனை முறி அடித்து வெற்றி பெரும் தினம் இன்று. மொத்தத்தில் சோதனைகளை சாதனைகளாக மாற்றி வெல்வீர்கள்.
ரிஷபம்-Rishabam
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்று மதத்தவர் நட்பு சிலருக்கு நன்மை செய்யும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
மிதுனம்-Mithunam
கம்பீரமாக பேசி சில காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.
கடகம்-Kadagam
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோ கத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
சிம்மம்-Simmam
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கனவு நனவாகும் நாள்.
கன்னி -Kanni
இன்று சிலருக்கு உணவு ரீதியாக சில உபாதைகள் ஏற்பட இடம் உண்டு. உங்கள் தேவைகள் இறுதியில் நிறைவேறும். நிதானமாக செயல்பட்டு வெற்றி அடைய வேண்டிய நாள் இது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருந்து கொள்ளுங்கள். உத்யோகத்தில் வேலை பளு சற்று அதிகமாக இருக்கும் தான். எனினும் அவற்றை எல்லாம் நீங்கள் சமாளித்து வெற்றி அடைவீர்கள்.
துலாம்-Thulam
இன்றைய தினத்தில் சிலருக்கு சுப காரிய பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆகும். திருமணம் ஆனவர்கள், இல்வாழ்க்கை சிறக்க அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளிடம் கவனமாக பேசுங்கள். சிலர் நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ள நேரிடலாம். எனினும் முயற்சியால் வெல்லும் நல்ல நாள்…இந்த நாள்.
விருச்சிகம்-Viruchigam
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள்.
தனுசு-Thanusu
ஒருவித படபடப்பு வந்து செல்லும். தலைசுற்றல் முழங்கால் வலி வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக் கையாளர்களால் மறைமுகப் பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர் களுடன் பனிப்போர் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
மகரம்-Magaram
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும். மொத்தத்தில் திறமையால் சாதிப்பீர்கள்.
கும்பம்-Kumabm
எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மிகக் கவனமுடன் செய்யவும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படக் கூடும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
மீனம்-Meenam
இன்று துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள் . மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை. எதிலும் அவசரப்படாமல் புத்திகூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எனினும், எதிர்ப்புகள் இறுதியில் அகலும்.