Monday, May 27, 2024
Homeசிவன் ஆலயங்கள்திருக்கோளக்குடி திருக்காளபுரீஸ்வரர்

திருக்கோளக்குடி திருக்காளபுரீஸ்வரர்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சொத்து மற்றும் பண பிரச்சினையை தீர்த்து வைக்கும்-திருக்கோளக்குடி திருக்காளபுரீஸ்வரர்

சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி-கீழச்சிவல்பட்டி செல்லும் சாலையில் 12 கி.மீ தொலைவில் திருக்கோளக்குடி அமைந்துள்ளது

சுமார் 1300 ஆண்டுகள் பழம்பெருமை கொண்ட இத்தளத்திற்கு மேலும் அழகு சேர்த்து, பக்திமனம் பரப்பும் விதமாக ஒரே குன்றில் அடிவாரம், மையப்பகுதி, சிகரம் என மூன்று தளங்களில் வெவ்வேறு பெயர்களில் ஈசன் எழுந்தருளியிருக்கிறார்.

உயர்ந்து நிற்கும் குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள மரகதவல்லி அம்பாள், சமேத பொய்யாமொழீஸ்வரர் திருக்கோயில். இது முழுக்க முழுக்க கல் கட்டுமானமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவை கலை திறத்துடன் விளங்குகிறது. மகாமண்டபத்தில் பலிபீடம்,நந்தீசரும், தெற்கு நோக்கி அம்பாள் சன்னதியும் உள்ளது. இதற்கு எதிரே கல் சாரளம் மிக்க வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதிக்கு கிழக்கே துவார விநாயகர் சன்னதி உள்ளது.

திருக்கோளக்குடி திருக்காளபுரீஸ்வரர்

அடுத்ததாக குன்றின் உச்சியை அடைய 125 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். அதற்கு முன்பாக அடிவாரத்தின் இடப்பக்கத்தில் உள்ள பாறை நம் கவனத்தை ஈர்க்கிறது. நியாயமாக வரவேண்டிய சொத்துகளை அடைவதில் சிக்கல் இருப்போர், கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் அவதிப்படுவோர், பல்வேறு காரணங்களால் குடும்ப உறுப்பினர்களாலேயே வஞ்சிக்கப்பட்டோர் தமது கோரிக்கைகளை பாதையில் நின்றவாறு இங்கே அருளும் காளபுரீஸ்வரரிடம் சொல்லி நம்பிக்கையோடு வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு விரைவிலேயே நற்பலன் கிடைக்கும். அவ்வாறு பலன் பெற்றவர்கள் தமது நன்றி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இறைவனுக்கு திருமஞ்சனம் செய்து, ஆராதனை நடத்தி செல்வது இங்கு வழக்கமாக உள்ளது.

மகாமண்டபத்தில் சிற்ப வேலைப்பாடமைந்த ஏராளமான தூண்கள் உள்ளன. அடுத்து பலிபீடம், நந்தீசரை தொடர்ந்து கருவறை மிகப்பிரம்மாண்டமாக குடைவரை அமைப்பில் வெகு நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. கருவறை மூலவர் லிங்கவடிவில் திருக்காளபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவர் திருக்கோளாநாத சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார்.

திருக்கோளக்குடி திருக்காளபுரீஸ்வரர்

மகா சிவராத்திரி, தமிழ் புத்தாண்டு, சித்திரா பௌர்ணமி, ஆனி பிரம்மோற்சவம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், பவுர்ணமி கிரிவலம் ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. 10 நாட்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் திருநாளில் தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெறுகிறது.

திருமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் பெற, இழந்துபோன சொத்தைத் திரும்பப் பெற விரும்புவோர் அவசியம் ஒரு முறை திருக்கோளக்குடி திருத்தலம் சென்று அங்குள்ள தெய்வங்களை தரிசித்து வாருங்கள்…

Google Map :

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular