Saturday, December 2, 2023

Rasi Palan Today-17.09.2021

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

Rasi Palan Today-17.09.2021

image 14 Rasi Palan Today-17.09.2021

மேஷம்-Mesham 

இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிக்கவும்.

ரிஷபம்-Rishabam 

மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்க வேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.

மிதுனம்-Mithunam 

எந்த காரியத்தை தொட் டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகபேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம்செலுத்துவது நல்லது. பொறுமைத் தேவைப் படும் நாள்.

Rasi Palan Today
ராசி பலன் 17.09.2021

கடகம்-Kadagam 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய கடனைத் தீர்க்கப் புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்-Simmam 

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கன்னி -Kanni

புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக் கும். திடீர் செலவுகளும் ஏற்படும்.

துலாம்-Thulam 

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு, பிற்பகலுக்கு மேல் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது. இன்னும் சிலருக்கு, மாலையில் உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் சற்று சங்கடத்தை ஏற்படுத்தும். மற்றபடி, வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு இது ஒரு சாதாரண நாள்.

Rasi Palan Today
ராசி பலன் 17.09.2021

விருச்சிகம்-Viruchigam 

இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காகப் பாடுபட வேண்டி இருக்கும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

தனுசு-Thanusu 

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எனினும், முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே நடைபெறும். உங்கள் முயற்சிகளுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் இன்று ஒரு சுமாரான நாள் தான்.

மகரம்-Magaram 

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பம்-Kumabm 

இன்று எதிர்ப்புகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். அரசு காரியங்கள் சிலருக்குத் தாமதம் ஆகலாம். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். பொறுமையாக இருந்து வெற்றி அடைய வேண்டிய நாள் இந்த நாள்.

மீனம்-Meenam 

உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி பாராட்டுவர். தொழில் வியாபாரம் செழிக்க அதிக நேரம் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …



- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular