Tuesday, May 21, 2024
Homeஆன்மிக தகவல்மோட்சம் தரும் பிரத்தியங்கிரா தேவி

மோட்சம் தரும் பிரத்தியங்கிரா தேவி

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மோட்சம் தரும் பிரத்தியங்கிரா தேவி

நரசிம்பருக்கும் , சரபருக்கும் இடையே உக்கிரமாக சண்டை ஏற்பட்ட போது கண்ட பேருண்டம் என்ற பட்சியின் உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார் . கண்ட பேருண்டம் சரபப் பட்சிக்கு எதிரியாகும் .

சரபருக்கு கோபத்தில் அவர் நெற்றிக்கண்ணில் இருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள்.இவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கி விட்டாள். சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும் . சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவிகள்.இவர்கள் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர் .

பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியே தான். சரபமூர்த்தி நாசிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக ‘ உக்ரா ‘ என்று அழைக்கப்படுகிறாள் .

பிரத்தியங்கிராவுக்கு ஆயிரம் முகங்கள். இம்முகம் எல்லாம் சிங்க முகம் போலவே இருக்கும்.இரண்டாயிரம் கைகள் , பெரிய சரீரம் , கரியநிறம் , நீள ஆடை இப்படி தியானித்து உபாசித்தால் நாட்டுக்கோ , மக்களுக்கோ சத்ரு பயம் ஏற்படாது . தக்ஷயக்ஞத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்தியங்கிரா தான்.

இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்று விட்டால் , அந்த ராமலட்சுமணர்கள் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித் நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான் . தன்னை உபாசிப்பவன் நல்லவனா , கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள்.

பிரத்தியங்கிரா தேவி
பிரத்தியங்கிரா தேவி

பிரத்தியங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்து விட்டு மறுவேலை பார்த்தார் .

பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள்.எந்த காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும்.

பைரவி : சிவலீலைகளில் ஒன்று அந்தகன் பைரவ மூர்த்தியாக என்ற அசுரனை சிவபெருமான் வதம் செய்தது . சிவபெருமான் பைரவரை அழைத்து அந்தகனுக்கு அந்திய காலத்தை கொடுக்கும் ரகசியத்தை சொல்லி அனுப்பி னார்.பைரவர் அந்தகனை சம்ஹரித்துத் திரும்பி வருகிறார்.பைரவரின் பத்தினி என்பதால் பைரவி என்ற பெயரும் உண்டு .

மங்கள் ரூபிணி : ஒன்றை விரும்பி ஒன்றை வெறுப்பது என்ற எண்ணம் இருந்தால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.எல்லாவற்றிலும் சரி , சமத்துவமான எண்ணம் ஏற்பட்டால் தான் ஞானத்தை அடைய முடியும்.

காளியை தாமசி என்கிறது தேவி மகாத்மியம் . மோட்சம் என்பது இவளது கிருபையாலேதான் கிடைக்கிறது . மோட்சம் அடைவது என்றால் ஏதோ இறந்த பின்பு கிடைப்பது என்பதில்லை .

இவள் அருள் இருந்தால் உயிருள்ளபோதே மோட்ச நிலை கிடைக்கும் . இதற்கு ‘ உன்மனீ நிலை ‘ என்பர் .

பிரத்தியங்கிராவின் தயவு இருந்தால் இத்தகைய உன்மனீ நிலை எளிதில் ஏற்படும்..

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular