Friday, December 1, 2023

Rasi Palan Today-07.12.2021

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

Rasi Palan Today-07.12.2021

Rasi Palan Today
Rasi Palan Today-07.12.2021

மேஷம்-Mesham 

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

ரிஷபம்-Rishabam 

சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தினரை பற்றி யாரிடமும் குறைவாக பேச வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலர் உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலை கழிக்கப் படலாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

மிதுனம்-Mithunam 

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத் துணையால் சில சங்கடங்கள் ஏற்பட்டு மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தும். பொறுமை மிக அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும்.

கடகம்-Kadagam 

மனம் பக்குவம் அடையும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுக்க இடம் உண்டு. கணவன் – மனைவிக்கிடையே பிரச்சனையை பேசித் தீர்க்க முயலுவீர்கள். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். சிலரது உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார். சிலரது ஆலோசனை உறவினர்களால் பாராட்டப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ஓரளவு ஆறுதல் தரும். பல வித புதிய அனுபவங்களை உள்ளடக்கிய நாள்.

சிம்மம்-Simmam 

தொழிலில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்துப் போக வேண்டிய சூழல் ஏற்படும். பெண்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு குறித்து புதிய நம்பிக்கை பிறக்கும். மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோதனைகளை கடந்து சென்று இறுதியில் முயற்சியால் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.

கன்னி -Kanni

குடும்பத்தினரின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள். சிலருக்குத் தாயார் வழியில் கூட சில உதவிகள் கிடைக்க இடம் உண்டு. எனினும், தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். வண்டி. வாகனங்கள் தொடர்பாக சிலருக்கு செலவுகள் ஏற்படலாம்.

துலாம்-Thulam 

இன்றைய தினத்தில், எதிர்பார்ப்பு கூடுவதால் ஏமாற்றங்களுக்கு உள்ளாக வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமையில் சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் இறுதியில் சரியாகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.

விருச்சிகம்-Viruchigam 

வாழ்க்கைத் துணையின் வாழ்வில் மேன்மை உண்டு. உத்யோகத்தில் கூடுதல் கவனத்துடன் பணிபுரிவது நல்லது. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய்நாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சிலர் தெய்வ காரியங்களில் ஈடுபட இடம் உண்டு.

தனுசு-Thanusu 

இன்று சிலருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. அதனால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவைப்படும் நாள். எவ்வளவு வேலை பளு இருந்தாலும் கூட நிதானமாக செயல்பட வேண்டும். ஆயுதங்கள், வாகனங்களை கையாளும் சமயத்தில் கூடுதல் கவனம் தேவை. சுமாரான நாள் தான். எனினும் குரு பார்வையால் தீமையில் இருந்து கடைசி நொடியில் காக்கப்படுவீர்கள்.

மகரம்-Magaram 

எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்-Kumabm 

குடும்ப விஷயங்களை நண்பர்கள் அல்லது வேண்டியவர்கள் என்று எண்ணி பிறரிடம் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம். முன்கோபத்தை குறைத்து சூழ்நிலையை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைக் கடந்து ஓரளவே லாபம் ஈட்ட இயலும். மற்றபடி, சுமாரான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை இனம் கண்டு தவிர்க்கவும். அலைச்சல் அதிகம் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது.

மீனம்-Meenam 

எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். அலைச்சல் அதிகம் காணப்பட்டாலும் உங்களது முயற்சி வீண் போகாது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular