Rasi Palan Today-01.09.2021

மேஷம்-Mesham
இன்று சிலருக்கு திருமணம் சம்மந்தமான பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். நினைத்த காரியங்கள் நல்ல படியாக நடந்தேறும் நல்ல நாள்… இந்த நாள். வெற்றிகள் பல வகையில் உங்களுக்கு குவியும். முயற்சியால் முன்னேறி செல்வீர்கள்.
ரிஷபம்-Rishabam
இன்று கிரக சஞ்சாரத்தை வைத்துப் பார்க்கும் போது, நீங்கள் சீக்கிரம் களைப்பு அடைய இடம் உண்டு. எனினும் உங்கள் தேவைகள் தக்க சமயத்தில் பூர்த்தி ஆகும். முடிந்தவரையில் சரும பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். உங்கள் தந்தையின் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய தினம் இன்று. வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் நிதானம் தேவை. தொழில் துறையினர் தவறான முடிவுகளை எடுக்காமல் கலந்து ஆலோசித்து எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது. செலவை சமாளிக்க கனகதாரா ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள்.
மிதுனம்-Mithunam
இன்றைய தினத்தில் முற்பகுதி நன்மையை செய்யும் பிற்பகுதியில் பண விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருந்து கொள்ளுங்கள். எனினும் கூட்டிக் கழித்து எப்படிப் பார்த்தாலும் இந்த தினம் உங்களுக்கு நன்மைகளை அதிகம் தரும் தினமாகவே இருக்கும். அலைச்சல் அதிகம் இருந்தாலும் கூட அதனால் உங்கள் முயற்சி வீண் போகாது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் கூட அதற்கான நல்ல பலன் உண்டு. அனைத்து வகையிலும் ஏற்றம் தரும் நன்னாள் இந்நாள்.
கடகம்-Kadagam
இன்றைய நாளில் நாளின் முற்பகுதியை விட பிற்பகுதி சில நன்மைகளை கொண்டு இருக்கும். சிலர் செலவு செய்து ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். அதிலும் பிள்ளைகள் வழியில் சில தேவையான செலவுகளை செய்ய நேரிடலாம். மற்றபடி எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கும். நாளின் பிற்பகுதியில் நன்மைகள் மேலோங்க இடம் உண்டு.
சிம்மம்-Simmam
இன்றைய தினத்தை பொறுத்தவரையில் முற்பகுதியில் காரிய ஜெயமும், பிற்பகுதியில் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கும் பண வரவும் ஏற்பட இடம் உண்டு. தாயாரின் உடல் நிலையில் மட்டும் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுதல் நலம். எனினும் எப்படிப் பார்த்தாலும் இந்த நாள் உங்களுக்கு அதிக நன்மைகளை செய்யும் நன்னாள் ஆகவே இருக்கும்.
கன்னி -Kanni
எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறுக்கிடலாம். எனினும் சமாளித்து விடுவீர்கள். திடீர் செலவால் சேமிப்பு சிலருக்கு கரையலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. இன்று ஒரு சுமாரான நாளே!
துலாம்-Thulam
அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.
விருச்சிகம்-Viruchigam
இன்றைய தினம் உங்களுக்கு உடல் அசதி ஏற்பட இடம் உண்டு. பேச்சில் நிதானம் தேவை. சூரியனின் சஞ்சாரத்தால் அலைச்சல் இருந்தாலும் கூட முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கப்பெறும். சூழ்நிலைகளை அனுசரித்து வெல்ல வேண்டிய தினம் இன்று. எனினும் அலைச்சல் இருந்தாலும் இறுதியில் வெற்றியும் உண்டு.
தனுசு-Thanusu
இந்த நாளில் உங்கள் முயற்சிகளுக்கு தக்க காரிய சாதனை உண்டு. சிலர் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் தைரியம் – தன்னபிக்கை வளரும். அதனால், செலவுகளை திறம்பட சமாளிப்பீர்கள். மொத்தத்தில் இந்த நாள் உங்களுக்கு அதிக நன்மை தரும் நாளாகவே இருக்கும். போராட்டங்களை கடந்து வெற்றி பெறுவீர்கள். அதனால் கவலை வேண்டாம்.
மகரம்-Magaram
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் வேலை பளுவை திறம்பட சமாளிப்பீர்கள். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளப்பாருங்கள்.
கும்பம்-Kumabm
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.
மீனம்-Meenam
இந்த நாளில் உங்களது சில எண்ணங்கள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். வாகனங்கள் ரீதியாக சில செலவுகள் சிலருக்கு ஏற்பட இடம் உண்டு. எனினும் திடீர் பணவரவு மூலம் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் ஒரு நல்ல நாளாக இந்த நாள் இருக்கும். மொத்தத்தில், சோதனைகளை கடந்து சாதிப்பீர்கள். அலுவலகத்தில் மட்டும் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …