Friday, April 19, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்ராகு-கேது பற்றிய அறிய தகவல்கள்

ராகு-கேது பற்றிய அறிய தகவல்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ராகு-கேது பற்றிய அறிய தகவல்கள்

  • ராகு , கேது 5 , 9 – ல் அமர்ந்து , 2 , 7 – ம் வீட்டதிபர்களுடன் சேர்க்கை , பார்வை , அல்லது அவர்களின் நட்சத்திரத்தைப் பெற்று இருப்பின் , அத்திசா புத்திக்காலம் நல்ல யோகத்தைத் தரும்.
  • ராகு தங்கிய இடத்திலிருந்து 5 , 9 – ல் சனி , குரு இருப்பின் சண்டாளத் தனமான காரியங்களைச் செய்யும் சுபாவத்தை பெறுவான். துர்தேவதைகளை வைத்து கெட்ட வேலைகளைச் செய்வார்.தவறான வழியில் பணம் திரட்டுவான்.
  • ராகு நின்ற இடத்திலிருந்து 5 , 9 – ல் லக்கினத்திற்கு10 – ம் வீட்டதிபதி தங்கினால் , தனவான் ஆவான்.இதே பத்தாம் அதிபதி 5 , 9 – ல் நீச்சம் பெற்று இருந்தால் , பாப காரியங்களைச் செய்பவன் என விளம்பரம் ஆகும்.
  • ராகு நின்ற இடத்திலிருந்து 5 , 9 – ல் லக்னாதிபதியும் 9 ம் இடத்தின் அதிபதியும் சேர்ந்து பலமுடன் இருப்பின் சன்னியாசி யோகம் கிட்டும்.இல்லறத்தில் இருப்பினும் இல்லறத் துறவியாவான். லெளகீக வாழ்க்கை இனிக்காது, ருசிக்காது.ஆத்மீகம் தேன் போல் இனிக்கும் . இது பூர்வ பராசர்யத்தின் மூலம் எடுத்தது.அனுபவத்திற்கு சரியாக உள்ளது.
  • ராகு , சந்திரன் சேர்க்கையானது , லக்கின முதல் 6 ராசிக்குள் இருக்கக்கூடாது . அப்படி இருப்பின் ஜாதகரின் தாய் தந்தை வம்சத்தை பாதிக்கும்.எக்காரியமும் பலமுடன் அமையாது. தாய்க்கு ரோகத்தை தந்து விடும்.ஜாதகரின் உடல் நிலையும் அடிக்கடி பாதிக்கும் ( 12 வயது வரையிலும் இது பாதிக்கும்)
  • கேது , சனி , சூரியன் சேர்க்கையானது எங்கு இருப்பினும் ஜாதகரின் 9 வயது வரைக்கும் தந்தை , தந்தையின் வர்க்கத்தாரை பாதிக்கும். ஆயுள் தோஷத்தை தரலாம். மேற்படி திசா புத்திகள் வரும் காலமெல்லாம் தந்தை இல்லையேல் , ஜாதகர் இல்லையேல் அவர் குடும்பம் போன்றவைகளை படாத பாடு படுத்தும்.
ராகு-கேது பற்றிய அறிய தகவல்கள்
  • ராகு சந்திரன் சேர்க்கை பெற்று இவர்களுக்கு 4 – ல் சனி , செவ்வாய் , இவர்களுக்கு 7 – ல் சுக்கிரன் – புதன் , 8 – ல் சூரியன் , குரு சேர்ந்து இருப்பின் ஜாதகர் 9 வயது கடப்பது மிகவும் துர்லபம் , கடந்து விட்டால் யோகத்தை தரும்.
  • லக்கினாதிபதியோடு , சந்திரன் நின்ற ராசிநாதன் சேர்க்கை பெற்று 7 – ல் சுக்கிரன் ; 12 – ல் ராகு , குரு இருப்பின் , பல விதமான சொத்துக்களை சேர்க்கும் வாய்ப்பு உண்டாம். வஞ்சம் , சூழ்ச்சி தகாத செயல் புரிந்தாவது பணக்காரன் ஆவார்.
  • லக்னத்தில் லக்னாதிபதியும் சுக்கிரனும் இருந்து , சந்திரன் நின்ற வீட்டதிபதி 7 – ல் ; 10 – ல் ராகு – குரு இருப்பின் , ஜாதகர் சிறு வயது முதலே யோகத்தை அடைவர். பால்ய வயது 13 கடந்த பின்னே பல சொத்துக்கள் இவரை நாடி வரும் வாய்ப்பு உண்டு . தர்மம் , புண்ணியம் இணைந்த தம்பதிகளுக்கே இப்புண்ணிய புத்திரர் பிறப்பர்.
  • தனித்த ராகு , கேதுக்கள் தான் நின்ற இடத்தின் பலனைத் தருவர் . ராகு – கேதுக்கு 3 , 7 , 11 – ம் பார்வை உண்டு . இவற்றில் ராகு , கேதுவின் 3 , 11 – ம் பார்வைக்குள் மற்ற எல்லாச் கிரகங்களும் , லக்கினமும் அமையுமானால் , அது ஒரு தெய்வ பிறவி இந்த மாதிரி ஜாதகம் காண்பது மிக மிக அரிது.
  • மகரம் , கும்பம் , கடகம் , சிம்மம் இந்த நான்கு வீட்டிற்குள் ராகு , கேதுக்கள் அமைந்தால் விசேஷ குணம் உண்டு . ராகு – கேதுக்களின் பார்வையிலேயே ஒரு தனி முக்கியத்துவம் வாய்ந்தது . கேந்திர – கோணங்களில் நின்ற ராகு -கேதுக்கள் தனித்து இருந்தாலும் , கிரக சேர்க்கையுடன் நின்றாலும் விசேஷமாக மெருகு பெறுகின்றன.
  • தனிச் சிறப்புடையது கால சர்ப்ப யோகம் இதில் கும்பம் முதல் சிம்மம் வரை மேல் பாகத்தில் ராகுகேதுக்கள் எல்லா கிரகமும் , லக்கினமும் அமையுமானால் , தனி விசேஷம் பொருந்தியதாகும். இதே போல் கீழ் பாகத்திலும் இருப்பின் விசேஷமே .
  • இரண்டு பகை கிரகங்கள் ஒரு வீட்டில் நிற்க அத்துடன் ராகு சேர்ந்தால் நல்ல பலனையும் , கேது சேர்ந்தால் கெட்ட பலனையும் தரும்.நட்பு கிரகங்கள் சேரும்போது மாறுபட்ட பலன்களை தரும் . இவ்வாறு சேரும் போது ராகு , கேதுக் களின் பலம் சற்று குறையும்.வாழ்வில் எதிர் நீச்சலை உண்டாக்குவதே இந்த ராகு – கேதுக்கள்தான்.
  • ராகு – கேதுக்களுடன் சனி சேர்ந்தால் , பார்த்தால் சொத்து தகராறு நரம்பு சம்பந்தமான வியாதி , பாம்பினால் கண்டம் ஏற்படலாம்.
  • ராகு , கேதுக்கள் செவ்வாயுடன் சேர்ந்தால் , செவ்வாய் பார்வை பெற்றால் , சகோதர பகை , எதிர்பாராத கண்டம் , உடலில் தொடர்ந்து உபாதையும் , கடவுள் பக்தியும் ஏற்படும்.
ராகு-கேது பற்றிய அறிய தகவல்கள்
  • சுக்கிரன் பார்வை , சேர்க்கை பெற்றால் ஆவி உலகத் தொடர்பு , பேய் , பிசாசு தொடர்பு மர்ம ஸ்தான நோய் , வாகன கண்டம் , கொலை , காமம் , கற்பழித்தல் , சூதாடல் மறைமுக சூழ்ச்சிகள் , துப்பு துலக்குதல் , போன்ற பலன்.
  • சூரியனின் பார்வை சேர்க்கை இருப்பின் தந்தை நலிவு – ஆண்மைக் குறைவு – ஆன்ம பல குறைவு.
  • சந்திரன் பார்வை சேர்க்கை பெற்றால் நீங்காத மனத்துயரம் முகத்தில் வியாதி , தாய்க்கு கண்டம்.
  • புதன் சேர்க்கை , பார்வை இருப்பின் குழப்பமான நிலை – பிரமை பிடித்து செயல்படுதல் – சித்த பிரமை காண வாய்ப்பு உண்டு.
  • குரு சேர்க்கை , பார்வை இருப்பின் புத்தி தடுமாற்றம் , புத்திரர் சேதம் , குறை பிரசவம் முதலியன ஏற்படும்.
  • சிம்மம் , ரிசபம் , கடகம் , கன்னி , ராசிகளில் , ராகு இருந்தால் யோக பலன்கள் உண்டு.
  • மேசம் – ரிசபம் , கடகம் ராகு இருப்பின் எல்லா பீடைகளும் விலகும் . (கால விதானம் )
  • மகர ராசியில் ராகு , கடக ராசியில் கேது இருப்பது , பெரும்பாக்கியமாகும் . வாழ்நாளில் எவ்வனவு கஷ்ட , நஷ்டங்கள் அனுபவித்த போதும் பெருத்த தனவான் ஆவது உறுதி.
  • ராகு , கேது நின்ற வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற வேண்டும் ராகு , கேதுவிற்கு கேந்திர திரிகோணம் பெற்று இருப்பது ஏதோ ஒரு துறையில் சிறப்பு பெற்று , அரசராக , மந்திரியாக , பெரும் தனவானாக , பெரும் புகழ் கொண்டவராக இருப்பர்.
  • மிதுன ராகு , புனர்பூசத்தில் இருந்தால் பெரும் யோகத்தை தந்து உள்ளது . இது அனுபவத்தில் கண்ட உண்மை.
  • தனுசு-கேது , கும்ப கேது , சிம்ம ராகுவும் பெரும் யோகத்தை தந்துள்ளது , இதுவும் அனுபவத்தில் சரியாக உள்ளது .
  • குருவுடன் கேது சேர்ந்து நிற்க , இவர்களுக்கு பத்தா மிடத்தில் சுக்கிரன் நிற்க , சனி ஐந்து அல்லது ஆறாமிடத்தில் இருந்தால் பெருத்த ராஜயோகத்தையும் பெரிய பதவி களையும் தரும்.
  • ராகு ஸ்தானத்திற்கு 5மிடத்தில் சனியும், ராகு நின்ற ஸ்தானாதிபதியும் , வளர்பிறைச் சந்திரனும் , சுக்கிரனுக்கு பத்தாமிடத்தில் இருந்தால் பெருத்த ராஜயோகத்தையும், பெரிய பதவிகளையும் தரும்.
  • ராகுவும் , குருவும் சேர்ந்து கேந்திரஸ்தானத்தில் இருக்க , அவர்கள் இருந்த ஸ்தானாதிபதி கேந்திரத்தில் இருந்தாலும் , குருவும் , இராசி நாதனும் கேந்திரத்திலிருந்தாலும் அந்த ஜாதகர் பாக்கிய யோகத்தை அனுபவிப்பார்.
  • குருவுடன் ராகு சேர அல்லது 1 , 4,7,10 – எனும் கேந்திரங்களில் இருக்க அவர்களுக்கு இரு புறமும் இருந்த கிரகங்கள் கேந்திரம் பெற்று இருப்பினும் அல்லது , குரு ஜெனன லக்கினாதிபதி இவர்கள் கேந்திரம் பெற்றிருந்தாலும் , அந்த ஜாதகருக்கு நல்ல பாக்கிய யோகம் அமையும்.
  • ராகுவுடன் ஒரு கிரகம் சேர்ந்து நிற்க , அவர்களுக்கு இரண்டு பக்கத்திலும் மற்ற கிரகங்கள் இருந்தால் மகாராஜ யோகம் , பலரும் புகழ் , பாராட்டும்படியான மேன்மையான யோகத்தை அனுபவிப்பான்.
  • குருவுடன் , ராகு சேர்ந்திருக்கும் ஸ்தானத்திற்கும் 4 , 7 , 8 – ம் இடங்களில் 2-மிடத்ததிபதி உச்சமாயிருந்தால் , பெரிய ராஜயோகத்துடன் உரிய பதவிகளும் கிடைக்கும்.
  • ராகு நின்ற ஸ்தானத்திற்கு ஐந்தாமிடத்தில் 5 கிரகங்கள் சேர்ந்திருந்தால் , மகா சாமர்த்தியத்துடன் ராஜ யோகத்தையும் , பெரிய பதவியையும் அடைவான்.
  • சனியும் , செவ்வாயும் சேர்ந்து சந்திரனுக்கு 7 – மிடத்தில் நிற்கவும் , சூரியனும் , ராகுவும் இவர்களுக்கு நாலாமிடத்திலிருக்க ; குருவும் சுக்கிரனும் , சந்திரனுக்கு 6 , 8 – மிடங்களிலிருந்தால் , இந்த ஜாதகனுக்கு எந்தக் காலத்திலும் யோகம் இல்லை.
  • ராகு நின்ற ஸ்தானத்திற்கு லாபஸ்தானத்தில் குரு நிற்க ; சுக்கிரனுக்கும் ராகுவுக்கு 3 – ல் நிற்க , ராகுவுக்கும் 7 ல் புதன் நிற்க . இப்படி அமைந்த ஜாதகருக்கு சகல செல் வமும் போய்விடும்.
  • சந்திரன் நின்ற ராசிக்கு இருபுறமும் பாபக்கிரகங்கள் இருந்தாலும் , ராகுவுக்கு 8 – மிடத்திற்கு இருபுறமும் பாபக் கிரகங்கள் இருந்தாலும் , எவ்வளவு இராஜயோக ஜாதகரானாலும் பாக்கியத்தை அனுபவிக்க முடியாதபடி கண்டம் ஏற்படும் .

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular