Sunday, October 1, 2023
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-துலாம் ராசி

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-துலாம் ராசி

ASTRO SIVA

google news astrosiva

குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-துலாம் ராசி

சுக்கிர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே!!!

இதுவரையில் உங்கள் ராசிக்கு நான்காம் இடமான மகரத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது 5-ம் இடமான கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 9-ஆம் இடமான மிதுனத்திலும்,11ஆம் இடமான சிம்மத்திலும்,1-ஆம் இடமான உங்கள் ராசியிலும் பதியும்..

குரு பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசியினரின் பொதுவான விடயங்கள்:

 • துலாம் ராசியினர் பலர் அழகானவர்கள்.
 • பார்க்க அழகாகவும்,பழக யோசிக்கவும் செய்வர்.
 • ஆள் பார்த்து பழகும் இவர்களின் பேச்சு சற்று உரத்திருக்கும்.
 • இவர்களின் குடும்பம் சற்று மூர்க்கத்தனமாக அமைந்திருக்கும்.
 • இளைய சகோதரம் பக்தியாக-அன்பாக-அடக்கமாக இருப்பார்.
 • தாய் சற்று சோம்பல் தன்மை உள்ளவர். குலதெய்வம் சற்று குறுகலான இடத்தில் இருக்கும்.
 • தாய்மாமன் பக்திப் பழமாக இருப்பார்.
 • இவர்களுடைய வேலையில் ஆன்மீக வாசனை அடிக்கும்.
 • பலருடைய வாழ்க்கை துணை பிறரை மிரள செய்யக் கூடியவராக இருப்பார்.
 • இவர்களது கலை, அழகியல் உணர்வுகளே அவமானத்திற்கு காரணமாகும்.
 • தந்தை சற்று குறும்புத்தனம் மிக்கவராக இருப்பார்.
 • இவர்களது தொழில் நீர் சார்ந்து இருக்கும்.
 • சிலருக்கு மூத்த சகோதரர் சற்று பொல்லாதவராக, கம்பீரமாக, அரசியல், அரசு தொடர்புடன் இருப்பார். கல்வி, அறிவுத்தேடல், அலைச்சலை விரும்புவார்.
குரு பெயர்ச்சி பலன்கள்

கும்ப குருவின் பொதுப்பலன்கள்:

குரு துலாம் ராசிக்கு 3 மற்றும் 6-ம் இடத்தின் அதிபதி ஆவர். இதுவரையில் நான்காம் இடமான மகரத்தில் இருந்த குரு பகவான் இப்போது ஐந்தாம் இடமான கும்பத்தில் குடியேறுகிறார்.

5-ஆம் இடம் என்பது புத்திர ஸ்தானம். இதில் குருவானவர் 6 எனும் நோயின் அதிபதியாகி அமர்வது சற்று நெருடலான விஷயமே. இதனால் வாரிசுகளின் உடல் நலத்தில் சற்று கவனம் கொள்ளும்படி இருக்க வேண்டும்.

இன்னொரு விஷயம் ஆறாமிடம் நோய் ஸ்தானம். குரு அந்த வீட்டின் 12-க்கு, விரயத்தில் அமரும்போது இதுவரை வாரிசுகளுக்கு இருந்து வந்த நோய் பாதிப்பு விலகும் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஐந்தாம் இடம் ஆரோக்கிய ஸ்தானம்.அதில் நோய் கொடுக்கும் குரு அமரும் போது உங்களில் சிலருக்கு முழங்கால் வலி, சோகை, குடலிறக்கம், தலைவலி, தோல் நோய் போன்றவை வரக்கூடும். நோய்த்தாக்கம் நீங்க குலதெய்வ வழிபாடு, சிவன் அபிஷேகத்திற்கு மஞ்சள்பொடி அளித்தல், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்துதல் நன்று.

சிலருக்கு கடன் தீரும். அது உங்கள் வாரிசுகளின் உதவியால் இருக்கலாம். அல்லது பூர்வீக சொத்து மூலம் அமையும். எதிரிகள் சிலர் உங்கள் திறமைகளைக் கண்டு எட்டிப் போய்விடுவர். பழைய வேலையாட்கள் திரும்ப வருவார்.

காதல் விஷயம் கைகொடுக்காது. திரைப்படம், தொலைக்காட்சி கலைஞர்கள் அதிக உழைப்பினால் ஆரோக்கியக் குறைவை காண்பார். பங்குவர்த்தகம் ஏற்றகுறைவாக இருக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள்

குருவின் பார்வை பலன்கள்:

குருவின் ஐந்தாம் பார்வை பலன்:

குரு தனது ஐந்தாம் பார்வையால் துலாம் ராசியின் 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். இது யோக பார்வையாகும். துலாம் ராசியினர் பலர் தந்தையாவீர்கள். ஆன்மீக செயல்கள் அதிகம் இருக்கும். உயர்கல்வி பரிமளிக்கும். நினைத்த இடம் கிடைக்கும். முனைவர் பட்டம் சிறப்புற வாங்குவீர்கள். கணித அறிவு மேம்படும். கணக்கு,புள்ளியில், ஆடிட்டிங் துறையினர் மேம்படுவர்.

மடங்கள், மதத்தலைவர்கள், மதம் சார்ந்த செயல்கள் பெருமையடையும். யாகம், வேள்வி வளர்க்கும், அந்தணர்கள் கைபேசி வழியே கூட தங்களை வெகுவாக பிரகடனப்படுத்துவர். எண்ணங்களில் உயர்வு உண்டு. வெளிநாட்டு கல்விக்கு இடமுண்டு. கைபேசி விஷயமாக ஏதேனும் புதிதாக கண்டுபிடிப்பார்கள்.

மிகச் சிலர் “பக்தியும் ஞானமும் கொழுந்துவிட்டு எரிகிறது. தெய்வமே என்னுள் இறங்கி விட்டார்”. என்று கூறிக் கொண்டு பரதேசம் பயணப்படுவார்கள். இதனை ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து சாரநாதர் ராகு செவ்வனே செய்வார்.

குருவின் ஏழாம் பார்வை பலன்:

குரு தனது ஏழாம் பார்வையால் துலாம் ராசியின் 11-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 11-ஆம் இடம் என்பது லாப ஸ்தானம் எனவே இந்த குரு பெயர்ச்சி துலாம் ராசியின் ஆசைகளை அள்ளிக்கொண்டு வந்து நிறைவேற்றும்.

உங்களின் அரசியல் கனவு நனவாகும். எப்பாடுபட்டாவது அரசியல் அரங்கில் ஒரு நாற்காலியை கச்சிதமாக பிடித்து சட்டென்று அதில் உட்கார்ந்து விடுவீர்கள்.

அரசு பதவியில் இருப்போர் பதவி உயர்வும், பணபலமும் கிடைக்கப்பெறுவீர்கள். லஞ்சப் பணத்தின் நடமாட்டம் அதிகரிக்கும்.

துலாம் ராசி குழந்தைகளின் தந்தை பேர் அதிர்ஷ்டம் பெறுவார். உங்கள் வாழ்க்கைத் துணையின் பூர்வீக சொத்திலிருந்து பெரும் சம்பத்து கிடைக்கும். தந்தையின் புதையல் போன்ற ஒரு லாபம் உங்களை வந்தடையும். சிலர் அழகான கொலுசு வாங்குவர். துலாம் ராசி சமையல் கலைஞர்கள் மிக ஏற்றம் பெறுவர். அவர்களுக்கு அரசு சார்ந்த பெரிய லாபம் கிட்டும் கோரிக்கை நிறைவேறும்.

குருவின் 9ம் பார்வை பலன்:

குரு தனது 9ம் பார்வையால் துலாம் ராசியை பார்க்கிறார். ராசி,லக்னத்தை குரு பார்வையிடுவது மேன்மை தரும். எனவே துலாம் ராசியினர் அனைத்திலும் முதன்மையாக வரப்போகிறார்கள். இதுவரையில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். இதனால் குடும்ப உறவுகள் பெருகும். நிறைய மனை,வயல் வாங்குவீர்கள். அதில் வேளாண்மை பெருகும்.

தன்னம்பிக்கை மிகும். சில சமயம் தவறு செய்தவர்களை தைரியமாக தட்டிக் கேட்பீர்கள். சிலசமயம் சற்று யார் பேச்சையும் கேட்காமல் நடந்துகொள்வீர்கள்.சில சமயம் எல்லோரும் செய்ய தயங்கும் செயல்களை நீங்கள் முன்னின்று எடுத்து செய்வீர்கள். இது ஒரு சேவையாக செய்வீர்கள்.

உங்கள் வீட்டில் வேலை செய்பவருக்கு பெரும் கஷ்டத்தில் இருந்து மீண்டு வர உதவுவீர்கள். ஒரு ஏமாற்று பேர்வழி இடமிருந்து நல்ல செய்தி ஒன்று கிடைக்கும். துலாம் ராசியை குரு தனது 9-ம் பார்வையால் பார்க்கும் பொழுது நீங்கள் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள்..

பரிகாரம்:

திருவண்ணாமலை சென்று சிறப்பான அலங்காரத்தில் சிவனை தரிசனம் செய்து வாருங்கள்.. இந்த குரு பெயர்ச்சி உங்கள் வாழ்வில் அளப்பரிய நன்மைகளை கொண்டுவந்து சேர்க்கும்..

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular