Friday, December 8, 2023
Homeஅம்மன் ஆலயங்கள்திருவேற்காடு கருமாரி அம்மன்

திருவேற்காடு கருமாரி அம்மன்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

திருவேற்காடு கருமாரி அம்மன்

வரலாறு :

சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் ஆலயம் திருவேற்காட்டில் கருமாரியம்மன் அமைந்துள்ளது.மாரி என்ற சொல்லுக்கு மழை என்று பொருள். இப்பகுதியில் நாகப்புற்று முற்காலத்தில் இருந்ததை அம்பிகையாக பாவித்து வணங்கிய மக்கள் பின் அம்பிகையின் விருப்பத்தை ஏற்று புற்றை பெயர்த்து சுயம்பு வடிவில் அம்மனுக்கு ஆலயம் அமைத்தார்கள்.

சிறப்பு :

அம்பிகை தானாக தோன்றியதால் இவருக்கு.கருவில் இல்லாத மாரி என்ற சிறப்பு பெயர் உண்டு.இக்கோவிலில் மரத்தால் செய்யப்பட்ட சிலை வடிவில் . கருமாரி அம்மனுக்கு தனி சன்னிதி இருக்கிறது.இந்த அம்மனை மரச்சிலை அம்மன் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.இவ்வம்மன் 3 சிறப்பு அம்சங்கள் கொண்டவள்.

திருவேற்காடு கருமாரி அம்மன்
திருவேற்காடு கருமாரி அம்மன்

1. சிவபெருமானின் 3 வது கண்ணிலிருந்து தோன்றிய காத்தவராயன் எப்பொழுதும் இவருடன் காட்சி அளிப்பார்.

2. சிம்ம வாகனத்தை கொண்டவள்.

3. தெற்கு திசையுடன் தொடர்புடையவள் . அதனால் இவளது ஆலயங்களை தெற்கு திசையில் அமைந்துள்ள நகரங்களில் காணலாம்.

பரிகாரம் :

விளக்கு ஏற்றுவதை கருமாரியம்மன் மிகவும் விரும்புவதால் பக்தர்கள் அம்மனை வழிபடும் பொழுது , விளக்கு ஏற்றியும் , பால் ஊற்றியும் பாடல்கள் பாடியும் வழிபடுவர். சுமங்கலி பெண்கள் இத்தலத்தில் பௌர்ணமி அன்று விளக்கு ஏற்றி வழிபடுவதை பரிகாரமாக கொண்டுள்ளனர். கருமாரியம்மன் , சூரியனிடம் தன எதிர்காலம் பற்றி கேட்க , அவர் தெரியாது எனக் கூறஅம்மன் அவரிடம் கோபம் கொண்டு , சூரிய பகவானின் கதிர்களின் ஒளியைக் குறைய செய்தார். பின் சூரியன் அம்மனிடம் தயவாய் வேண்டிக்கொள்ள மேலும் ஞாயிற்றுக் கிழமையை கருமாரி அம்மன் தினமாக கொண்டாடுவதற்கும் , வருடம் இருமுறை தனது கதிர்கள் அம்மன் மேல் விழுவதற்கும் உத்தரவும் வேண்டினார். இதனால் இத்தலத்தில் வருடம் இருமுறை சூரியக் கதிர்கள் அம்மன் மேல் விழுவதை பக்தர்கள் காணலாம்.

திருவேற்காடு கருமாரி அம்மன்
திருவேற்காடு கருமாரி அம்மன்

வழித்தடம் :

சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவேற்காடு உள்ளது.சென்னை புறநகர் பகுதிகளிலிருந்தும் சென்னையில் கோயம்பேடு , பிராட்வே,தியாகராயநகர்,வடபழனி . மந்தைவெளி பேருந்து நிலையங்களிலும் பேருந்து வசதிகள் உள்ளன.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular