Saturday, December 2, 2023
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022-விருச்சிக ராசி

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022-விருச்சிக ராசி

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022-விருச்சிக ராசி

செவ்வாய் பகவானின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே!!!

இதுவரையில் உங்களுக்கு மூன்றாம் இடமான மகரத்தில் இருந்து வந்த குருபகவான். தற்போது நடைபெறும் குரு பெயர்ச்சியின் மூலம் நான்காம் இடமான கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

அவரின் பார்வைகள் முறையே உங்கள் ராசிக்கு 8, 10 மற்றும் 12ஆம் இடங்களில் பதியும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

விருச்சிக ராசி காரர்களின் பொதுவான விவரங்கள்:

 • விருச்சிக ராசிகாரர்கள் பலர் வெளியில் அமிர்தமும், நெஞ்சில் வஞ்சமும் கொண்டவர்கள்.
 • உள்ளுக்குள் ஆயிரம் கோபதாபம் இருப்பினும் வெளியில் காட்டி கொள்ள மாட்டார்கள்.
 • இவர்களின் குடும்பம் ஆன்மிக பற்று கொண்ட குடும்பமாக இருக்கும்.
 • இளைய சகோதரர் இவரது வாழ்க்கையின் உயர்வு கண்டு மனதுக்குள் புழுங்கி தீர்ப்பார்.
 • இவர்களுடைய தாய் பற்றற்ற பெண்ணாக எதிலும் ஈடுபாடு காட்டாமல் இருப்பார்.
 • இவர்களது பரம்பரை, பூர்வீகம் மெச்சத்தக்க அமைந்திருக்கும்.
 • இவர்களது வேலை மலை, வெப்பம் சார்ந்து அமையும்.
 • வாழ்க்கைத் துணை அன்பாக இருப்பினும் இவர்களது குண சீர்கேட்டால் அவ்வப்போது மனக்கசப்பு வந்து போகும்.
 • சிலருடைய கோள் சொல்லுதலும் ,குறும்புத்தனமும், சில அவசர செயல்களும் அவமானத்திற்கு காரணமாகும்.
 • தந்தை மதிக்கத்தக்கவராக அமைதியான குணம் உடையவராக இருப்பார்.
 • இவர்களது தொழிலில் கண்டிப்பாக அரசு சார்பிருக்கும்.
 • இவர் அரசியலில் பெரு விருப்பம் உடையவராக இருப்பார்.
 • வியாபார சம்பந்தமான பயணங்கள் மற்றும் வாழ்க்கை துணையோடு கசந்து அவ்வப்போது இடம் மாறுவது நடக்கும்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

கும்ப குருவின் பலன்கள்:

உங்கள் ராசிக்கு இதுவரையில் 3ஆம் இடமான மகரத்தில் இருந்து வந்த குருபகவான் இப்போது 4-ஆம் இடமான கும்பத்தில் அமர்கிறார்.

குரு உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் ஐந்தாம் வீட்டின் அதிபதி.

4-ஆம் இடம் என்பது சுகஸ்தானம். எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கிய மேம்பாட்டிற்காக நிறைய செலவு செய்வீர்கள். சிலர் இதற்காக வேறிடம் செல்வர். வேறு சிலர் தங்கள் சொந்த ஊர் செல்வர். சிலர் தங்கள் வீட்டிலேயே உடல்நல மேம்பாட்டுக்காக முயற்சி செய்வர்.

உங்களின் வாரிசுகள் கல்வியின் பொருட்டு வேறிடம் செல்வர். சிலர் வாரிசுகள் சொந்த வீட்டுக்கு திரும்புவர். பூர்வீக சொத்தை விற்க அலைச்சல் உண்டு. திரைப்படம் ,தொலைக்காட்சி கலைஞர்கள், பின்னணி பேசுவோர், பாடகர்கள் சிறு சிறு அலைச்சல்,அசதி மூலம் நன்கு பணம் சம்பாதிக்க முடியும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

குருவின் பார்வை பலன்கள்:

குருவின் ஐந்தாம் பார்வை பலன்:

குரு தனது ஐந்தாம் பார்வையால் விருச்சக ராசியின் எட்டாம் இடத்தை எட்டி நோக்குகிறார். எப்போதும் குரு பார்க்கும் இடம் விருத்தியாகும். 8-ஆம் இடம் என்பது ஆயுள் ஸ்தானம் அவ்விடத்தில் குரு பார்வை வரும்போது ஆயுள் விருத்தி ஏற்படும். யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் இந்த காலகட்டத்தில் குருபகவான் அவர்களை கண்டத்தில் இருந்து காப்பாற்றி பாதுகாப்பார்.

8-ஆம் இடம் என்பது புதையல் ஸ்தானம் அதனை பார்வையிடும் குரு விருச்சிக ராசிகாரர்களுக்கு எதிர்பாராத தனப்பிராப்தி கொடுப்பார்.

இதுவல்லாது எட்டாம் இடம் என்பது அவமான ஸ்தானம். எனினும் குரு உங்களை பெரு அவமானப் படாமல் குடை போல் பாதுகாத்து விடுவார். இளம்பெண்ணிடம் கவனம் தேவை. வாழ்க்கை துணையுடன் பேசும்போது வார்த்தைகளில் கனம் கூடாது. கவனம் தேவை, இல்லையெனில் பிரிவுக்கு வழிவகுத்துவிடும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்:

குரு ஏழாம் பார்வையால் விருச்சக ராசியின் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். இதனால் அரசு, அரசியல் சார்ந்த விருச்சிக ராசியினர் வெகு மேன்மை பெறுவர். உயர்பதவிகள் தேடிவரும். சட்டத்துறையில் வெகுமதி கிடைக்கும். அரசு கவுரவம் கிடைக்கும்.

சொந்த தொழில் விஷயமாக பின்னடைவை சந்தித்து கொண்டிருந்தவர்கள் மிக முன்னேற்றம் காண்பர். வெளிநாட்டு பங்குதாரர் கிடைக்க வாய்ப்பு உண்டு. வெளிநாடு சம்பந்தமான சந்திப்புகள் நிகழும். சிலருக்கு திருமணம் கூடிவரும். மிக உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவருடன் சம்பந்தம் ஏற்படும்.

குருவின் 9ம் பார்வை பலன்:

குரு தனது 9ம் பார்வையால் விருச்சக ராசியின் 12-ஆம் இடம் விரய ஸ்தானத்தை வீறுகொண்டு நோக்குகிறார்.

குரு பார்த்தால் அது சுபம் தான் விரைய ஸ்தானத்தைப் பார்த்தாலும் அதை சுப விரயமாக தான் அமையும்.

தாய்மாமன் சீர் செய்யவேண்டியிருக்கும். வேலை சம்பந்தமாக கொஞ்சம் அப்படி- இப்படி செய்ய வேண்டியிருக்கும். கல்யாண செலவு கண்டிப்பாக உண்டு.

உங்களை வீழ்த்த பிறர் செய்த சூழ்ச்சி முறியடிக்கப்படும். வேலையின் பொருட்டு தொலை தூர இடங்களுக்கு செல்வீர்கள். உங்களில் சிலர் பினாமி பெயரில் நிறைய நிலம், வாகனம், விவசாய பூமி போன்றவற்றை வாங்குவீர்கள்.

குரு பார்க்கும் இடம் 12-ஆம் இடத்தில் ராகு சார நட்சத்திரமான சுவாதி இருப்பதால் சில செலவுகள், சில பயணங்கள், சில முதலீடுகள் சில தொடர்புகள் வெளியில் தெரியாமல் ரகசியமாக அமைய வாய்ப்பு உண்டு.

பரிகாரம்:

இந்த காலகட்டத்தில் ஒரு முறை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வணங்குங்கள். ஏழை முதியோருக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் தொடரும்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular