Saturday, December 2, 2023

Rasi Palan Today-17.12.2021

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

Rasi Palan Today-17.12.2021

Rasi Palan Today
Rasi Palan Today-17.12.2021

மேஷம்-Mesham 

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

ரிஷபம்-Rishabam 

சிலருக்கு இருந்து வந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.

மிதுனம்-Mithunam 

செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். உத்தியோ கத்தில் உங்கள் வேலையை பாராட்டுவார்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

கடகம்-Kadagam 

இன்று மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். தொழில் ரீதியாக ஓரளவு லாபமும் ஏற்படலாம். எதிர்பார்த்த நிதி உதவி சிலருக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். மொத்தத்தில், இன்று ஒரு சுமாரான நாளே.

சிம்மம்-Simmam 

இன்று எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற கூடுதல் முயற்சிகளை செய்ய வேண்டி இருக்கும். இது நாள் வரையில் இருந்து வந்த மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பெண்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். உத்யோகஸ்தர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இது ஒரு வழக்கமான நாளே!

கன்னி -Kanni

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்-Thulam 

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். மற்றவர்களுடன் வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். வியாபாரம் சற்று மந்தமாகத்தான் இருக்கும்.

விருச்சிகம்-Viruchigam 

எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு-Thanusu 

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

மகரம்-Magaram 

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கும்பம்-Kumabm 

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோ கத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்-Meenam 

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எனினும், முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே நடைபெறும். உங்கள் முயற்சிகளுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் இன்று ஒரு சுமாரான நாள் தான்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular