Rasi Palan Today-14.09.2021

மேஷம்-Mesham
சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.
ரிஷபம்-Rishabam
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு வருத்தம் தரும். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் சஞ்சலம் ஏற்படும்.
மிதுனம்-Mithunam
கணவன் மனைவி ஒற்றுமையில் சிறிய அளவிலான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு தடைகள் ஏற்பட்ட பிறகே நன்மை உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். திருமணம் பற்றிய முயற்சிகள் அலைச்சலுக்குப் பிறகே வெற்றி தரும்.
கடகம்-Kadagam
பெண்களுக்கு குடும்பத்தினரின் பாராட்டு கிடைக்கும். மாணவர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் முயற்சி செய்தால் தாய் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு உண்டு.
சிம்மம்-Simmam
எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு ஆடை, நகைகளின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றத்தை பெறுவதற்கான சூழல் உருவாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
கன்னி -Kanni
இன்றைய தினத்தை பொறுத்தவரையில் செலவுகள் அதிகரிக்கும் தினம். எனினும் அனைத்தும் பெரும்பாலும் தேவையான செலவுகளாகத் தான் இருக்கும். சிலர் ஆபரணங்களை கூட வாங்கி மகிழ்வார்கள். இந்த நாள் ஒரு அற்புதமான நாளாக இருக்கும். அலைச்சல் இருந்தாலுமே கூட முயற்சிக்கு தக்க பலன் உண்டு.
துலாம்-Thulam
இன்று உங்கள் தேவைகள் பூர்த்தி ஆகும். பெரும்பாலும் தீமைகள் அகலும் நாள். முயற்சிக்கு தக்க பலன் கிடைக்காமல் போகாது. பண விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் இந்த நாள் ஒரு சிறப்பான நாளாக இருக்கும்.
விருச்சிகம்-Viruchigam
இன்று காலையில் சற்று மந்தமாக இருந்தாலும் பிற்பகுதியில் திடீர் பணவரவு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும். முயற்சிக்கு தக்க நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கப் பெறும். மதியத்திற்கு மேல் அனைத்து விதத்திலும் உங்களுக்கு நன்மை உண்டு. மதியத்திற்கு மேல் அலைச்சல் இருந்தாலும் கூட சென்ற காரியம் வீண் ஆகாது. எனினும் காலை பொழுதில் நிதானம் தேவை.
தனுசு-Thanusu
சிலருக்குத் தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசு வகையில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் முயற்சி வீண் போகாது. சிலருக்கு, சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட இடம் உண்டு. பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு சிலருக்கு கிடைக்கப்பெறலாம். வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.
மகரம்-Magaram
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்திசெய்வீர்கள். சிலருக்குப் பணப் புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்தனையை சிலர் நிறை வேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
கும்பம்-Kumabm
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசியம்.
மீனம்-Meenam
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …