Tuesday, May 21, 2024
Homeதசா புத்தி பலன்கள்செவ்வாய் தசா புத்தி பலன்கள்

செவ்வாய் தசா புத்தி பலன்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

செவ்வாய் தசா புத்தி பலன்கள்

செவ்வாய் தசா- செவ்வாய் புத்தி

செவ்வாய் தசாவில் செவ்வாய் புக்தி 4 மாதம் 27 நாட்கள் நடைபெறும்.

செவ்வாய் பலம்பெற்று அதன் புத்தி நடைபெற்றால் நல்ல உடல் வலிமை, சிறப்பான ஆரோக்கியம், குடும்பத்தில் தன சேர்க்கை, புதிய வீடு கட்டி குடிபுகும் அமைப்பு, பூமி, மனையால் திறமையுடன் சம்பாதிக்கும் யோகம், எதிலும் தைரியத்துடன் செயல்படும் திறமை, எதிரிகளை வெல்லும் வலிமை, அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகிக்கும் யோகம், வம்பு வழக்குகளில் சாதகப் பலன், எடுக்கும் காரியங்களில் வெற்றி, ஆடை ஆபரண சேர்க்கை யாவும் உண்டாகும்.

செவ்வாய் பலவீனமாக இருந்து புத்தி நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, வியாதியால் கவலை, கஷ்டம், உற்றார்- உறவினர்களிடம் கலகம், பணவரவில் நெருக்கடி, ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்பு, பெண் என்றால் மாதவிடாய் பிரச்சனை, கர்ப்பப்பை பிரச்சனை, கருச்சிதைவு யாவும் உண்டாகும். எதிர்பாராத விபத்துக்களால் உடலில் காயங்கள் ஏற்பட கூடிய நிலை, அரசு மற்றும் சகோதரர்கள் வழியில் பிரச்சனை, புத்திர பாக்கியம் உண்டாக தடை ஏற்படும்.

செவ்வாய் தசா-ராகு புத்தி

செவ்வாய் தசாவில் ராகு புத்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்

ராகு சுப கிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்று அமைந்திருந்தால் நல்ல காரியங்களுக்கும், புண்ணிய காரியங்களுக்கும் செலவு செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். குல பெருமை உயரும், குடும்பம் சுகமாக அமையும், மனைவி பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள், உடல்நலம் சீரடையும், எதிலும் துணிவுடன் செயல்பட்டு எதிரிகளை வெல்லக்கூடிய தைரியமும் வலிமையும் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகள் மூலம் அனுகூலம். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ,உற்றார் உறவினர்களுடன் சிறப்பான உறவு அமையும், பொருளாதாரமும் உயர்வடையும்.

ராகு பலவீனமாக இருந்து ராகு நின்ற வீட்டதிபதி பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் நெருப்பினால் கண்டம், விபத்துக்களை எதிர் கொள்ளும் சூழ்நிலை, உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலை, விஷப்பூச்சிகளால் கண்டம், இடம் விட்டு இடம் செல்லக் கூடிய சூழ்நிலை, புத்திரர்களால் சோகம் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், தலைவலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள்.

செவ்வாய் தசா

செவ்வாய் தசா – குரு புக்தி

செவ்வாய் தசாவில் குரு புத்தி ஆனது 11 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.

குரு பலமாக அமைந்திருந்தால் அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகம், வண்டி வாகனம் மற்றும் அசையா சொத்து சேர்க்கை, பிள்ளைகளால் பெருமை, எடுக்கும் காரியங்களில் வெற்றி, குடும்பத்தில் மங்களகரமான காரியங்கள் தடபுடலாக நிறைவேறும் யோகம், கல்வியில் மேன்மை, பலருக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு, சமுதாயத்தில் நல்ல பெயர், புகழ் யாவும் உண்டாகும்.

குரு பலவீனமாக இருந்தால் திருடர்களால் தொல்லை, விஷப்பூச்சிகளால் கண்டம், சிறுநீரக வியாதியால் அவதி, பெரிய வியாதிகள், உற்பத்தி பாதிப்பு, உற்றார்-உறவினர் மற்றும் பங்காளிகளிடையே பிரச்சனை, குடும்பத்தில் கஷ்டம், பிள்ளைகளால் அவப்பெயர், செய்யும் தொழில் உத்தியோகத்தில் வீண் பழிகள், பணம் கொடுக்கல்-வாங்கலில் பிரச்சனை போன்ற அனுகூலமற்ற பலன்களை சந்திக்க நேரிடும்.

செவ்வாய் தசா-சனி புத்தி

செவ்வாய் தசாவில் சனி புக்தியானது 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.

சனி பலமாக அமையப் பெற்றால் நல்ல தனலாபமும், பூமி, மனை வீடு ,வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், மனைவி பிள்ளைகளால் அனுகூலம், ஆடை ஆபரண சேர்க்கை, அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்.

சனி பலவீனமாக இருந்தால், சனி செவ்வாய் சேர்க்கை பெற்றாலும், சனி செவ்வாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும், எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டு உடல் அங்கங்களை இழக்கக் கூடிய அவலநிலை ஏற்படும். தன விரயம், தீயால் கண்டம், அரசு வழியில் சோதனைகள், அரசாங்கத்தில் அபராதம் கட்ட வேண்டிய நிலை யாவும் உண்டாகும். உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களிடையே பகைமை ஏற்படும். மன நிம்மதி குறையும், வேலையாட்களால் பிரச்சனை உண்டாகும்.

செவ்வாய் தசா-புதன் புத்தி

செவ்வாய் தசாவில் புதன் புத்தி 11 மாதம் 27 நாட்கள் நடைபெறும்.

புதன் பலமாக இருந்தால் தான தர்ம காரியங்களை செய்யும் வாய்ப்பு, சிறப்பான பேச்சாற்றல், எழுத்தாற்றல், கணிதம், கம்ப்யூட்டர் துறைகளில் மேன்மை, மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆற்றல், வண்டி வாகனம் மற்றும் ஆடை ஆபரண சேர்க்கை, தொழில் வியாபாரத்தில் லாபம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

புதன் பலவீனமாக இருந்தால் உடல்நலத்தில் பாதிப்பு, ஞாபக சக்தி குறையும் நிலை, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, சித்தபிரமை, பகைவர்களால் பாதிப்பு, இடம் விட்டு இடம் செல்லக்கூடிய நிலை, நண்பர்கள் மற்றும் தாய் வழி மாமன்கள் இடையே விரோதம் ஏற்படும். மற்றவர்களால் பல பிரச்சனைகள் ,தேவையற்ற பழிச்சொற்கள் ஏற்படும்.

செவ்வாய் தசா

செவ்வாய் தசா – கேது புத்தி

செவ்வாய் தசா வில் கேது புக்தியானது 4 மாதம் 27 நாட்கள் நடைபெறும்.

கேது சுப பலம் பெற்றிருந்தால் நல்ல லாபமும் உயர்வும் உண்டாகும் என்றாலும், வரவுக்கு மீறிய செலவுகளும் ஏற்படும். வீடு மனை வண்டி வாகன சேர்க்கைகள் கிட்டும். சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, மற்றவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பு ஏற்படும்.

கேது பலம் இழந்தோ,கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் நெருப்பு மற்றும் விஷத்தால் கண்டம், தோல் நோய்கள், உடல் நிலையில் சோர்வு, சோம்பல் தன்மை, கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு, தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.

செவ்வாய் தசா -சுக்கிர புத்தி

செவ்வாய் தசாவில் சுக்கிர புக்தியானது 1 வருடம் 2 மாதம் நடைபெறும்.

சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் ஆடை ஆபரணங்கள், பூமி வீடு மனை யோகம், வண்டி வாகன யோகம், குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை, பெண் புத்திர பாக்கியம், திருமண சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பும் உண்டாகும். ஆயுள் ஆரோக்கியம் மேன்மை அடையும். பெண்களால் உயர்வும் கலைத்துறையில் ஈடுபாடு ஏற்படும்.

சுக்கிரன் பலவீனமாக இருந்தால் பல பெண்கள் தொடர்பான அவமானம், பாலியல் தொடர்புடைய நோய், சர்க்கரை வியாதி, கணவன் மனைவியிடையே இல்லற வாழ்வில் பிரச்சனை, அதிக பொருள் விரையம், நண்பர்களே துரோகிகளாக கூடிய நிலை, விளைச்சல் குறைவு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

செவ்வாய் தசா – சூரிய புத்தி

செவ்வாய் தசாவில் சூரிய புக்தியானது 4 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.

சூரியன் பலமாக இருந்தால் தீர்த்த யாத்திரை செல்லும் வாய்ப்பு, தான தரும காரியங்கள் செய்யும் வாய்ப்பு, அரசு சார்ந்த துறையில் உயர் பதவிகள், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி ,எதிலும் தைரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். பகைவரை வெல்லும் தைரியம், துணிவு, குடும்பத்தில் சுபிட்சம், ஆடை ஆபரண சேர்க்கை போன்ற சாதகமான பலனை அடைய முடியும்.

சூரியன் பலவீனமாக இருந்தால் உஷ்ணம் சம்மந்தப்பட்ட பாதிப்பு ,கண்களில் பாதிப்பு, தலைவலி, இருதய கோளாறு, விஷத்தால் கண்டம், விஷ ஜுரம், எதிர்பாராத வீண் விரயங்கள், தந்தைக்கு கண்டம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

செவ்வாய் தசா

செவ்வாய் தசா – சந்திர புத்தி

செவ்வாய் தசாவில் சந்திர புத்தியானது 7 மாத காலங்கள் நடைபெறும்.

சந்திரன் பலம் பெற்று அமைந்திருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, பூமி மனை வீடு வாகன சேர்க்கை, கலைத்துறையில் ஈடுபாடு, பெண்களால் அனுகூலம், நினைத்த காரியங்களில் வெற்றி, பகைவரை வெல்லக்கூடிய ஆற்றல் போன்ற நற்பலன்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

சந்திரன் பலமிழந்திருந்தால் மனக்குழப்பங்கள், எதிலும் திறமையுடன் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். சரியாக சாப்பிட முடியாத நிலை, ஜல தொடர்புடைய உடல்நிலை பாதிப்புகள், ஜலத்தால் கண்டம், குடும்பத்தில் கஷ்டம் ,தொழில் வியாபாரத்தில் நஷ்டம், தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்படக் கூடிய அமைப்பு உண்டாகும்.

செவ்வாய்க்குரிய பரிகாரங்கள்:

செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது, கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் மேற்கொள்வது, தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது. கோதுமை ரொட்டி, சர்க்கரை, வெள்ளை எள் கலந்த இனிப்பு வகைகள்,துவரை போன்றவற்றைமணமாகாத ஆணுக்கு தானம் செய்வது, செண்பகப்பூவால் முருகனை அர்ச்சனை செய்வது,பவழ கல் பதித்த மோதிரம் அணிந்து கொள்வது நல்லது.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular