Rasi Palan Today-01.02.2022
மேஷம்-Mesham
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். அமோகமான நாள்.
ரிஷபம்-Rishabam
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வேற்று மதத்தவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
மிதுனம்-Mithunam
வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
கடகம்-Kadagam
பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.
சிம்மம்-Simmam
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
கன்னி -Kanni
எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன் புரோக்கரேஜ் வகையால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதரவு கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்-Thulam
கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.
தனுசு-Thanusu
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்க ளுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
மகரம்-Magaram
இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களு டைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதா யம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
கும்பம்-Kumabm
பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மன திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.
மீனம்-Meenam
கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசியல் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியமுடன் செயல்படும் நாள்.