Friday, December 8, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்ரிஷப லக்னமும் -சந்திரனும்

ரிஷப லக்னமும் -சந்திரனும்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

ரிஷப லக்னமும் -சந்திரனும்

ரிஷபத்தில்-சந்திரன்

  • ரிஷப லக்னத்தில் சந்திரன், சுக்கிரனின் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு மன பலம் அதிகமாக இருக்கும்.
  • சகோதரர்களுடன் உறவு நன்றாக இருக்கும்.
  • பெயர் புகழ் கிடைக்கும்.
  • ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்

2ம் வீட்டில்-மிதுனத்தில் சந்திரன்

  • இரண்டாம் பாவத்தில் சந்திரன்,புதனின் வீட்டில் இருப்பதால் ஜாதகர் பணத்தை சேமித்து வைப்பார்.
  • குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். ஆனால் தம்பி-தங்கைக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும்.
  • அவர்கள் வேலை எதுவும் செய்யாமல் வெறுமனே இருப்பார்கள்.

3ம் வீட்டில்-கடகத்தில் சந்திரன்

  • மூன்றாம் பாவத்தில் சந்திரன் சுய வீட்டில் இருப்பதால், உடன்பிறப்புகளுடன் உறவு நன்றாக இருக்கும்.
  • ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.
  • கடுமையான உழைப்பாளியாக இருப்பார்.
  • மனதில் சந்தோஷம் இருக்கும், பெயர் புகழ் கிடைக்கும்

4ம் வீட்டில்-சிம்மத்தில் சந்திரன்

  • நான்காம் பாவத்தில் சந்திரன் இருந்தால், தாயின் உடல்நலம் நன்றாக இருக்கும்.
  • பூமி வீடு வாங்கும் அதிர்ஷ்டம் இருக்கும்.
  • உடன்பிறப்புகளுடன் உறவு நன்றாக இருக்கும்.
  • வீட்டில் ஏராளமான பொருட்கள் சேரும்

5ம் வீட்டில்-கன்னியில் சந்திரன்

  • ஐந்தாம் பாவத்தில் சந்திரன் மூல திரிகோணத்தில் இருப்பதால், ஜாதகர் புத்திசாலியாக இருப்பார்.
  • பிள்ளைகளால் பெயர் புகழ் கிடைக்கும்.
  • உடன்பிறப்புகளுடன் உறவு நன்றாக இருக்கும்.
  • செல்வ செழிப்புடன் வாழ்க்கை இருக்கும்.
  • ஜாதகர் தன் அறிவை பயன்படுத்தி பல காரியங்களை சாதிப்பார்.
ரிஷப லக்னமும் -சந்திரனும்

6ம் வீட்டில்-துலாம் ராசியில் சந்திரன்

ஆறாம் பாவத்தில் சந்திரன் ரோக ஸ்தானத்தில் இருப்பதால் சந்திரனின் பலம் சற்று குறைவாக இருக்கும். அதனால் ,பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள்.
சண்டை சச்சரவு உண்டாகும்
ஜாதகர் தைரியசாலியாக இருந்தாலும் அவருக்கு பிரச்சினைகள் இருக்கும் உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.

7ம் வீட்டில்-விருச்சிகத்தில் சந்திரன்

ஏழாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும். செவ்வாயின் ராசியில் சந்திரன் இருப்பதால் வர்த்தகத்தில் சிறு சிறு பிரச்சினை உண்டாகும்.கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்.
ஜாதகர் நல்ல தோற்றத்தை கொண்டிருப்பார். சிரமப்பட்டு உழைத்து பெயர்,புகழ் பெறுவார்

8ம் வீட்டில்-தனுசில் சந்திரன்

எட்டாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு முன்னோரின் சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. குருவின் வீட்டில் சந்திரன் இருப்பதால் உடல் நலம் நன்றாக இருக்கும். சற்று தைரியம் குறையும். குடும்பத்தில் சந்தோஷம் குறையும். உடன்பிறப்பு களுடன் சுமாரான உறவிருக்கும் எனினும் சந்திரன் 2-ம் பாவத்தை பார்ப்பதால் ஜாதகர் பணத்தை சம்பாதிப்பார்.

9ம் வீட்டில்-மகரத்தில் சந்திரன்

ஒன்பதாம் பாவத்தில் சந்திரன் சனியின் வீட்டில் இருப்பதால் ஜாதகர் கடுமையாக உழைப்பார். தர்ம காரியங்களில் வெற்றி பெறுவார். நிறைய கடவுள் நம்பிக்கை இருக்கும். நல்ல தொழிலதிபராக இருப்பார். சுறுசுறுப்பாக செயல்படுவார்
தைரியத்துடன் காரியங்களை செய்து சந்தோஷமாக இருப்பார்.

10ம் வீட்டில்-கும்பத்தில் சந்திரன்

பத்தாம் பாவத்தில் சந்திரன் இருப்பதால் தந்தையுடன் சுமாராகத்தான் உறவு இருக்கும். தந்தையுடன் மகனுக்கு கருத்து வேறுபாடு ஏற்படும். ஜாதகர் கடுமையாக உழைத்து, வெற்றியை காண்பார். தாயால் சந்தோஷம் கிடைக்கும். வீடு,மனை பாக்கியம் இருக்கும்.

11ம் வீட்டில்-மீன ராசியில் சந்திரன்

பதினோராவது பாவம் என்றால் லாபஸ்தானம். அங்கு சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு வீடு இருக்கும். தைரியசாலியாக இருப்பார். கடுமையாக உழைப்பார். நன்கு சிந்தித்து செயல்பட்டு வெற்றியை காண்பார். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். நன்றாக பேசக் கூடியவராக இருப்பார்.

12ம் வீட்டில்-மேஷ ராசியில் சந்திரன்

பன்னிரெண்டாம் பாவத்தில் செவ்வாயின் வீட்டில் சந்திரன் இருப்பதால், செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித்தொடர்பால் பணம் சம்பாதிப்பார். பகைவர்களால் பிரச்சனைகள் இருக்கும். ஆனால் ஜாதகர் மிகவும் கவனமாக செயல்பட்டு வெற்றி காண்பார்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …



- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular