Rasi Palan Today-12.08.2021

மேஷம்-Mesham
இன்றைக்கு எதிலும் நிதானமாக செயல்படவும். பயணங்களை திட்டமிட்டுச் செய்யவும். சிலருக்குத் தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண் விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரிடலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். ஆனால், அதிகாரிகள் அனுசரணையாக இருப்பது ஆறுதல் தரும். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம்.
ரிஷபம்-Rishabam
தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க செலவு செய்ய வேண்டி வரும்.
மிதுனம்-Mithunam
வரவும் செலவும் அடுத்தடுத்து வரும். தந்தையின் தேவையை நிறை வேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.
கடகம்-Kadagam
சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவல கத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.
சிம்மம்-Simmam
முன்னர் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகுவார். புதிய திட்டங்களை சிறப்பாக வடிவமைப்பீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள்.
கன்னி -Kanni
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
துலாம்-Thulam
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்
தனுசு-Thanusu
இந்த நாளில் உங்களது சில எண்ணங்கள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். வாகனங்கள் ரீதியாக சில செலவுகள் சிலருக்கு ஏற்பட இடம் உண்டு. எனினும் திடீர் பணவரவு மூலம் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் ஒரு நல்ல நாளாக இந்த நாள் இருக்கும். மொத்தத்தில், சோதனைகளை கடந்து சாதிப்பீர்கள். அலுவலகத்தில் மட்டும் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.
மகரம்-Magaram
புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். சில ருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிற்பகலுக்கு மேல் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
கும்பம்-Kumabm
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
மீனம்-Meenam
எதிர்ப்புகள் குறையும் நாள். புதிய முயற்சியில் ஈடுபடும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டு. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.