Friday, July 26, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்ரிஷப லக்னமும்-சூரியனும்

ரிஷப லக்னமும்-சூரியனும்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ரிஷப லக்னமும்-சூரியனும்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் வசீகரமான தோற்றத்தை கொண்டிருப்பார்கள். அழகான ஆடைகளை அணிவார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்.அறிவாளியாகவும் தைரியசாலியாகவும் இருப்பார்கள். நல்ல பணவசதி உள்ளவர்கள்.

ரிஷப லக்னத்தில்-சூரியன் இருந்தால்

  • தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும்.
  • பூமி, வாகனம் இருக்கும்.
  • சூரியனின் பார்வை 7ம் பாவத்திற்கு இருப்பதால் வர்த்தகம் நன்கு நடக்கும்.
  • வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். மனைவியால் மகிழ்ச்சி கிடைக்கும்.

ரிஷபத்திற்கு 2-ம் பாவத்தில்-மிதுனத்தில் சூரியன்

  • சூரிய பகவான் தன் நண்பரான புதன் வீட்டில் இருந்தால் நல்ல பணவரவு, சொத்து இருக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
  • அன்னைக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும்.
  • சூரியன் எட்டாம் பாவத்தை பார்ப்பதால் பூர்வீக சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
  • வர்த்தகம் நன்றாக நடக்கும்
ரிஷப லக்னமும்-சூரியனும்

ரிஷபத்திற்கு 3-ம் பாவத்தில்-கடகத்தில் சூரியன்

  • சூரியன்,சந்திரனின் கடக ராசியில் இருந்தால் பூமி பாக்கியம் கிடைக்கும்.
  • சொந்தமாக வீடு இருக்கும்.
  • தாயாரின் உடல் நலம் நன்றாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
  • ஜாதகர் கோப குணம் கொண்டவராக இருப்பார்.
  • பல செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.
  • உடன்பிறப்புகளால் சந்தோஷம் கிடைக்கும்.

ரிஷபத்திற்கு 4-ம் பாவத்தில்-சிம்மத்தில் சூரியன்

  • சுய வீட்டில் சூரியன் இருந்தால்,பூமி வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு.
  • நல்ல பணவரவு இருக்கும்.
  • உல்லாசமான வாழ்க்கை அமையும்.
  • வசீகரமான தோற்றத்தை கொண்டிருப்பார்.
  • பிறரிடம் தன்னை கம்பீரமாக காட்டிக் கொள்வார்.
  • ஆனால் மனதிற்குள் அமைதியற்ற நிலை இருக்கும்.

ரிஷபத்திற்கு 5-ம் பாவத்தில்-கன்னியில் சூரியன்

  • ஐந்தாம் பாவத்தில் திரிகோணத்தில் சூரியன் இருந்தால், படிப்பு விஷயம் நன்றாக இருக்கும்.
  • பிள்ளைகளால் நல்ல பெயர் கிடைக்கும்.
  • ஜாதகர் ஈர்க்கக்கூடிய தோற்றத்தை கொண்டிருப்பார்.
  • அறிவாளியாக இருப்பார்.
  • எதையும் தொலைநோக்குடன் பார்ப்பார்.
  • குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும்.
  • பூமி பாக்கியம் கிடைக்கும்.
  • தாயால் சந்தோஷம் உண்டாகும்

ரிஷபத்திற்கு 6-ம் பாவத்தில்-துலாம் ராசியில் சூரியன்

  • ஆறாம் பாவத்தில் சூரியன் தன் எதிரியான சுக்கிரன் ராசியில் இருந்தால், பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள்.
  • ஆனால் சூரியன் எரிக்கக்கூடிய கிரகம் என்பதால் பகைவர்கள் குறைவார்கள். அன்னைக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும்.
  • பூமி, வீடு வாங்கும்போது பிரச்சனை ஏற்படும்.
ரிஷப லக்னமும்-சூரியனும்

ரிஷபத்திற்கு 7-ம் பாவத்தில்-விருச்சிகத்தில் சூரியன்

  • ஏழாம் பாவத்தில் சூரியன் இருந்தால் மனைவி அழகாக இருப்பாள்.
  • பணவரவு நன்றாக இருக்கும். வர்த்தகத்தில் வெற்றி கிடைக்கும்.
  • பூமி வாங்கும் பாக்கியம் உண்டு. சொந்தத்தில் வீடு இருக்கும்.

ரிஷபத்திற்கு 8-ம் பாவத்தில்-தனுசில் சூரியன்

  • எட்டாம் பாவத்தில் சூரியன் தன் நண்பர் குருவின் ராசியில் இருந்தால்,
  • சிலர் வெளியே சென்று வாழ்வார்கள்.
  • பூமி,வீடு வாங்கும்போது பிரச்சனை இருக்கும்.
  • இரண்டாம் பாவத்தை சூரியன் பார்ப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சனைகள் தோன்றும்.

ரிஷபத்திற்கு 9-ம் பாவத்தில்-மகரத்தில் சூரியன்

  • ஒன்பதாம் பாவத்தில் சனியின் வீட்டில் சூரியன் இருந்தால், அன்னைக்கு உடல்நல பாதிப்பு இருக்கும்.
  • பூமி, சொந்த வீடு ஆகியவற்றில் பிரச்சனை இருக்கும். ஆனால் கடுமையான உழைப்பிற்குப் பிறகு சந்தோச சூழல் உண்டாகும்.
  • பண வரவு இருக்கும்.
  • அதிர்ஷ்டம் தேடி வரும்.

ரிஷபத்திற்கு 10-ம் பாவத்தில்-கும்பத்தில் சூரியன்

  • பத்தாம் பாவத்தில் கும்ப ராசியில் சூரியன் இருந்தால்,
  • ஜாதகரின் தந்தைக்கு சில பிரச்சனைகள் உண்டாகும்.
  • அரசாங்க விஷயங்களில் சில தடைகள் ஏற்படும்.
  • சிலருக்கு வெற்றியில் தடை இருக்கும். சுமாரான வெற்றி கிடைக்கும்.

ரிஷபத்திற்கு 11-ம் பாவத்தில்-மீனத்தில் சூரியன்

பதினோராம் பாவத்தில் (லாப ஸ்தானத்தில்) குருவின் மீன ராசியில் சூரியன் இருந்தால், பணவசதி நன்றாக இருக்கும்.
தாயாரால் சந்தோஷம் கிடைக்கும்.
பூமி,வாகனம் இருக்கும்.
குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

ரிஷபத்திற்கு 12-ம் பாவத்தில்-மேஷத்தில் சூரியன்

  • பன்னிரெண்டாம் பாவத்தில் தன் நண்பரான செவ்வாயின் வீட்டில் இருந்தால்,செலவுகள் அதிகமாக இருக்கும்.
  • அன்னைக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும். சிலர் வெளியே சென்று வாழ்வார்கள். அதன் மூலம் பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …



ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular