Rasi Palan Today-06.01.2022
மேஷம்-Mesham
புதிய முயற்சிகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களை சரியாகப் பயன்படுத்தி கொள்வீர்கள். அரசு காரியங்கள் வெற்றியடையும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் சம்பாதிப்பீர்கள் உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்-Rishabam
குடும்பத்தில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம்-Mithunam
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். சிறப்பான நாள்.
கடகம்-Kadagam
எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. மொத்தத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். கோபத்தை குறைத்து நிதானத்தை மேற்கொள்ளுங்கள்.
சிம்மம்-Simmam
உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
கன்னி -Kanni
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். பிரச்சினைகளுக்கு யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
துலாம்-Thulam
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்-Viruchigam
குடும்பத்தினர் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமா வார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
தனுசு-Thanusu
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மகரம்-Magaram
சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசிசாதிப்பீர்கள். பிள்ளைகளால்உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம்வரும். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றிஅடையும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் கௌரவம் கிடைக்கும் நாள்.
கும்பம்-Kumabm
ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
மீனம்-Meenam
உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நல்லன நடக்கும் நாள்.