Monday, February 26, 2024
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்-கிருத்திகை-ரோகினி-மிருகசீரிஷம்

குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்-கிருத்திகை-ரோகினி-மிருகசீரிஷம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்-கிருத்திகை-ரோகினி-மிருகசீரிஷம்

கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

 • இந்த குரு பெயர்ச்சி உங்களை மிகவும் நிம்மதியாக இருக்கச் செய்யும். மேலும் நான்கு பேர் முன்னால் சற்று பெருமைப்பட இருக்க வைக்கும்.
 • அது வீடு வாகனம் வயல் வாங்கியதாலோ, உங்கள் பெற்றோரின் மகிழ்ச்சியான ஆசீர்வாதத்தாலோ என ஏதோ ஒரு நிறைவான மகிழ்வில் திளைப்பபீர்கள்.
 • உங்களில் ஒரு சிலர் நண்பர்களின் அவசர தேவைக்கு அனைத்துமாக உதவ இயலும். அதன் பொருட்டு மனம் பூரிப்பு உண்டாகும்.
 • உங்களின் உழைப்பு மதிப்பு மிக்கதாக இருக்கும்.
 • இந்த திறமை நீங்களே எதிர்பாராத அரசு கவுரவத்தை கொண்டு வந்து சேர்க்கும்

பரிகாரம் :

வயல்கள் சூழ்ந்த பசுமையான இடத்தில் உள்ள சிவன் மற்றும் கந்தனை வணங்கவும்.

குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

 • கும்ப குரு உங்களுக்கு நல்ல விவேகத்தை கொடுப்பார். இதன் மூலம் ‘இதனை இவன் கண் விடல் ‘என்பதுபோல் மனிதர்களை பிரித்தறியும் சக்தி கிடைக்கும்.
 • இதனால் தவறான நபர்களிடம் எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்வீர்கள். தொலைக்காட்சி, தகவல் தொடர்பு, மனிதவள மேம்பாடு எனும் துறைகளில் பணிபுரிவோர் இந்த உள்ளுணர்வு தரும் சமிக்ஞைகளால் எச்சரிக்கை அடைந்து விடுவீர்கள்.
 • குறிப்பாக ரோகிணி நட்சத்திர பெண்களுக்கு இது சற்று அதிகமாக வருவதால் இவர்கள் தொழில் சார்ந்த எண்ணம் நிறைவேறும் போது வரக்கூடிய இடர்பாடுகளையும், அவமானங்களையும் முதலிலேயே உணர்ந்து அதிலிருந்து விலகி விடுவர்.
 • குரு இந்த ஆற்றலை கும்பத்தில் இருந்து கொடுத்து உதவுவார்.

பரிகாரம் :

குளிர்ச்சியான இடத்தில் இருக்கும் அம்பாளை வணங்கவும்

மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

 • இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு வியாபார நுணுக்கத்தை கற்றுத் தரும். அப்படி என்றால் என்ன? வியாபாரத்தில் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தால் காரியம் நடக்கும்-யாரைப் பிடித்தால் வியாபாரம் மேன்மையடையும்-யாரை பகைத்துக் கொள்ளக்கூடாது எதை செய்தால் லாபம் வரும் என்பது போன்ற விஷயங்களை கற்றுத் தருவார்.
 • குரு பெயர்ச்சி இதெல்லாம் கற்றுத் தரும் என்று கேட்கலாம். குரு ரிஷப ராசியின் எட்டாம் அதிபதி அல்லவா? அவர் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற அளவுக்கு சொல்லித் தர மாட்டார்.
 • ஆனால் நாசூக்காக லாபம் சம்பாதிப்பது எப்படி என சொல்லித் தருவார்.
 • அதனை சட்டென்று பிடித்துக் கொள்வது உங்கள் திறமை பிறகு வெளியூர் வெளிநாட்டு வரனுடன் திருமணம் செய்து வைப்பார்.

பரிகாரம் :

வயல்கள் நிறைந்த இடத்தில் உள்ள வள்ளி, தெய்வானை, முருகனை வணங்கவும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்512அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்164ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்99ஆன்மிக தகவல்91அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்50பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25கோவில் ரகசியங்கள்20சிவன் ஆலயங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராசிபலன்18அற்புத ஆலயங்கள்18வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213புத்தாண்டு பலன்கள்-202213சுபகிருது வருட பலன்கள்13ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10Gem Stone8பெருமாள் ஆலயங்கள்8தேவாரத் திருத்தலங்கள்7கருட புராணம்7திருமண பொருத்தம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்4தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மார்ச் மாத ராசி பலன் 20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular