சந்திரனும்-திருமணமும்
லக்கினத்திற்கு 7-ல் சந்திரன்
- லக்கினத்திற்கு 7-ல் சந்திரன் இருந்தால் வரும் மனைவியால் நன்மையும் அவரால் சில சொத்துக்களும் சேரும்.
- நான்குக்கு மேற்பட்ட பிள்ளைகள் உண்டு.
- நாளடைவில் உள்ள அதிகாரத்தில் உச்ச நிலையை அடைதல்.
- அரசியலில் சாமர்த்தியம் காட்டுவார்.
- குரு பார்வை இல்லாமல் இருப்பின் காதல் திருமணம் ஆகலாம்.
- காலம் தாமதித்து திருமணம் செய்வது நல்லது.
- சந்திரன் செவ்வாயுடன் கூடிடில் அற்பத்தனமான மனைவி அமைவாள்.
- புதனுடன் கூடிடில் கொலைத் தன்மையும் , குருவுடன் கூடிடில் போகமும் உடையவள் .ஒருக்கால் – திருமணம் நடைபெறாமலும் போகலாம்.
- சுக்கிரனுடன் கூடிடில் பெண் பித்தன்.
- சனியுடன் கூடிடில் புத்திரர் அற்பம் .
- சுறுசுறுப்பு அதிகம் உள்ளவர்.
- உடல் நலம் சாதாரணமாக இருக்கும்.
- இவர்கள் செய்யும் காரியங்கள்யாவும் முக்கால் பாகம் வெற்றியடையும்.
- சந்திரன் – சுக்கிரன் சேர்க்கையில் சந்திரனோ , சுக்கிரனோ ஆட்சி , உச்சம் ( அல்லது ) ஆட்சியிலிருந்தால் சகல விதமான வசதிகளுடன் கூடிய அழகான மனைவி வாய்ப்பாள்.இவர்கள் தாய் , அற்ப ஆயுள் உடையவள்.
- அன்னிய நாட்டுப் பெண்களிடம் அதிகம் நாட்டம் உள்ளவர்.
- பெரும்பாலும் அழகுள்ள மனைவியே அமைவாள்.
- பெரிய விஷயங்களை விட்டு விட்டு சிறு விஷயங்களுக்கு சண்டை போடுவார். சிரேஷ்டமான பெண்ணை அனுபவித்தல்.
- மனைவி விரோதம் அடைதல் , சொன்ன சொல் தவறாதவர்.
- பழியின்றி வாழ்தல் அளவற்ற பொருள் தேடல் , காம எண்ணம் அதிகம் இவை உண்டாம்.பிறர் சொத்தையும் , முன்னேற்றத்தையும் கண்டு பொறாமை கொள்வார்.பெண்கள் விரைவில் அவர்களை தன் வசப்படுத்தி விடுவார்கள்.
- தேய்பிறைச் சந்திரனாகில் வரும் மனைவி அங்கக் குறைவுள்ளவளாக வருவாள். சந்திரன் விருச்சிகத்தில் இருந்தால் மனைவிக்கு ஜல கண்டம் உண்டு.
- உத்தம ஸ்திரீயான மனைவி அமைவாள்.
- மனைவி வரும் திக்கு கிழக்கு தாய் வழி உறவில் அமையலாம் .
- நிறம் வெண்மை.7 – க்குரியவரை பொருத்தும் அமையும் மனைவியின் குணம் வைராக்கிய குணம்.
- மனைவி வரும் தூரம் சுமார் 40 மைல் சுற்றளவுக்குள்.
- கணவன் தொழில் விவசாயம் மற்றும் நீர் சம்பந்தப்பட்ட தொழில் , ஆபரணம் அல்லது ஆடைத் தொழில் ( கலை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோர் )
- Advertisement -