Thursday, December 7, 2023

Rasi Palan Today-20.12.2021

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

Rasi Palan Today-20.12.2021

Rasi Palan Today
Rasi Palan Today-20.12.2021

மேஷம்-Mesham 

பெற்றோரின் ஆலோசனை நன்மையளிக்கும். தொழில் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது. பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது மற்றும் ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.

ரிஷபம்-Rishabam 

கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்தே ஓரளவு லாபம் பார்ப்பீர்கள். நிலுவைப் பணம் சிலருக்கு வசூலாகும். நீண்ட நாள் தேடிய பொருள் புதிய முயற்சியால் கைக்கு வந்து சேரும்.

மிதுனம்-Mithunam 

எடுத்துச் செய்யும் செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். எனினும், எடுத்துச் சொல்லி புரிய வைத்து விடுவீர்கள். வீட்டிலும் – வெளியிலும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி அலைச்சலுக்குப் பின் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும்.

கடகம்-Kadagam 

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட இடம் உண்டு. வாழ்க்கைத் துணை வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையில் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வாய்ப்பு அமையும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

சிம்மம்-Simmam 

அரசு காரியங்களில் அலைச்சல் அதிகரிக்க இடம் உண்டு. சகோதரர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் பிற்பகலுக்கு மேல் விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

கன்னி -Kanni

இது நாள் வரையில் வாழ்க்கையில் இடையூறு செய்தவர்களை இனம் கண்டு விலகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறு அளவில் போட்டி இருக்கும். வருமானம் சராசரி அளவில் இருக்கும். அரசு வகையில் அனுகூலம் பெற கூடுதல் முயற்சி தேவைப்படும். பெண்களுக்கு தாய் வழியில் சில உதவிகள் கிடைக்கும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி தேவைகள் இறுதியில் நிறைவேறும்.

துலாம்-Thulam 

தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அம்பிகையை வழிபட அல்லல்கள் நீங்கும்.

விருச்சிகம்-Viruchigam 

அனாவசிய பேச்சை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சச்சரவு வந்து நீங்கும். அலுவலக ரகசியங்களை வெளியிடவேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

தனுசு-Thanusu 

ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். உறவினர் மற்றும் நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். எனினும் எதையும் எதிர் நீச்சல் போட்டு இறுதியில் வெல்வீர்கள். கவலை வேண்டாம்.

மகரம்-Magaram 

உற்சாகமான நாளாக அமையும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்

கும்பம்-Kumabm 

சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

மீனம்-Meenam 

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular