Friday, December 8, 2023

Rasi Palan Today-13.10.2021

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

Rasi Palan Today-13.10.2021

Rasi Palan Today

மேஷம்-Mesham 

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட இடம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பு வீண் போகாது. விடா முயற்சியால் வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்-Rishabam 

மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிதுனம்-Mithunam 

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். பணியிடத்தில் அமைதி நிலவும். தள்ளிப் போன பயணம் சம்பந்தமாக நல்லதோர் முடிவு கிட்டும். வியாபாரிகளுக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.

Rasi Palan Today

கடகம்-Kadagam 

குடும்ப விஷயங்களை நண்பர்கள் அல்லது வேண்டியவர்கள் என்று எண்ணி பிறரிடம் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம். முன்கோபத்தை குறைத்து சூழ்நிலையை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைக் கடந்து ஓரளவே லாபம் ஈட்ட இயலும். மற்றபடி, சுமாரான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை இனம் கண்டு தவிர்க்கவும். அலைச்சல் அதிகம் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது.

சிம்மம்-Simmam 

இன்று எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பணவரவில் திருப்தி காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும்.

Rasi Palan Today

கன்னி -Kanni

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள் வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும் நாள்.

துலாம்-Thulam 

துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடனான பிரச்சனையை சிலர் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து போராடி வெல்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்-Viruchigam 

இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மை தரும். அக்கம் – பக்கம் வீட்டாரை அனுசரித்துச் செல்ல வேண்டி வரலாம். மொத்தத்தில் பொறுமையால் சாதிக்க வேண்டிய நாள்.

Rasi Palan Today

தனுசு-Thanusu 

பழைய நிகழ்ச்சிகளை சிலர் அசை போடலாம். எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக் கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் சிலருக்குக் கிடைக்கும். பயணத்தின் போது உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்-Magaram 

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையான வர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கும்பம்-Kumabm 

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுச் செயல்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகளுக்குப் பழைய சிக்கல்கள் தீரும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்க இடம் உண்டு. சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் ஏற்பட இடம் உண்டு.

மீனம்-Meenam 

புதிய முடிவுகளை இன்றைய தினத்தில் நன்கு யோசித்து எடுக்கவும். நிதானமாக செயல்பட்டு பொறுமையாக இருக்க வேண்டிய தினம் இன்று. வேலை பளு அதிகரிக்கும். உங்கள் பேச்சே உங்களுக்கு வினை ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று. மேலதிகாரிகளிடம் நிதானமாக பேசுங்கள். சிலருக்கு காரணம் இல்லாமல் கோபம் வந்து போகலாம். அதனால் கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையுடன் காரியம் சாதிக்கப் பாருங்கள்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …



- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular