Rasi Palan Today-19.08.2021

மேஷம்-Mesham
ஆழ்ந்து யோசித்து தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு மனைவி வழியில் பக்க பலமாக இருப்பார்கள். வாகன ரீதியாக சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
ரிஷபம்-Rishabam
அனாவசிய பேச்சை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சச்சரவு வந்து நீங்கும். அலுவலக ரகசியங்களை வெளியிடவேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.
மிதுனம்-Mithunam
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள்.
கடகம்-Kadagam
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள்.
சிம்மம்-Simmam
கணவன்-மனைவிக்குள் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். சுமைகளைக் கூட சுகமாகும் நல்ல நாள்.
கன்னி -Kanni
பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஆகலாம். நண்பரின் உதவியால் மாற்று வழிகளை பின்பற்றுவீர்கள். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை உண்டு. புதிய வகையில் பணச்செலவு ஏற்படலாம். ஒவ்வாத உணவு உண்பதை தவிர்ப்பதால் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
துலாம்-Thulam
அனைவரிடமும் இனிய வார்த்தை பேசுவீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை பூர்த்தி செய்வீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.
விருச்சிகம்-Viruchigam
இந்த நாளை பொறுத்தவரையில் வரவு வருவதற்கு முன்னமே செலவு வந்து உங்கள் வாயில் கதவை தட்டும். குருவின் பார்வை அதிக அளவில் ஆறுதல் அளிக்கும். சிலருக்கு மனைவியுடன் சிறு, சிறு பிரச்சனைகள் வந்து போக இடம் உண்டு. எனினும் நீங்கள் அமைதியாகவும், பொறுமையாகவும், இறை நம்பிக்கையுடனும் இருந்தால் இந்த நாளை இனிய நாளாக மாற்றலாம்.
தனுசு-Thanusu
இன்றைய தினத்தில் சிலர் புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். சிலர் வாகனங்களை மாற்றலாம் அல்லது அது சம்மந்தமாக சில செலவுகளை செய்யலாம். மற்றபடி உடலில் சோர்வு, அலுப்பு தென்படலாம். நெருப்பு, ஆயுதங்கள் போன்ற இவற்றை கையாளும் சமயத்திலும், வண்டி – வாகனங்களில் செல்லும் சமயத்திலும் கூடுதல் கவனம் தேவை. எப்படிப் பார்த்தாலும் இன்று ஒரு சுமாரான நாளாகவே உங்களுக்கு இருக்கும்.
மகரம்-Magaram
இன்று அலைச்சல் இருந்தாலும் கூட காரிய வெற்றி உண்டு. பேச்சில் மட்டும் நிதானமாக இருந்தீர்கள் என்றால் வெற்றியை மகத்தான வெற்றியாக மாற்றலாம். உங்கள் தேவைகள் அவ்வப் போது நிறைவேறும். குரு பார்வை எப்படிப் பார்த்தாலும் உங்களுக்கு நன்மையை தான் செய்யும். மொத்தத்தில் இது ஒரு நல்ல நாள்.
கும்பம்-Kumabm
எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறுக்கிடலாம். எனினும் சமாளித்து விடுவீர்கள். திடீர் செலவால் சேமிப்பு சிலருக்கு கரையலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. இன்று ஒரு சுமாரான நாளே!
மீனம்-Meenam
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் சிலருக்கு உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை.