Rasi Palan Today-20.09.2021

மேஷம்-Mesham
சுபநிகழ்ச்சிகளுக்காக செலவுகள் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதியும், குதுாகலமும் நிறைந்திருக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத விதமாக நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முன்னர் செய்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைக்கும்.
ரிஷபம்-Rishabam
ஆன்மீக காரியங்களில் சிலருக்குத் திடீர் ஈடுபாடு ஏற்படலாம். சிலர் திடீர் என்று நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது மட்டும் கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. உத்யோகம் எப்போதும் போலவே காணப்படும்.
மிதுனம்-Mithunam
உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
கடகம்-Kadagam
சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தினரை பற்றி யாரிடமும் குறைவாக பேச வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலர் உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலை கழிக்கப் படலாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
சிம்மம்-Simmam
பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது மிக அவசியம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.
கன்னி -Kanni
மனம் பக்குவம் அடையும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுக்க இடம் உண்டு. கணவன் – மனைவிக்கிடையே பிரச்சனையை பேசித் தீர்க்க முயலுவீர்கள். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். சிலரது உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார். சிலரது ஆலோசனை உறவினர்களால் பாராட்டப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ஓரளவு ஆறுதல் தரும். பல வித புதிய அனுபவங்களை உள்ளடக்கிய நாள்.
துலாம்-Thulam
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.
விருச்சிகம்-Viruchigam
இன்று எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பணவரவில் திருப்தி காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும்.
தனுசு-Thanusu
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். அலைச்சல் அதிகம் காணப்பட்டாலும் உங்களது முயற்சி வீண் போகாது.
மகரம்-Magaram
உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.
கும்பம்-Kumabm
இன்று குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், பாதிப்பு இருக்காது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழியில் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு நீண்ட நாளாக முடியாமல் இருந்த தெய்வ பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் பணம் கேட்டு நச்சரிக்கலாம். பொறுமையுடன் அதனைக் கையாளவும். மொத்தத்தில், கோபத்தைக் குறைத்து நிதானமாக வெற்றி அடைய வேண்டிய நாள்.
மீனம்-Meenam
தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கலாம். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். உழைப்பால் வெற்றி அடையும் நாள்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …