Saturday, December 2, 2023
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-கன்னி ராசி

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-கன்னி ராசி

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-கன்னி ராசி

புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே!!!

இதுவரையில் உங்கள் ராசிக்கு 5-ஆம் இடமான மகரத்தில் இருந்து வந்த குருபகவான், இப்போது 6-ஆம் இடமான கும்பத்துக்கு பெயர்ச்சியாகிறார்.

குருவின் பார்வை முறையே உங்கள் ராசிக்கு2,10, 12,-ஆம் இடங்களில் இருக்கும்

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022

கன்னி ராசியினரின் பொதுவான குணங்கள்:

 • கன்னி ராசியினர் நல்ல உழைப்பை கொடுப்பவர்கள்.
 • மற்றவர்களை போல அல்லாமல் இவர்களின் உழைப்பில் புத்திசாலித்தனம் நிறைந்து இருக்கும்.
 • ஒரே அலைச்சலில், மூளையோடு பத்து வேலையை முடித்து விடுவார்.
 • சிலரிடம் சற்று குறும்பும் நரித்தனமும் நிறைந்திருக்கும்.
 • இவர்களது குடும்பத்தினர் இனிமையாக பேசுவர்.
 • அழகியல் கலை சார்ந்த பணம் புழங்கும் குடும்பமாகும்.
 • இவருடைய இளைய சகோதரர் சற்று சண்டை குணம் கொண்டவராக இருப்பார்.
 • தாயார் நல்ல பக்தியும் அன்பும் கொண்டவர்.
 • பூர்வீகம் பழமை மிகுந்ததாக இருக்கும்.
 • தாய்மாமன் எதையும் வெளிக்காட்டாத அழுத்தமானவராக இருப்பார்.
 • உழைப்பை மிக நல்கும் வேலை அமையும். மனைவி பக்தியோடும், கணவன் பயண விருப்பத்தோடும் உள்ளவராக அமைவார்.
 • முன்கோபம் அவமானத்தை தேடித்தரும்.
 • தந்தை கலையுணர்வு மிக்கவராக இருப்பார்.
 • இவர்கள் தொழிலில் கணிதம், தொலைத்தொடர்பு அதிகம் சார்ந்து இருக்கும்.
 • மூத்த சகோதரி ஒரு தாயை போல் இவர்களைப் பேணிக் காப்பார்.
 • அரசு சார்ந்த பயணம் அதிகம் இருக்கும்.
குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022

கும்ப குருவின் பொதுப்பலன்கள்:

குரு பகவான் கன்னி ராசியில் 4 மற்றும் 7 இடத்துக்கு அதிபதி ஆவார். அவர் இவ்வளவு நாளும் மகரம் எனும் ஐந்தாமிடத்தில் அமர்ந்திருந்தார். தற்போது கும்பம் என்னும் ஆறாமிடத்தில் அமர்கிறார்.

ஆறாம் இடம் என்பது ருண, ரோக, எதிரி ஸ்தானம். அவர் கன்னி ராசியின் சுக, களத்திர ஸ்தான அதிபதி.

4-ம் அதிபதியாகி 6ல் அமரும்போது கன்னி ராசியினரின் சுகம் சற்று கெட வாய்ப்பு உள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே இடைவெளி ஏற்படும்.

வாழ்க்கை துணைக்கு வேலை கிடைத்து வேறு இடம் செல்வதால் தம்பதிகள் ஆளுக்கு ஓர் இடமாக இருப்பர். குழந்தைகளின் கல்வி பொருட்டு இடமாற்றம் உண்டு.

வார்த்தைகள் தடித்து, அதுவும் தம்பதிகளிடையே சுவர் கட்டி விடும். சிலர் வீடுகளில் ஜாதகரின் தந்தையும் இதற்கு காரணமாவார். வீடு கட்டுவதாலும், வயல் வேலைகளும் தம்பதிகள் பிரிய நேரலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022

குருவின் பார்வை பலன்:

குருவின் 5ம் பார்வை பலன்:

குரு தனது ஐந்தாம் பார்வையால் கன்னி ராசியின் 10ஆம் இடத்தைப் பார்க்கிறார். பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானம். எனவே இந்த குருபார்வை உங்களில் நிறைய ஜாதகர்களை சொந்த தொழில் தொடங்க செய்யும். அது உங்களின் சொந்த முயற்சியால் ஆரம்பிக்கப்படும். அனேகமாக உங்கள் பெயரிலேயே கடை,ஸ்தாபனம் தொடங்குவீர்கள்.

வெளிநாட்டு சம்பந்தம் கொண்ட ஏற்றுமதி- இறக்குமதி தொழிலில் இருந்த வில்லங்கம் நீங்கிவிடும். அது சம்பந்தமான எதிர்பாராத தகவல் கிடைக்கும்.

10-ஆமிடம் கௌரவத்தை குறிக்கும். எனவே இந்த கும்ப குரு உங்கள் கௌரவத்தை, புகழை, செல்வாக்கை, அந்தஸ்தை அதிகரிக்க செய்வார்.

கைபேசி, தொலைதொடர்பு, ஒப்பந்த குத்தகைகள், அறுவை சிகிச்சை மருத்துவமனை, சிறைச்சாலை சம்பந்தம், கோவில் ஸ்தபதிகள், வீடு கட்டும் தொழில், கல்வி நிலையம், இல்லற துறையில் நட்புக்கரம், பழமொழி ஆராய்ச்சி சம்பந்தம், இஸ்லாமிய நாட்டு தொடர்புடைய தொழில்கள், அக்கவுண்ட் இன்ஸ்டியூட், வணிக வளாகங்கள், திருமண அமைப்பு நிலையம், கல்வி டியூஷன், நீராதாரம் கண்டுபிடித்தல் என இவை போன்ற தொழில்கள் குருவின் பார்வையால் செழிக்கும்.

குருவின் 7-ம் பார்வை பலன்:

குரு தனது ஏழாம் பார்வையால் கன்னி ராசியின் 12-ஆம் வீடு விரய ஸ்தானத்தை உற்று நோக்குகிறார். குரு பார்ப்பதால் அனைத்தும் சுப விரயமாக அமையும், அலைச்சலும் நன்மை தரும் விதமாக இருக்கும்.

அரசு சம்பந்தமான அலைச்சல் அமையும். தந்தை சம்பந்தமாக அலைச்சலும், விரயமும் ஏற்படும்.

உங்கள் இளைய சகோதரருக்கு வேலை தேடும் பொருட்டு அல்லது தொழிலில் முதலீடு சேர்க்கும் பொருட்டு அலைச்சல் மற்றும் செலவு இருக்கும்.

உயர் கல்வி கட்டண செலவு வரும். ஹோமம் செய்யும் பாக்கியம் கிட்டும். நகை வாங்கும் செலவு உண்டு. ஆன்மீக-ஜோதிட நூல்கள் வாங்கும் செலவும் வரும்.

குருவின் 9ம் பார்வை பலன்:

குரு தனது 9-ம் பார்வையால் கன்னி ராசியின் 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். இது ஒரு நல்ல பார்வையாகும். குருவின் பார்வை பட்ட இடம் பொன்னாகும். அதுவும் தன ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொட்டது துளிர்க்கும். அசையும் சொத்துக்கள் வாங்குவீர்கள்.

இரண்டாம் இடம் என்பது குடும்பத்தை குறிக்கும். அதன் பெருக்கத்தை குறிக்கும். குரு பார்ப்பதால் குடும்ப பெருக்கம் உண்டு. உங்களில் நிறைய கன்னி ராசியினர் திருமணமாகி குடும்ப சொந்தபந்த, விஸ்தரிப்பு காண்பீர்கள்.

இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானம் பேச்சில் இனிமை கூடும். அர்த்தம் பொதிந்த பேச்சாக பேசுவீர்கள். அந்தப் பேச்சு பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.

திருமணம் செல்வம் சேர்க்கும். சிலருக்கு தாயாரின் ஏதாவது சொத்து கிடைக்கும். ஆரம்பக்கல்வி குழந்தைகள் கல்வி சிறக்கும். கைபேசி செல்வம் சேர்க்கும்.

பரிகாரங்கள்:

சிவனையும்,சங்கர நாராயணரையும் வணங்கவும்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகளை செய்யவும்..

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு 55 சதவீதம் நன்மை தரும் பெயர்ச்சியாக இருக்கும்..

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular