- Advertisement -
பரிவர்த்தனை யோகங்கள்
சூரியன் -புதன்
- சூரியன் இல்லத்தில் புதனிருக்க புதன் இல்லத்தில் சூரியன் இருந்து பரிவர்த்தனை நிலை ஏற்பட்டால் நல்ல வித்யா பலமும் ,கணித தேர்ச்சி நினைவாற்றலும்,எதையும் சாதிக்கும் வேகமும்,மற்றவர்களை அனுசரித்து செயல்படும் திறனும் எவ்வகை தொடர்பினர் ஆனாலும் அவ்வகைக்கு தக்கபடி நடந்து கொள்ளும் ஆற்றலும் ,மருத்துவ துறை,கணித துறை, கல்வி துறை, நூதமான ஆராய்ச்சி திறன் உள்ள விஞ்ஞான துறை போன்றவைகளில் சிறப்பு கிட்டும்.
- தாய் தந்தை வகையின் இன பந்து தொடர்பில் சிறப்புகள் ஏற்படும்.
- வியாபார திறன்,கலைத்திறன் எழுத்து ஆற்றல் இவைகள் ஏற்படும்.
- கல்வியில் தடையற்ற உயர்வும் காணும்.
- பல மொழிகளில் பாண்டித்தியம் உண்டாகும்.
- சாஸ்திர ஞானம்,வியாக்கி யானம் செய்யும் திறனும் உண்டு.
- இப்பரிவர்தனமானது ரிஷபம் ,மிதுனம்,சிம்மம் ,விருச்சிகம் ,தனுசு ,கும்பம் போன்ற லக்கினத்திற்கு சிறப்பை தருகிறது.
- இதில் 2,3,4,2,10,11,9,10,5,7,பரிவர்தனங்கள் சிறப்பு மிக்கவைகளாய் இருக்கிறது.
- இதில் பெரும்பாலும் யோக அமைப்புகள் பொருந்திய ஜாதகங்களிலேயே காணப்படுகிறது.
- பரிவர்தனம் ஏற்பட்ட லக்கினமோ,கிரகங்களோ,சரஸ் வதாம்சம் பெற்றிருந்தால் கதை ,கட்டுரை ,கவிதை ,இலக்கியம்,பேச்சு ஞானம் இவைகளில் சிறப்பு மிக்கவர்களாகவும் வசதி வாய்ப்பில் குறை அற்றவர்களாகவும் உள்ளனர்.
தொடரும்…
- Advertisement -