Sunday, October 1, 2023

Rasi Palan Today-18.12.2021

ASTRO SIVA

google news astrosiva

Rasi Palan Today-18.12.2021

Rasi Palan Today
Rasi Palan Today-18.12.2021

மேஷம்-Mesham 

நண்பர்கள் எதிர்பார்ப்புடன் உங்களை அணுகுவர். தொழில், வியாபார நடைமுறையில் தேக்க நிலை ஏற்படலாம். திடீர் செலவால் சேமிப்பு குறையலாம். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் வேண்டும். பெண்கள் பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்-Rishabam 

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும். மொத்தத்தில் திறமையால் சாதிப்பீர்கள்.

மிதுனம்-Mithunam 

புதிய முடிவுகளை இன்றைய தினத்தில் நன்கு யோசித்து எடுக்கவும். நிதானமாக செயல்பட்டு பொறுமையாக இருக்க வேண்டிய தினம் இன்று. வேலை பளு அதிகரிக்கும். உங்கள் பேச்சே உங்களுக்கு வினை ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று. மேலதிகாரிகளிடம் நிதானமாக பேசுங்கள். சிலருக்கு காரணம் இல்லாமல் கோபம் வந்து போகலாம். அதனால் கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையுடன் காரியம் சாதிக்கப் பாருங்கள்.

கடகம்-Kadagam 

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். அலுவலகப் பணிகளை குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்-Simmam 

உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப் பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

கன்னி -Kanni

சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பணிகளை குடும்பத்தினர் பகிர்ந்துகொள் வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

துலாம்-Thulam 

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்

விருச்சிகம்-Viruchigam 

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

தனுசு-Thanusu 

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம்… சிலருக்கு உத்தியோக மாற்றம் கூட உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட இடம் உண்டு. எனினும் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக் கிடையே திடீர் மனவருத்தம் ஏற்பட்டு விலகலாம். முடிந்த வரையில் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் மனதறிந்து நடப்பது நல்லது. இது ஒரு சுமாரான நாள்.

மகரம்-Magaram 

குடும்பத்தினருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.

கும்பம்-Kumabm 

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள் வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும் நாள்.

மீனம்-Meenam 

பணவரவும் செலவுகளும் சமமாக இருக்கும் நாள். கேட்டிருந்த உதவிகள் கிடைக்கும். மாலையில் குடும்பத்துடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். செய்யும் செயல்களில் சிறு சிறு தடைகள் உண்டாகலாம். எனினும் சமாளித்து விடுவீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மற்றபடி, சின்னச் சின்ன அலைச்சல்கள் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular