Rasi Palan Today-30.08.2021

மேஷம்-Mesham
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்-Rishabam
செயல்களில் தைரியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி மற்றும் பொறாமை குறையும். சிலர் கடனில் ஒருபகுதியைச் செலுத்துவீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வழிபாட்டில் ஈடுபடுவர்.
மிதுனம்-Mithunam
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். எனினும், உங்களது உழைப்பு வீண் போகாது.
கடகம்-Kadagam
கடினமான காரியங்களையும் எளிதாக, திட்டமிட்டு முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
சிம்மம்-Simmam
எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.
கன்னி -Kanni
மனதில் இனம் தெரியாத குழப்பத்திற்கு இடம் தராதீர்கள். புதிய முயற்சிகளை நன்கு திட்டமிட்டு நிதானமாக யோசித்துச் செய்யவும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படவும் இடம் உண்டு. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களுடன் அனுசரித்துச் செல்லவும். மொத்தத்தில் இது ஒரு சுமாரான நாள் தான். சிலர் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள்.
துலாம்-Thulam
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக செயல் பட முயற்சி செய்வீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்களிடம் பேசும் போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத் தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும்.
தனுசு-Thanusu
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள்.
மகரம்-Magaram
குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். பணவரவு உண்டு. வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். இனிமையான நாள்.
கும்பம்-Kumabm
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கி யவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். மதிப்புக் கூடும் நாள்.
மீனம்-Meenam
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …