Rasi Palan Today-29.12.2021

மேஷம்-Mesham
இன்று உங்களது பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர், உறவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன், பொருள் சேரும். மொத்தத்தில் உழைப்பால் உயரும் நன்னாள். இந்நாள்.
ரிஷபம்-Rishabam
செயல்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். உறவினரால் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும். அலைச்சல் அதிகம் காணப்படும் என்பதால் எதையும் நீங்கள் திட்டமிட்டுச் செய்யுங்கள்.
மிதுனம்-Mithunam
சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை சிலர் மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கடகம்-Kadagam
குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மை கள் உண்டாகும் நாள்.
சிம்மம்-Simmam
இன்றைய தினம் உங்களுக்கு உடல் அசதி ஏற்பட இடம் உண்டு. பேச்சில் நிதானம் தேவை. சூரியனின் சஞ்சாரத்தால் அலைச்சல் இருந்தாலும் கூட முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கப்பெறும். சூழ்நிலைகளை அனுசரித்து வெல்ல வேண்டிய தினம் இன்று. எனினும் அலைச்சல் இருந்தாலும் இறுதியில் வெற்றியும் உண்டு.
கன்னி -Kanni
இந்த நாளை பொறுத்தவரையில் நாளின் முற்பகுதி சுபச் செலவுகளை தந்தாலும் கூட பிற்பகுதியில் நன்மைகள் கூடும். அனைத்து விதத்திலும் ஏற்றம் தரும் நல்ல நாளாக இந்த நாள் இருக்கும். எதிரிகளின் பலன் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். பெண்கள் பேச்சில் மட்டும் நிதானத்தை கடைபிடியுங்கள். தொழில் – வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகஸ்தர்கள் பிறர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். மொத்தத்தில் நாளின் இறுதியில் சோதனைகளைக் கடந்து சாதனை படைப்பீர்கள்.
துலாம்-Thulam
ஆழ்ந்து யோசித்து தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு மனைவி வழியில் பக்க பலமாக இருப்பார்கள். வாகன ரீதியாக சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.
தனுசு-Thanusu
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.
மகரம்-Magaram
குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். புது பொருள் சேரும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
கும்பம்-Kumabm
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.
மீனம்-Meenam
அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களை உங்களுடன் ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் எதிலும் கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.